spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபோட்டுடைத்த அமித்ஷா! திக்கு தெரியாமல் எடப்பாடி! ஸ்டாலின் ரூட் க்ளியர்!

போட்டுடைத்த அமித்ஷா! திக்கு தெரியாமல் எடப்பாடி! ஸ்டாலின் ரூட் க்ளியர்!

-

- Advertisement -

அதிமுக கட்சியின் பெயரிலும், கொடியிலும் தான் அண்ணா இருக்கிறார். ஆனால் முடிவுகளை எல்லாம் அமித்ஷா தான் எடுக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

கூட்டணி ஆட்சி குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பாஜகவை எதிர்க்கிறோம். நாங்கள் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். பாஜக உடன் எந்த காலத்திலும், எந்த விஷயத்திலும்  உடன்பாடு இல்லை என்று பிரகடனம் செய்கிறோம். இதில் அதிமுகவின் நிலைமை என்ன? அவர்கள் நிறைய விஷயத்தில் அதிமுக உடன் முரண்பட்டுதான் நின்றாக வேண்டும். ஆனால் உறுதியாக நிற்கிறதா? கட்சியவே, பாஜகவிடம் இருந்து எடப்பாடியால் காப்பாற்ற முடியவில்லையே. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கூடி எடுக்கிற எந்த முடிவையாவது அந்த கட்சி தொடர முடியுமா? தொடர முடிந்ததா? சசிகலா தான் பொதுச்செயலாளர் அதிமுக கூடி தானே முடிவு எடுத்தது. வேறு ஒரு கட்சியில் பொதுச் செயலாளர் என்று ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அந்த பதவியில் அவர் தொடர முடியாத நிலை ஏற்பட்டதா? ஆனால் அந்த வினோதத்தை அதிமுகவில் பார்த்தோம். கேட்டால் அவர் சிறைக்கு போய்விட்டார் என்பார்கள். ஜெயலலிதாவும் தான் சிறைக்கு போனார். திரும்பி வரும்போது அந்த பதவியை தூக்கிவிட்டார்களா? ஏன் அந்த பதவியில் சசிகலாவால் தொடர முடியாமல் போனது. யாரால் போனது? பாஜகவுக்கு, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக வருவதில் விருப்பம் இல்லை. பாஜகவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை அதிமுகவே எடுத்தாலும் அது தொடர முடியாது.

முதலமைச்சராக இவரை தேர்வு செய்திருக்கிறோம் என ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களும் கையெழுத்து போட்டு ஆளுநரிடம் போய் கொடுத்தார்கள். ஆனால் சசிகலாவால் முதமைச்சர் ஆக முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் ஒவ்வொரு முடிவுகளை எடுத்தது அதிமுக அல்ல. அதிமுகவே ஒரு எடுத்திருந்தாலும், அது பாஜகவுக்கு பிடித்திருந்தால் தொடரலாம். பிடிக்காவிட்டால் தொடர முடியாது. அடுத்து டிடிவி தினகரன். அவரையும் பாஜகவுக்கு பிடிக்கவில்லை. ஓபிஎஸ்-ஐ தனியாக கையில் எடுத்து பண்ணினார்கள். அதன்பிறகு இபிஎஸ்-ஐ கையில் எடுத்து பண்ணினார்கள். ஆட்சியை முழுக்க 4 ஆண்டுகளும் பாஜக தான் நடத்தியது. அந்த 4 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா மறுப்பு தெரிவித்த நீட் தேர்வு, உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளித்தனர். வேளாண் சட்டம், முத்தலாக் சட்டம், சிஏஏ போன்ற சட்டங்களுக்கு ஆதரவு அளித்தனர். அதிமுகவின் முடிவை பாஜக எடுத்தது. எடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது அதன் தொடர்ச்சி தான், இன்றைக்கு அமித்ஷாவின் பேட்டியாகும்.

eps

இடையில் எடப்பாடி பழனிசாமி பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு நம்மால் தனித்து நிற்க முடியுமா? என்று பார்த்தார். அவரால் நிற்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அவரே தனித்து நின்றாலும் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனை கையில் எடுத்து, பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். செங்கோட்டையன் 4 முறை டெல்லி போய்விட்டு வந்தார். எடப்பாடியின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிட்டது. சசிகலா, அதிமுகவை அனைத்து தரப்பினருக்காக கட்சியாக நடத்தினோம். இன்றைக்கு ஒரு பிரிவினருக்கான கட்சியாக சுருங்கிவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். இப்படிபட்ட சூழலில் இன்னும் ஒரு பிளவு ஏற்பட்டால்? அதிமுக என்னாகும் என்கிற அச்சத்தில் எடப்பாடி அமித்ஷாவிடம் சென்று கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதுவும் எடப்பாடி அறிவிக்கவில்லை. அமித்ஷா, எடப்பாடி தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். இன்றைக்கு அந்த அமித்ஷா எடப்பாடி என்கிற பெயரை கூட சொல்ல மறுக்கிறார். என்.டி.ஏ கூட்டணி ஆட்சி. அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் என்று அமித்ஷா சொல்கிறார். அப்போது எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் கிடையாதா?

திராவிடத்தை ஒழிப்பதற்கான மாநாடு என்று சொல்லி தான் இந்து முன்னணி அழைத்தது. அதை தெரிந்துதான் அதிமுகவினர் போய் அமர்ந்தார்கள். ஆர்எஸ்எஸ் எப்படிபட்ட அமைப்பு என்று தெரியாமலா வேலுமணி போய்விட்டார். தெரிந்துதானே போனார். அப்போது இவர்கள் எல்லாம் நடித்துக்கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு இடர் வந்தாலும் கொள்கையை விட மாட்டாராம் எடப்பாடி. என்ன கொள்கையை நீங்கள் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறீர்கள்?. எல்லாவற்றையும் தான் விட்டுக்கொடுத்து விட்டீர்களே. உங்கள் கட்சியின் பெயரிலும், கொடியிலும் தான் அண்ணா இருக்கிறார். ஆனால் முடிவுகளை எல்லாம் அமித்ஷா தானே எடுக்கிறார். உங்கள் முன்பாகவே அண்ணாவை, பெரியாரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிடுகிறார்கள். அதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கூட்டம் முடிந்து வந்த பிறகாவது எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டாமா? தமிழகம் முழுவதும் கொந்தளித்த பிறகு, அம்பலப்பட்ட பிறகு, இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்கிறீர்கள். அண்ணாவை, பெரியாரை விமர்சித்து தீர்மானம் போடுவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? தெரியாமல் போனேன் என்று சொன்னால் அது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். பாஜகவின் மிரட்டலுக்காக, பாஜக உடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்கிற நெருக்கடி காரணமாக அங்கே போய் உட்கார்ந்து கொண்டு, கடைசியில் விமர்சனம் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

விஜய் கட்சி அறிவித்தாரே தவிர தற்போது வரைக்கும் அவர் களத்திற்கே வரவில்லை. ஒரு நடிகை சொல்கிறார், ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படம் அல்ல. தேர்தல் முடிவுகளை பொறுத்து அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்று தன்னிடம் சொன்னதாக கூறுகிறார். அப்போது விஜயிடமே ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லை என்று தானே அர்த்தம். தற்போது அம்பலப்பட்டு போய்விட்டது. இதுவரைக்கும் விஜய் களத்திற்கு வரவில்லை. அவர் ஒரு படத்திற்கு ஒப்புக்கொண்டார் என்றால் 6 மாதம் கால் ஷீட் கொடுப்பார். அதேபோல் ஒரு படத்திற்கான கால்ஷீட்டை தமிழ்நாட்டிற்கு கொடுத்திருக்கிறார். இந்த 6 மாத காலம் படத்தில் நடிப்பது போல, தமிழ்நாட்டின் வீதிகளில் வந்து நடிப்பார். அது வெற்றி அடைந்தால், அந்த நடிப்பை நிறுத்திவிட்டு இந்த நடிப்பை தொடர்வார். இது தோல்வி அடைந்தால், இந்த நடிப்பை விட்டுவிட்டு அந்த நடிப்பிற்கு போய்விடுவார். அந்த நடிகையின் கருத்துக்கு இதுவரை மறுப்பு விஜய் தரப்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை. அந்த விஜயை வைத்து இங்கு என்ன படம் பிடிப்பது. அந்த விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார் என்றால்? எங்களுக்கு வேலை மிச்சமாகும்.

MUST READ