spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!

விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!

-

- Advertisement -

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4 அணிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 90 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக செயற்குழுவில் நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்களின் பின்னணி அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது என்று விஜய் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். த.வெ.க-வின் முதல் மாநாட்டில் சொன்னதைதான், கொஞ்சம் உறுதியாக சொல்லியுள்ளார். தவெக மாநாட்டில் விஜய் பேசியதற்கு பிறகு, சில நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை போன்றவற்றை வைத்து பார்க்கிறபோது, எடப்பாடி என்கிற வார்த்தையை சொல்ல தயங்குகிற அமித்ஷாவே அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கிறார். அப்படி இருக்கின்றபோது அதிமுக தலைமையிலான அணி என்கிற வார்த்தையை விஜய் ஏன் சொல்ல தயங்குகிறார்?

திமுக, அதிமுகவை போல சுய லாபத்திற்காக நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விஜய் சொல்கிறார். அது விமர்சனமாகும். நான் யாரோடும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஒரு அறிவிப்பை முன்வைக்கிறீர்கள். திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொல்கிறீர்களே, அதிமுக எங்கே போனது?. நடைபெற உள்ளது சட்டமன்றத் தேர்தல். அந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணி அமைந்துள்ளது. அந்த அதிமுக தலைமையிலான அணியில்தான் பாஜக இணைந்துள்ளளது. அதிமுக தலைமையில்  ஒரு அணி அமைந்த பிறகு ஏன் அதிமுக என்கிற பெயரையே சொல்ல மாட்டேன் என்கிறார் என சந்தேகம் உள்ளது.

விஜய்க்கு என் முழு ஆதரவு உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

என்றென்றைக்கும் திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்கிறார். ஒருவேளை எதிர்காலத்தில் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்கிற கதவை லேசாக அவர் திறந்துவைத்துள்ளார். அப்போது ஒருவேளை பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனித்து இருந்தால் அதனுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று விஜய் மறைமுகமாக சொல்கிறாரா? எந்த காலத்திலும் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொன்னாரா?  நீங்கள் கூட்டணியில் உள்ள ஒரு சிறிய கட்சியான பாஜகவை சொல்கிறீர்களே. ஏன் அதிமுகவை சொல்லவில்லை. இதனால் விஜய் எதற்கும் தயாராக உள்ளாரோ என்று சந்தேகம் இருந்தது. அதற்கு தடையாக அவர்கள் போட்ட தீர்மானமே உள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று அறிவிக்கிறார்கள். எந்த கட்சியின்  செயற்குழு, பொதுக்குழுவிலும் எடுத்த முடிவுகளின்படி யாரும் உறுதியாக இருந்தது கிடையாது. விஜய், அதிமுகவுக்கு கூட்டணி வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதன் மூலம், தேர்தல் நெருங்குகிறபோது அவர் எந்த முடிவும் எடுக்கலாம்.

இதே விஜய்தான் முன்பு மக்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார் என்று சொன்னார். மக்களின் நன்மைக்காக நான் முதலமைச்சர் பதவியை கூட துறக்க தயாராக உள்ளேன் என்று கூறிக்கொண்டு விஜய் நேரடியாக அதிமுக அலுவலகத்திற்கு வந்துவிடுவார். அதை மறுக்க முடியாது என்று சொல்கிறேன். அதிமுக அணிக்கு விஜய் வந்தாலும் எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார். விஜய் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியாது. நிர்பந்தம் காரணமாக எடப்பாடி முதலமைச்சர் பதவியை விஜய்க்கு விட்டுக் கொடுத்தார் என்றால் அது அன்றைக்கே தோல்வி கூட்டணியாக மாறிவிடும்.

ஒரு பத்திரிகையாளராக பார்க்கும்போது, ஒரு புதிய இயக்கம், வளர வேண்டிய ஒரு இயக்கம் முதல் தேர்தலில் தனித்து நிற்பது தான் சரியானது. தான் யார்? தன்னை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? எத்தனை பேர் வருகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கான அற்புதமான ஒரு வாய்ப்பு ஆகும். இந்த வாய்ப்பை விஜய் தவறவிடக் கூடாது. விஜய்க்கு நிச்சயமாக பதவி ஆசையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சொல்வது பம்மாத்து வேலையாகும். நாமும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும் என்கிற அரசியல்வாதிக்கே உரிய நியாயமான எதிர்ப்பார்ப்பாக கூட இருக்கலாம். ஆனால் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டு வந்து நிற்கிறேன் என்று சொல்வது விஜய் போடுகிற வேஷமாக தான் பார்க்கிறேன். அந்த வார்த்தை பொருந்தவில்லை.

விஜயின் பேச்சு எதை காட்டுகிறது என்றால்? அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிற வரை, அந்த அணிக்கு நான் போக மாட்டேன் என்கிற மெசேஜ் அதில் அடங்கியுள்ளது. அதனால்தான் பாஜக மீதான விமர்சனத்தை கூர்மைப்படுத்துகிறார். கூடுதல் வாசகங்களை போட்டு. நீங்கள் அந்த அணியில் தொடர்கிற வரை, அந்த அணியில் நான் சேர மாட்டேன் என்கிற மெசேஜை எடப்பாடிக்கு சொல்கிறார் என்றுதான் நான் பார்க்கிறேன்.

ஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால்,  திமுக கூட்டணியில் வருந்தங்கள் வந்து அது வெடித்து சிதறினால், அதில் உள்ள கட்சிகள் அங்கு போகும். மற்றபடி அதிமுக கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள். இன்னும் கூட்டணி அறிவிக்காமல் உள்ளது பாமகவும், தேமுதிகவும்தான். தேமுதிகவை பொறுத்தவரை வெற்றி பெறும் அணியை தான் பார்ப்பார்கள். அவர்கள் விஜயை மூன்றாவது வாய்ப்பாக தான் பார்ப்பார்கள். திமுக கூட்டணிக்கு பாமக வர வாய்ப்பிருந்தால், அங்கே கொடுப்பதற்கு இடங்கள் கிடையாது. தேமுதிகவுக்கு வாய்ப்பு இருக்கிறது. பிரேமலதா ஜனவரியில் முடிவை அறிவிப்பதாக சொல்கிறார்.

என்னை பொருத்தவரை தவெக உடன் வலுவான கட்சி கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதுதான் விஜய்க்கு நல்லது. சிறிய சிறிய கட்சிகளை சேர்த்துக்கொண்டு 200 தொகுதிகளில் விஜய் தனியாக நின்றார் என்றால், வளர்கிற கட்சிக்கும், விஜயின் எதிர்காலத்திற்கும் அது மிகவும் நல்லதாகும். ஆட்சியை பிடிக்க வேண்டாம். ஒரு இடத்தில் கூட வெல்ல வேண்டாம். 20 சதவீத வாக்குகளை வாங்கி தேர்தலை கடந்து வந்துவிட்டார் என்றால்? அவரை சுற்றி கூட்டம் மொய்க்கும். இனிமேல் எடப்பாடியிடம் போக மாட்டார்கள். அதனால் எதிர்கால அரசியலை மையப்படுத்தினார் என்றால் விஜய் தனித்து நிற்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்: முதல்வரின் அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

இன்றைய சூழலில் திமுக அணி, அதிமுக அணி, விஜய் மற்றும் சீமான் என்று 4 அணிகள் நின்றால் 90 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும். விஜய் அறிவித்த பின்னர் தற்போதைய காட்சியை பார்த்தால் திமுக தான்  மீண்டும் ஆட்சிக்கு வருவது போன்ற காட்சிகள் உள்ளன. ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட மக்களின் வாக்குகள் சிதறுகிறபோது, ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு நீடிக்கும் என்கிற அடிப்படையில் தான் இதை சொல்கிறேன், இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

MUST READ