HomeBreaking Newsஇன்று மாலை வெளியாகும் 'விடாமுயற்சி' ட்ரெய்லர்.... புதிய போஸ்டர் வெளியீடு!

இன்று மாலை வெளியாகும் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர்…. புதிய போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இன்று மாலை வெளியாகும் 'விடாமுயற்சி' ட்ரெய்லர்.... புதிய போஸ்டர் வெளியீடு!

அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்டன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தடையறத் தாக்க, தடம் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தினை சுபாஸ்கரன் தயாரித்திருக்கிறார். அனிருத்தின் இசையிலும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும் சவதீகா எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இன்று மாலை வெளியாகும் 'விடாமுயற்சி' ட்ரெய்லர்.... புதிய போஸ்டர் வெளியீடு!அடுத்தது இந்த படத்தின் ட்ரைலர் இன்று (ஜனவரி 16) வெளியாகும் என படக்குழு நேற்றே அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை 6.40 மணி அளவில் வெளியாகும் என புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் ரேஸில் இருந்து விலகிய விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் ட்ரெய்லருடன் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ