HomeBreaking Newsகவின் ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி.... 'கிஸ்' பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

கவின் ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி…. ‘கிஸ்’ பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

கவின் நடிக்கும் கிஸ் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.கவின் ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி.... 'கிஸ்' பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் கவின் சின்னத்திரையில் பணியாற்றும்போதே தனக்கென பல ரசிகர்களை சேகரித்து வைத்தவர். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு தற்போது ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இது தவிர கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் கவின், நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவின் ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி.... 'கிஸ்' பட முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜென்மார்ட்டின் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த படமானது ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அதன்படி இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் பிரபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தது வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ