- Advertisement -
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுபாடு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமயல் கேஸ் உள்ளிட்ட எரிபொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள்கள் கிடைக்கும் எனக் கூறியுள்ள இந்நிறுவனம், பொதுமக்கள் தெவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என்றும், பெட்ரோல், டீசலை தேவைக்கு அதிகமாக வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


