spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவுக்கு 170 தொகுதிகள்! திருமாவின் உறுதியான முடிவு! போட்டுடைத்த வல்லம் பஷீர்!

திமுகவுக்கு 170 தொகுதிகள்! திருமாவின் உறுதியான முடிவு! போட்டுடைத்த வல்லம் பஷீர்!

-

- Advertisement -

விஜய், தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளதன் மூலம் அதிமுகவிடம் தனக்கான டிமாண்டை அதிகரித்துள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாஜக, திமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று விஜய் அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- த.வெ.க செயற்குழுவில் பேசிய விஜய், பாஜக உடன் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்று சொல்கிறார். அவர் தன்னுடைய டிமாண்டை உயர்த்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொல்கிற விஜய் அதில் உறுதியாக நிற்பாரா? என்பது சந்தேகம் தான். விஜய் நிச்சயம் அப்படி நிற்க மாட்டார். அதற்குண்டான எந்த தேவையும் விஜய்க்கு இல்லை.

நாளை தவேகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை

உண்மையிலேயே தன்னுடைய நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக நிற்பார் என்றால்? முருகன் மாநாட்டில் பெரியார் குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டபோது நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏன் விஜயின் குரல் வெளிப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பாஜகதான் சூத்திரதாரி என்று எல்லோருக்கும் தெரியும். பாஜகவின் வியூகங்களை முனை மழுங்க செய்வதற்குதான் அரசு படாதபாடு பட்டது. அந்த இடத்தில் உங்கள் குரல் என்ன என்றாவது? வெளிப்படுத்தி இருக்க வேண்டாமா? அப்போது பாஜக ஒரு விவகாரத்தை கட்டமைக்கின்ற போது, அந்த இடத்தில் விஜயினுடைய கருத்து வெளிப்படாது. அவர் அந்த கருத்தை புறக்கணித்துவிட்டு வேறு பக்கம் சென்றுவிடுவார். இதுவே பாஜக ஆதரவு நிலைப்பாட்டை மெல்ல மெல்ல எடுக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று விஜய் அறிவித்துள்ளார். விஜய், இந்த செய்தியை சொல்வதன் மூலம் நான்கு முனை போட்டிக்கு நான் தயாராகி விட்டேன் என்று சொல்லியுள்ளார். தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு இடையே போட்டி என்றால் எப்போதும் அது இருமுனை போட்டிதான். ஒன்று திமுக. மற்றொன்று அதிமுக. இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.  அதனால்தான் இந்த இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைப்பதற்கு வரிசைக்கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அதேவேளையில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி எப்படி 3 முனை போட்டி என்று சீமான் முயற்சிக்கிறாரோ, அதேபோல் 4 முனை போட்டி என்ற சூழலை உருவாக்க விஜய் தயாராகி உள்ளார்.

விஜய் தன்னுடைய பேச்சில் பாஜக, திமுகவை குறிப்பிடுகிறாரே தவிர அதிமுகவை குறிப்பிடவில்லை. இது அதிமுகவுக்கு அவர் கொடுக்கும் சமிக்ஞையாக பார்க்கிறேன். பாஜக அல்லாத அதிமுகவை ஒரு பிரண்டாக எடுத்துக்கொள்ளலாம் என்பதில் அவருக்கு பின்னால் இருந்து தகவல் சொல்பவர்கள் சரியாக சொல்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக உடன் விஜய் சென்றால் அது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவு ஆகும். ஆனால் விஜய் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க மாட்டார். ஒரே ஒரு அமலாக்கத்துறை அழுத்தம் வந்தால் தனது முடிவில் இருந்து அவர் பின்வாங்குவார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயார்..!! கூட்டணியில் இணையும் புதிய கட்சி… முதல்வர் நச் பதில்…

விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று தானே அறிவித்துக்கொண்டுள்ளார். விஜய் வருவார் என்று எதிர்பார்ப்பது அதிமுக தான். தன்னுடைய பேச்சின் மூலம் அதிமுகவிடம் டிமாண்டை அதிகரித்துள்ளார். அதிமுக முன்பு 25 சீட்டுகள் தர வேண்டும் என்றால் தற்போது 50 சீட்டுகள் தர வேண்டும். சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பை தருகிற ஒரு சூழலை விஜய் ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக நிற்க மாட்டார். பொங்கல் வரைக்கும் தான் இந்த டிராமா எல்லாம். அதன் பிறகு நிறைய காட்சிகளை தமிழ்நாடு பார்க்க வேண்டி உள்ளது. விஜய் தனித்து போட்டியிடுவது திமுகவுக்கு மிகப்பெரிய பலமாகும்.

ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் கண்டிப்பாக ஏற்படும். அப்படி கிடைக்கப் பெறும் வாக்குகளை யார் அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதுதான் தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். திமுக அரசுக்கு எதிராக 25 சதவீத வாக்குகள் உள்ளது என்றால், அதனை முழுமையாக அதிமுக பெற்றால்தான் அவர்கள் வின்னிங் ரேசில் வருவார்கள். அதில் 10 சதவீத வாக்குகளை விஜய் பிரித்துவிட்டார் என்றால், அதிமுகவால் வின்னிங் ரேசில் வர முடியாது. அப்போது அது யாருக்கு பலம்? திமுகவுக்கு லாபம். விஜயின் அறிவிப்பு என்பது தமிழ்நாட்டில் 4 முனை போட்டியை ஜனவரி மாதம் உருவாக்குவற்காக தான்.

அமித்ஷா, நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பேச்சுக்களை தொடர்ந்து கவனித்தால் இங்கே யார் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார்கள் என்பது தெரியும். பாஜக தான் இங்கே கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது.  தொகுதி பங்கீட்டை எடப்பாடி செய்ய முடியாது. அமித்ஷா தான் எடுப்பார். திருமாவளவன் இடையில் ஒரு நிலைப்பாடு எடுத்து டிமாண்ட்டை உருவாக்குவது தான். ஆதவ் அர்ஜுனா மூலம் சில பேச்சுக்கள் திமுக கண்டிப்பது போல வந்தன. அதை அவர் கண்டிப்பது போல கண்டித்தார். விசிகவுக்கு, திமுகவுக்கு ஒரு அழுத்தத்தை தர வேண்டிய சூழல் இருந்தது. அதேவேளையில்,  பாஜவுக்கு, அப்படி ஒரு சூழல் இல்லை. ஏனென்றால் பாஜக சொல்வதைதான் எடப்பாடி செய்ய போகிறார். அவர்கள் கேட்கும் இடங்களை விட குறைவாக எடப்பாடியால் தர முடியுமா?

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

தற்போது இருக்கிற சூழலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் திமுக கூட்டணிதான் பெற்றுள்ளது. பலமான கூட்டணி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுகவினுடைய கொள்கை அரசியல்  ஆகியவை சேர்ந்து திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அப்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏன் விஜயிடம் வர வேண்டும். திமுக 160 முதல் 170 இடங்களில் போட்டியிட்டுவிட்டு எஞ்சிய இடங்களை தான் பகிர்ந்துகொள்ள முடியும். அவர்கள் 130 இடங்களில் போட்டியிட முடியுமா? குறைந்தபட்சம் 135 எம்எல்ஏ-க்கள் இருந்தால்தானே பலமாக அரசை கொண்டு போக முடியும். 135 எம்எல்ஏக்கள் என்பதற்கு அவர்கள் 160 இடங்களில் போட்டியிட  வேண்டிய கட்டாயம் உள்ளது. எஞ்சிய இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கிறது. ஸ்பாய்லர் ஆக சில கட்சிகள் தயாராவார்கள். அப்படி தயாரானார்கள் என்றால் அவர்கள் விஜயை நோக்கி செல்வார்கள். ஆனால் அந்த நிலையை எடுக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என்றுதான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ