Homeசெய்திகள்அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 3 நாட்கள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

உடல், மன ரீதியாகத் துன்புறுத்தக் கூடாது

we-r-hiring

போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், விசாரணைக் காலத்தில் அன்பில் மகேஷை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ போலீசார் துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவருக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை காவல்துறை முறையாகச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததும், நவம்பர் 2-ம் தேதி மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைக் காலத்தில் தினமும் அன்பில் மகேஷை அவரது வழக்கறிஞர் சந்திக்கவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி அனுமதி வழங்கியுள்ளார்.

MUST READ