spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைலேப்டாப் உடன் வந்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையர்! பீகார் மேடையில் பதறிய அமித்ஷா!

லேப்டாப் உடன் வந்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையர்! பீகார் மேடையில் பதறிய அமித்ஷா!

-

- Advertisement -

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயரை நீக்க சதி செய்தவர்கள் யார்? என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் யார் என்று சொல்லுங்கள் என கேட்டால் தற்போது வரை பதில் சொல்லவில்லை என்று பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடைபெற்றதாக ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர் மகிழ்நன் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளதாவது :- கர்நாடகாவில் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடந்துள்ளது. உள்ளுர் பூத் லெவல் அதிகாரி ஒருவர், தன்னுடைய உறவினர் பெயரை நீக்க முயற்சித்துள்ளது தொடர்பாக சந்தேகம் எழுப்பினார். இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்.எஸ்.வி.பி., கருடா, வி.ஹெச்.ஏ போன்ற செயலிகளை பயன்படுத்தி தான் அவர்கள் முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளனர். செல்போன் எண்களை பதிவிட்டு ஓடிபி பெற்று பெயர்களை நீக்க முயற்சி நடைபெற்றுள்ளது. அதை ராகுல்காந்தி வெளிப்படுத்தியுள்ளார். அந்த எண்கள் எல்லாம் வடமாநிலங்களை சேர்ந்தவையாகும். அவர்கள் பயன்படுத்திய ஐ.பி. அட்ரஸ் விவரங்களை வழங்கிடுமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர். கர்நாடக சிஐடி காவல்துறையினர் தொடர்ச்சியாக 18 முறை கடிதம் எழுதியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. இடையில் கொடுத்த தகவல்களும் போதவில்லை.

அடுத்த படியாக ராகுல்காந்தி ஹைட்ரஜன் பாம் போட உள்ளதாக சொல்கிறார். ஹெச் என்று வருவதால் ஹரியானாவாக இருக்கலாம். அல்லது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியாக இருக்கலாம். பீகார் தேர்தலையொட்டி ஏதோ ஒரு பெரிய விஷயத்தை ராகுல்காந்தி அம்பலப்படுத்தப் போகிறார். வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சித்த விவகாரம் 2022 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஏதே பிரச்சினை உள்ளது என்று அதை பின்தொடர்ந்து சென்றால் தேர்தல் ஆணையம் வந்து நிற்கிறது. தேர்தல் ஆணையம் இந்த விசாரணை முன்னோக்கி நகர விடாமல் தடுத்து நிறுத்துகிறது. ராகுல்காந்தியின் செய்தியாளர் சந்திப்பில் இதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். அது கண்டிப்பாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியும் என்று ஒரு ஸ்லைட் போடுகிறார். அந்த ஸ்லைடில் அமித்ஷா, மோடியின் நிழல்கள் உள்ளன. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் ராகுல் குற்றச்சாட்டு எல்லாம் பொய் என்று சொல்கிறது. மேலும், ஆன்லைனில் இந்த பார்ம் 7-ஐ விண்ணப்பிக்க முடியாது என்று சொல்கிறது.

ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்துகொண்டு வேறு மாநிலத்தில் இருந்துகொண்டு குறிப்பிட்ட தொகுதியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில்  காங்கிரசுக்கு இவ்வளவு வாக்குகள் உள்ளன. இத்தனை பேரின் வாக்குகளை நீக்கிவிட்டால் சரியாக இருக்கும் என்றால், ஒரு ரூமில் உட்கார்ந்துகொண்டு குறிப்பிட்ட பெயர்களை எல்லாம் நீக்கி கொடுங்கள் என்றால் பார்ம் 7-ஐ வைத்து பெயர்களை நீக்கி தேர்தல் முடிவுகளை எல்லாம் மாற்றிவிடலாம். குறிப்பிட்ட 6 ஆயிரம் வாக்குகளை நீக்கப்பட்டிருந்தால் தங்களின் வேட்பாளர் தோல்வி அடைந்திருந்தால் என்ன செய்வது என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளது. அதற்கு பின்னால் சதி செய்தவர்கள் யார் என்று தேர்தல் ஆணையருக்கு தெரியும். அவர்கள் யார் என்று பொதுவெளியில் சொல்லுங்கள் என்று கேட்டால் தற்போது வரை பதில் சொல்லவில்லை.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

ராகுல்காந்தி முன்பு ஒருமுறை சொல்லி இருந்தார், பாஜக உடனான சண்டை என்பது அந்த கட்சி உடனான சண்டை மட்டும் அல்ல. இது தேர்தலோடு முடியப் போவதும் இல்லை. நாட்டின் அனைத்து ஜனநாயக நிறுவனங்களையும் பாஜக சீரழித்து வைத்துள்ளது. அவற்றையும் சரிசெய்ய வேண்டி உள்ளது என்று சொல்லி இருந்தார். அதனை தற்போது தேர்தல் ஆணையத்தில் இருந்து தொடங்கியுள்ளார். கடந்தமுறை ராகுல்காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது வெளியிட்ட தகவல்களை வைத்து பாஜக ஒரு வதந்தியை பரப்பியது. அதில் ராகுல் காந்தியின் தரவுகளை ஆய்வு செய்ததில் அது மியான்மரில் இருந்து வந்துள்ளது. நேபாளத்தை போன்று இந்தியாவிலும் அவர் வன்முறையை தூண்டிவிட முயற்சிக்கிறார் என்று சொன்னார்கள். அதை பத்திரிகையாளர் சுபேர் பொய் என்று நிருபித்துவிட்டார். இந்த வழிகளில் கூட ராகுலை எதிர்கொள்கிற அளவுக்கு பாஜக பயந்து போய் உள்ளது.

மோடி - அமித்ஷா

இது கர்நாடகாவில் நடைபெற்றது மட்டும் அல்ல. தமிழ்நாட்டிலும் 2026 தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் திமுக முப்பெரும் விழாவில் பேசுகிறபோது பூத்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஒரு வாக்குச்சாவடியை பாதுகாப்பது அல்ல. நமது வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதில் விழிப்புடன் இருக்காவிட்டால் பாஜகவை எதிர்கொள்ள முடியாது.  அமித்ஷா துணிச்சலாக 2026 தேர்தலில் அடிக்கிறோம் என்று சொல்கிறார். வழக்கம்போல் அது வாய்சவடால் என்று நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. அவர்கள் வேறு ஏதும் திட்டமிடுகிறார்களா? என்று எச்சரிக்கையோடு இருந்தால் மட்டும்தான்., 2026 தேர்தலில் கடக்க முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ