HomeBreaking Newsசென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த வேண்டுமா? நாளை ஏலம் நடைபெறவுள்ளது.

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த வேண்டுமா? நாளை ஏலம் நடைபெறவுள்ளது.

-

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த விரும்புகின்றவர்கள் நாளை மாலை 2 மணிக்கு விண்ணப்பம் கொடுத்து 3 மணிக்கு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு 2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு 4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு 5.60 லட்சம், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு 3 லட்சமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். நாளை மாலை 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயம் அருகில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை திருவல்லிக்கேணி கூட்டுறவு துறையினர் உயர்நீதிமன்ற உத்தரவின் படி  அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

MUST READ