HomeBreaking Newsமூத்த திரைப்படப் பத்திரிகையாளர் பொம்மை சாரதி காலமானார் – 93 வயதில் மறைவு!

மூத்த திரைப்படப் பத்திரிகையாளர் பொம்மை சாரதி காலமானார் – 93 வயதில் மறைவு!

-

- Advertisement -

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், சுமார் 85 ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்படத் துறையுடன் தொடர்பில் இருந்து சேவையாற்றியவருமான பொம்மை சாரதி (93) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் பத்திரிகைத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூத்த திரைப்படப் பத்திரிகையாளர் பொம்மை சாரதி காலமானார் – 93 வயதில் மறைவு!

பத்திரிகைத் துறையில் தனது பயணத்தை ‘பேசும்படம்’ இதழின் துணை ஆசிரியராகத் தொடங்கிய பொம்மை சாரதி, பின்னர் ‘பொம்மை’ மற்றும் ‘மங்கை’ ஆகிய இதழ்களின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் துறையின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து, நீண்டகாலம் திரைப்படப் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

MUST READ