spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅமித்ஷா கையில் Admk Files! எடப்பாடி இனி தப்ப முடியாது! அதிமுக கதை இதோட முடிஞ்சது!

அமித்ஷா கையில் Admk Files! எடப்பாடி இனி தப்ப முடியாது! அதிமுக கதை இதோட முடிஞ்சது!

-

- Advertisement -

ஒன்றிணைந்த அதிமுகவை உருவாக்குவது அமித்ஷா நினைத்தால் சாத்தியமாகும். எனினும் அது பீகார் தேர்தலுக்கு பிறகு டிசம்பரில் தான் தெளிவாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்தும், அதிமுக கூட்டணி விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று அதிகாரப் பூர்வமாக பாஜக தரப்பிலோ அல்லது அதிமுக தரப்பிலோ வெளியாக வில்லை. உட்கட்சி விவகாரம் குறித்து பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அப்போது எது குறித்து பேசினோம் என்று சொல்லி இருக்க வேண்டும்? ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் 4.5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க பாஜக தான் காரணம் என்று முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். கடந்த காலங்களில் இவ்வாறு பேசிய எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். தற்போது முதன் முறையாக அதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பேசியதற்கு மாறாக அவர் பேசுகிறார். அமித்ஷா அழைத்து தான் எடப்பாடி டெல்லியில் சென்று பார்த்துள்ளார். அமித்ஷா வீட்டில் நடைபெற்றது உட்கட்சி விவகாரம் தான். பிரிந்தவர்களை அவர் சேர்க்க சொல்லியுள்ளார்.ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். உடன் சென்றவர்களை உட்கார வைத்துவிட்டு இருவரும் 20 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளனர். தனியாக சந்தித்து பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால் உள்ளே பெரிய அளவில் சிக்கல் இருப்பதாக தான் அர்த்தம்.

தொழிலதிபர் ஒருவருடன் எடப்பாடி பழனிசாமி காரில் சென்றுள்ளார். அவர் யார்? எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடியின் மகன் மிதுன் போயுள்ளார். எதற்காக அவர் போனார்? இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை. அதிமுக – பாஜக உறவில் எதுவும் ஆரோக்கியமாக இல்லை. இந்த கூட்டணியை விட்டு அதிமுக வெளியேற முடியாது. அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். பாஜக நன்றாக காய் நகர்த்துகிறார்கள்.

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்று அதிமுக பெயரளவில் இருக்கும். எவ்வளவு இடங்கள் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறார்கள். உதாரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கிறது என்றாலும் முழுக்க முழுக்க பாஜக கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஒருவேளை பாஜக எம்எல்ஏக்களின் தயவில் ஆட்சி நடைபெறுகிறது என்றால் அவர்களுடைய அட்டூழியம் அதிகமாக இருக்கும்.

ttv dhinakaran

டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியுடன் தான் தொடர்பில் இருந்து வருவதாகவும், தன்னை சமாதானம் செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். டிடிவி இன்றைக்கு கையறு நிலையில் உள்ளார். ஒருவேளை அதிமுக – பாஜக இடையே சமரசம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ மட்டும் ஏற்றுக்கொள்கிறேன். தினகரன், சசிகலாவை ஏற்க மாட்டேன் என்று சொன்னால், அமித்ஷாவை நெருங்கி வந்துதான் ஆக வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் டிடிவி என்ன ஆவார்?. அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய்.

விஜயிடம் சேர நிறைய பேர் முட்டி மோதுகிறார்கள். ஆனால் அங்கே கதவுகள் திறக்க மறுக்கிறது. டிடிவி தினகரன் சொல்வது போல அவருக்கு பாஜக தலைமையிடம் செல்வாக்கு கிடையாது. எவ்வளவு சிக்கல் இருந்தாலும் அதை கூடிய விரைவில் தீர்த்துவிட்டு அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிபடுத்த வேண்டும் என்று தான் பாஜக நினைக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும். அதிமுகவுக்கு அது தெரியும். அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து பாஜக காரியங்களை சாதித்துக்கொள்ளும். பாஜகவின் பேச்சை கேட்டு நடப்பதில் எடப்பாடிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு ஒபிஎஸ், டிடிவி தான் பிரச்சினை.

எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி...நிதி கொடுக்க அவா் தயாரா?- முத்தரசன்

என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். ஆனால் அதை கொடுக்க மாட்டார்கள். என்.டி.ஏ கூட்டணி விரிவாக்கம் என்பது டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுத்தால் கூட்டணி கட்சிகள் தானாகவே விழுந்துவிடுவார்கள். அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்தால் அவர்கள் தானாகவே கூட்டணிக்கு வந்துவிடுவார்கள்.

ஓபிஎஸ் விஷயத்தை தீர்க்காமல் எடப்பாடிக்கு எதிர்காலம் கிடையாது. பாஜக வரும் டிசம்பர் மாதம் வரை காத்திருப்பதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தொடர்பாக பாஜக மேலிடத்தில் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஏதோ கதையை அளந்துவிட்டு செல்கிறார். உண்மையில் என்ன நடைபெற்றது என்று நமக்கு தெரியாது. நவம்பரில் பீகார் தேர்தல் முடிவுற்ற உடன் பாஜகவின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பும் அப்போதுதான் அனைத்தும் ஒரு முழுமையான வடிவத்திற்கு வரும். அதுவரை அவர் அவர் பிடித்ததை பேசி கொண்டிருப்பார்கள்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியிடம் தான் வந்தாக வேண்டும். அவர்களுக்கு நிறைய நிர்பந்தங்கள் இருக்கின்றன. அமித் ஷாவிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு போதும். அவர் சொல்வதை கேட்டுவிடுவார்கள். பிரச்சினை எடப்பாடி சமாதானப்படுத்துவது தான். இவ்வளவு தூரம் செய்தவர்கள், அதையும் செய்துவிடுவார்கள் என்று தான் நினைக்கிறேன். எடப்பாடி பழனிசாமியிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவரை பாஜக இழக்காது. முன்னாள் அமைச்சர்களை தூண்டிவிட்டு எடப்பாடியை கவிழ்த்துவிடுவார்கள் என்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் 6 முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். ஆனால் செங்கோட்டையன் மட்டும்தான்  அது குறித்து வெளியே பேசினார். மற்றவர்கள் வாயை திறக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. அதை எதிர்த்து வேலுமணியை வைத்துவிட முடியாது. எனவேதான் பாஜக மேலிடம் எடப்பாடியை வைத்தே எல்லாவற்றையும் சாதிக்கலாம் என பார்க்கிறார்கள். பீகார் தேர்தலுக்கு பின்னர் அமித்ஷா பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்புகிறபோது, எல்லோரும் வருவார்கள். என்னை பொருத்தவரை ஒன்றிணைந்த அதிமுகவை அமித்ஷா உறுதிபடுத்த சாத்தியம் உள்ளது. டிசம்பரில் அது தெளிவாகலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ