spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதினகரனை சந்தித்த அண்ணாமலை! ஆட்டம் தொடங்கிடுச்சு! ரகசியம் உடைக்கும் உமாபதி!

தினகரனை சந்தித்த அண்ணாமலை! ஆட்டம் தொடங்கிடுச்சு! ரகசியம் உடைக்கும் உமாபதி!

-

- Advertisement -

டிடிவி தினகரனை சந்தித்து பேசிய அண்ணாமலை அவரை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஓபிஎஸ் உடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டிடிவி தினகரனுடன், அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியதன் அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது:- என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன் உடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். பாஜக தலைமை தான் இவர்களை எல்லாம் வைத்து ஆடு- புலி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்காத டிடிவி, ஓபிஎஸ் உடன் பேசுகின்றனர். நயினார் நாகேந்திரனை வைத்து எடப்பாடி பழனிசாமியிடம் நீங்கள் தான் முதலமைச்சர் என்று பேசுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் பேசிக்கொண்டே டிடிவி, ஓபிஎஸ் உடன் பேசுவது குறித்து கேட்டால், நான்தான் கட்சியின் மாநிலத் தலைவர், அண்ணாமலை ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்து விடுவார். ஆனால் தமிழ்நாடு அரசியலில் கேமே அண்ணாமலையை வைத்து தான் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை 2024 மக்களவை தேர்தலில் தோற்ற உடன் முடிந்துவிட்டது.

டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசிய அண்ணாமலை, “நயினார் நாகேந்திரன் ஒரு டம்மியான நபர். அதிமுகவை பேசி கூட்டணிக்கு அழைத்து வருவதற்காக, அவரை மாநில தலைவராக போட்டுள்ளனர். 2026 தேர்தலுக்கு முன்பாக அவரை பொறுப்பில் இருந்து நீக்கி விடுவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடாது அவ்வளவு தானே. நான் உங்களுக்கு முன்னதாக இருந்தே சொல்லி வருகிறேன். அவரை பொறுப்பில் இருந்து தூக்குகிறோம். கொஞ்சம் காத்திருங்கள். அதுவரை அறிக்கை எதுவும் கொடுக்காதீர்கள். அமைதியாக இருங்கள்”, என்று கூறியுள்ளார்.

அப்போது, தினகரன், “சரி சொல்லுங்க அண்ணாமலை. உங்களை பற்றி தெரியாதா அண்ணாமலை. வழக்குகளை எல்லாம் நீங்கள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்”, என கூறியுள்ளார். அதற்கு அண்ணாமலை, “தெரிகிறதா அண்ணா. சின்னவரிடம் பேசிவிட்டேன். பெரியவரிடமும் பேசிவிட்டேன். விஜய் குறித்து எல்லாம் நினைக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஓபிஎஸ்- இடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய அண்ணாமலை, “அண்ணா உங்களுக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் செய்து விடலாம்”, என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், “எனக்கு உத்தரவாதம் கொடுக்காமல் இருந்தால் நான் என்ன செய்வது? யாரும் என்னை மதிப்பதில்லை. விஜய்க்கு தூதுவிட்டேன் அவரும் மதிக்கவில்லை. நான் போய் திமுகவில் சேர முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அண்ணாமலை தரப்பில், “அப்படி எல்லாம் செய்ய வேண்டாம். நானே திமுகவில் சேரப் போகிறேன் என்று சொல்கிறார்கள். அதை நான்தான் கிளப்பிவிட்டேன். கவலைப்படாதீர்கள். சேப்டியாக பண்ணுவோம் அண்ணா. எடப்பாடி இருக்கமாட்டார். கவலைப்படாதீர்கள். அப்படியே தேர்தல் நடந்து முடிந்து, அதிமுக வெற்றி பெற்றாலும் கூட ஆட்சியை கலைத்துவிட்டுருவோம். வரும் ஜனவரி மாதம் வரை நான் எதுவும் பேசக்கூடாது. உங்கள் இருவரிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம்”, என்று உறுதி அளித்துள்ளார். அண்ணாமலை பேசியது, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளன.

எடப்பாடி பழனிசாமியும், விஜயும் இன்னும் தொடர்பில் இருந்து வருவதாகவும், நாகை கூட்டத்திற்கு பிறகு இருவரும் தொலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரும் தொடர்பில் தான் இருந்து வருகின்றனர். ஆனால் போனில் பேசினாரா? என்பது தெரியவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய் தங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். திமுகவை அழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அப்படி அதிமுக – விஜய் கூட்டணி அமைய வாய்ப்புகள் இல்லை.

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். ஆனால் இந்த ஆடு – புலி ஆட்டத்தை அண்ணாமலையும், நயினாரும் தெரியாமல் ஆடுவதாக காட்டுகிறார்கள். பொதுமக்களிடம் அண்ணாமலைக்கும், நயினாருக்கும் ஆகவே ஆகாது கிளப்பி விடுவார்கள். பாஜக கூட்டத்திற்கு வராத அண்ணாமலையை, பி.எல். சந்தோஷ் அழைத்து வந்தார் என்று எல்லா பில்டப்களையும் தருவார்கள். ஒட்டுமொத்தத்தில் இது ஆடு – புலி ஆட்டம்தான். இதற்கு ஓபனர் பாஜக தான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ