spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடி டெல்லி விசிட் ஃபிளாப்! டோஸ் விட்ட அமித்ஷா! அண்ணாமலைக்கு புது அசைன்மெண்ட்!

எடப்பாடி டெல்லி விசிட் ஃபிளாப்! டோஸ் விட்ட அமித்ஷா! அண்ணாமலைக்கு புது அசைன்மெண்ட்!

-

- Advertisement -

அதிமுக போட்டியிடும் இடங்களில், பாதி இடங்களை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு ஆகும். அது இறுதியாகும் வரை எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக மேலிடம் அறிவிக்காது என்று  அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அமித்ஷா உடன் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட் ஒரு ஏமாற்றம் தான். பிரதமர் மோடி, தமிழ்நாடு தொடர்பாக 2 டிவிட்களை போட்டுள்ளார். அதில் எடப்பாடியை குறிப்பிடவில்லை. அமித்ஷா முதலில் எடப்பாடி தலைமையில் கூட்டணி என்று சொன்னார். பின்னர், அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்று சொல்கிறார். பாஜக தலைமையிடம் உள்ள பிரச்சினை என்ன என்றால் எடப்பாடியை முதலமைச்சராக முன்னிறுத்தினால்? கவுண்டர் அல்லாத சமூகத்தினர் வாக்களிக்க மாட்டார்கள் என்று உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலிலேயே அது பல இடங்களில் வாக்குச்சாவடி வாரியாக எதிரொலித்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அது பிரதிபலித்தது. அதேபோல் வன்னியர்கள் அல்லாதவர்களின் வாக்குகளும், எடப்பாடியை முன்னிறுத்தினால் கிடைக்காது என்றும் உளவுத்துறை அறிக்கை போயுள்ளது.

முக்குலத்தோர் வாக்குகளும் அவருக்கு எதிராக உள்ளது. இந்த சூழலில் மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்ததால் நாடார், தேவேந்திரகுல வேளாளர், முத்தரையர் போன்ற சமூகங்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  ஓபிஎஸ், தினகரனை எதிர்கொள்ள அவர் இப்படியான சாதி அரசியலை கையில் எடுத்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் தப்பு தப்பாக அரசியல் செய்து மிகவும் மோசமான நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தென் மாவட்டங்களில் எந்த தப்பினருக்கும் இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்கிற பரிதாப நிலையில் இருக்கிறார்.

எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா சொல்லிவிட்டால் அது அவருக்கு வெற்றி தான். ஆனால் அதை சொல்ல பாஜக மேலிடம் தயாராக இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை நட்சத்திர வழிபாட்டு மாநிலமாகும். காமராஜருக்கு, பெரியார், எம்.ஆர். ராதா போன்றவர்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் என்றால் அவர்தான் என்கிற நிலை இருந்தது. அதேபோல் 1977ல் மூப்பனார் இந்திரா காந்தி பிரச்சாரத்திற்கு வராமலேயே 17 சதவீதம் வாக்குகளை பெற்று, 27 சீட்டுகளை வென்றார். நரசிம்ம ராவுக்கு எதிராக மூப்பனார் செல்கிற போது, அவர்தான் இங்கே காங்கிரஸ் என்று ஆனது. அதேபோல்,  அண்ணாமலை 18 சதவீத வாக்குகள் எடுத்தார். இதில் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் போன்றவர்களின் வாக்குகளை கழித்துவிட்டு பார்த்தால், 10 சதவீதம் வாக்குகள் வரும். அதில் 75 சதவீதம் அண்ணாமலைக்கான வாக்குகளாகும். அண்ணாமலை விவகாரத்தில் குருமூர்த்தி சொன்னது உண்மைக்கு புறம்பானதாகும். அண்ணாமலை கட்சியை விட்டு போனால் அது மோடிக்கு இழுக்கு ஆகிவிடும்.  அப்படியான சூழல் வந்துவிடக்கூடாது என்று அமித்ஷா நினைக்கிறார்.

அண்ணாமலை வலியுறுத்துவது அதிமுகவிடம் மூன்றில் ஒரு பங்கு இடங்களை வாங்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாளிதழ் ஒன்றில் அதிமுகவினரே பாஜக என்ற பெயரில் பொய் செய்தியை பரப்புகிறார்கள். பாஜகவுக்கு 25 இடங்கள் என்று எழுதுகிறார்கள். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கிவிட்டால், மோடியின் பெயர் போய்விடும் என்று அமித்ஷாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரை கட்சியை விட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் 60 இடங்களையாவது வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அண்ணாமலை சொல்வது போல வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக  நிறுத்த வேண்டும். எனவே அவசரப்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் வரை அது தொங்கலில் தான் இருக்கும்.

அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு 20 சதவீதம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் ஸ்டாலினை வீழ்த்த போதாது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் ஸ்டாலினை தோற்கடிக்க முடியாது. அவருக்கு பல்வேறு சமுதாயத்தினரிடம் எதிர்ப்பு உள்ளது. ஸ்டாலின், சாதி சார்பு அற்றவர். அவருக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளன. பாஜகவின் 18 சதவீத வாக்குகளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாக்குகள். எடப்பாடி 2வது இடத்திற்காக தான் போராடுகிறார். அந்த 2வது இடம் போய்விடக்கூடாது என்பதற்காக தான், பாஜகவிடம் கூட்டணி அமைத்துள்ளார். அமித்ஷா அவரை முதலமைச்சர் வேட்பாளராக சொல்லிவிட்டால் எடப்பாடிக்கு அது வெற்றி. அப்படி சொல்லாவிட்டால் இழுபறிதான். எடப்பாடி பின்னடைவோடுதான் டெல்லியில் இருந்து வந்துள்ளார். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

அண்ணாமலை இல்லாத பாஜக எடப்பாடி தலைமையில் 20 முதல் 22 சதவீதம் வாக்குகளுக்கு மேல் வராது. அதிகபட்சம் 25 சதவீதம் கூட வராது. அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேறினால் தேசிய அளவில் மோடிக்கு பின்னடைவாகும். அவர் அப்படி செய்யக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம். ஒருவேளை என்டிஏ கூட்டணியை விரிவாக்கம் செய்ய புதிய முதலமைச்சர் வேட்பாளரை, பலம் நிரூபித்த ஒருவரை முதலமைச்சராக சொல்லலாம் என்று கூட வந்திருக்கலாம். அது என்ன என்று தெரியவில்லை. வரும் நாட்களில் உண்மை தெரிந்துவிடும். நாதக தரப்பில் அமித்ஷா, சீமான் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், எடப்பாடி அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அணியை பெரிதாக்க வேண்டும் என்றால் சீமானுக்கு 50 சீட், முதலமைச்சர் வேட்பாளர். எடப்பாடிக்கு 100 சீட். மற்ற கட்சிகள் இருக்கலாம் என்கிற கருத்தும் பிரதமரிடம் இருந்து முன்வைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி தான் முதலமைச்சர் இல்லாத ஒரு கூட்டணியை எப்படி ஏற்றுக்கொள்வார் என்றும் தெரியாது.

பிரதமரின் ஆட்கள் சீமானை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். குருமூர்த்தி, நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் சீமான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதற்கு பாசிட்டிவ் ஆக இருப்பதாக தகவலை சொல்கிறார்கள். எனவே அணியை பெரிதாக்க இன்னொரு கட்சி தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்கிற கருத்து சொல்லப்பட்டிருக்கலாம். அதனால்தான் எடப்பாடி அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லியுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ