spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்...

3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்…

-

- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற  ஏர் இந்தியா பயணிகள் விமானம் சிறிது தூரத்தில் கீழே விழுந்து விபத்து எற்பட்டது.3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்... 133 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர்  ரக  பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு  லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து 1.20 மணியளவில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் 3000 அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்திருக்கலாம் என்று  கூறப்படுகிறது. பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முழுவதுமாக தீ பிடித்து எரிந்தது. இந்த தீயானது கொழுந்துவிட்டு வானுயர கரும்புகையை ஏற்படுத்தி வருகிறது.3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்... இந்த தீயை அணைக்கும் பணியில் சிரமம் இருப்பதால் தீயணைப்பு வீரா்களுக்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது.  விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகா் எனும் மக்கள் குடியிருப்புக்ள அதிகம் உள்ள இடத்தில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 ஊழியர்கள் மற்றும் 242 பேர் இந்த விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சுமார் 90 மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.3000 அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்... ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  242 பேரின் கதி என்ன? உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்நிலையில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், குஜராத்தில் ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானது குறித்து மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சா் அமிா்ஷா ஆலோசனை மேற்க் கொண்டுள்ளாா். விமானம் விபத்துள்ளான பகுதிக்கு விமான போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளாா்.

நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

we-r-hiring

 

MUST READ