spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsகவின் நடிக்கும் 'கிஸ்'.... அனிருத் குரலில் வெளியான முதல் பாடல்!

கவின் நடிக்கும் ‘கிஸ்’…. அனிருத் குரலில் வெளியான முதல் பாடல்!

-

- Advertisement -

கவின் நடிக்கும் கிஸ் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.கவின் நடிக்கும் 'கிஸ்'.... அனிருத் குரலில் வெளியான முதல் பாடல்!

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். இவர் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்து லிஃப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதன்படி கடைசியாக கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து கவின், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் படத்தையும், விஷ்ணு எடாவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் இணைந்து ப்ரீத்தி அஸ்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜென் மார்ட்டின் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

we-r-hiring

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அனிருத் குரலில் உருவாகியுள்ள ‘திருடி’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆஷிக் ஏ.ஆர். இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ