spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

கொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு செல்வது அவருடைய தவறு அல்ல. அந்த சூழலுக்கு அவரை தள்ளியது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் அதிமுகவில் இணைவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாகவே உள்ளது. கூட்டணியின் தலைவர் என்கிற முறையில் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்தே சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது விஜய் மையப்படுத்தி எழுந்த வதந்திகள் தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து கொண்டுசெல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது உண்மை.எஸ்.ஐ.ஆர் குறித்த போராட்டம் நடைபெற்றபோது திட்டமிட்டே காங்கிரஸ் எம்.பிக்கள் அதில் பங்கேற்காமல் புறக்கணித்தார்கள்.  கூட்டணி சிதலமடையும் நிலையை நோக்கி தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற சில சந்திப்புகள், சில நிகழ்வுகள். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அறிவித்துள்ளது. அதன் மூலம் பெரிய குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் போட்ட போதே, அவர் தலைமையில் ஒரு அணி உருவாக போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவரை அதிமுக – விஜய் அணி அமையுமா? என்கிற சந்தேகமும் அதுவரை இருந்துகொண்டுதான் இருந்தது. அதற்கு 10 நாட்களுக்கு முன்பு விஜய் முற்றுப்புள்ளி வைத்த பிறகு, ஓரளவு தெளிவாகி விட்டது. திமுக அணி அப்படியே இருக்க வாய்ப்பு உள்ளது. விஜய், தலைமையில் ஒரு அணி, அதிமுக மற்றும் சீமான் என்று 4 அணிகள் உள்ளன.

அதிமுக ஒன்றிணைய பணிகள் நடப்பதாக ஓபிஎஸ் சொல்கிறார். அப்படி வேலை நடைபெற்று என்ன செய்ய போகிறார்கள்? தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் இருக்கிறது. காலத்தை தவறவிட்டு விட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்துவிட்டனர். செங்கோட்டையன், விஜயிடம் போய் சேரக் காரணம், என்ன செய்தாவது எடப்பாடியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான். அந்த மனநிலைக்கு செங்கோட்டையனை வரவழைத்தது எடப்பாடி பழனிசாமிதான். இது செங்கோட்டையன் தவறு அல்ல.

இதே முடிவை தான் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களும் எடுத்தனர். அவர்களை அப்படி சொல்ல வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். செங்கோட்டையன் போன்றவர்கள் விஜயிடம் செல்வது விஜய்க்கு பலம் தான். ஆனால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல. செங்கோட்டையன் செல்கிறபோது,  பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனி நபர்கள், பிரபலங்கள் சென்றார்கள் என்றால் அரசியல் ரீதியாக தவெக வலுபெறும். தவெக ஒரு இயக்கமாக வலுப்பெறுவதற்கு எடப்பாடியே உதவி செய்கிறார்.

தினகரன், அண்ணாமலை சந்திப்பு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. தினகரன் கட்சியின் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா கரூரில் நடைபெற்றது. அதில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். ஓபிஎஸ் கூட்டணியை விட்டு சென்றபோது சலனப்படாத பாஜக மேலிடம், தினகரன் சென்றபோது சிறிது சலனப்பட்டது. இன்று வரை பாஜக மேலிடத்தில் இருந்து சிலர் தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் நிஜம். அதை தினகரனும் சொல்லியுள்ளார். ஆனாலும் தான் என்ன முடிவு எடுப்பேன் என்று மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகிறார். இதை தாண்டி அந்த கல்யாண வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இருக்க வாய்ப்பு இல்லை.

ஓபிஎஸ், தினகரனுக்கு, விஜய் என்கிற வாய்ப்பு உள்ளது. திமுக உடன் செல்லவும் வாய்ப்பு உள்ளது. மூன்றாவதாக தனித்து நிற்கவும் வாய்ப்பு இருக்கிறது. விஜயுடன் செல்வது தான் அவர்களுக்கு இருக்கும் பிரதான வாய்ப்பு ஆகும். அது இயல்பான கூட்டணியாகவும் அமையும். என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் இருப்பதை சொல்ல அக்கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி மறுக்கும்போது, அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறினார்கள்.

"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைகிறபோது, அதன் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும். நிஜமான உணர்வுள்ள அதிமுக தொண்டர்கள் உள்ளூர வேதனைப்படுவார்கள். இந்த எதார்த்தத்தை பலர் சொல்ல வெட்கப்படுகிறார்கள். திட்டமிட்டு மறைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அதை குறித்து பேசாதீர்கள் என்கிறார். அதைதான் அதிமுக அழிவின் தொடக்கமாக அது இருக்கும் என்று நான் சொன்னேன். விஜய் எப்போது தன்னுடைய தலைமையில் ஒரு அணி என்று அறிவித்தாரோ, அப்போதே வெற்றி பெறுவதற்கான போட்டியில் திமுக ஒரு படி முன்னிலை பெற்றுவிட்டது. கூட்டணியை சிதையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேட்பாளர் தேர்வு போன்ற பல காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ