spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயின் பொய்! லிஸ்ட் போட்டு தோலுரித்த ஷாநவாஸ்!

விஜயின் பொய்! லிஸ்ட் போட்டு தோலுரித்த ஷாநவாஸ்!

-

- Advertisement -

உண்மையில் நாகையில் என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ? அதை விஜய் சொல்லாமல், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செய்யவே இல்லை என்று சொல்வதன் பின்னணி என்ன? என நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

நாகை சுற்றுப் பயணத்தின்போது தொகுதி வளர்ச்சி பணிகள் தொடர்பாக விஜய் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து விசிக துணைப் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசியல் களத்தை நாகரிகமானதாகவும், தமிழ்நாடு மரபுகளுக்கு ஏற்ற ஒரு களமாகவும் மேம்படுத்த நாம் நினைக்கிறோம். ஆனால் அண்மை காலாமாக தமிழ்நாடு அரசியல் களத்தை மிகவும் கீழ் இறக்கி அவதூறுகளாலும் பொய்களாலும் வன்மத்தாலும் அதை மாற்றத் துடிக்கிற சக்திகளாக பாஜக – சங்கபரிவார சக்திகள் விளங்குகிறார்கள்.

அதனுடைய குறியீடாக அன்றாடம் அண்ணாமலை தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுவார். அதேவேளையை ஆளுநர் ரவியும் செய்து கொண்டிருந்தார். தற்போது அவர்களின் வீச்சு ஓய்ந்திருக்கும் நிலையில், அந்த அவதூறுகளை விஜய் கையில் எடுத்துள்ளார். நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் முழுக்க முழுக்க பொய் தகவல்களை பரப்பிவிட்டு சென்றுள்ளார். நாகையில் நிறைவேற்றப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து, எந்தவிதமான ஆய்வையும் செய்யாமல் வன்மத்தோடு பொய்யை சொல்ல வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

https://www.apcnewstamil.com/news/crime-news/17-sovereign-jewel-robberyhands-on-within-two-days-of-joining-the-job/177390

விஜய் வருகிறபோது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று தவெக மாவட்ட செயலாளர்தான் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அங்கே அவர், அதை அரசாங்கம் ஏதோ திட்டமிட்டு செய்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இப்படி பொய்யை சொல்லி தன் மீது கனவத்தை ஈர்க்கிற இந்த வழக்கம் என்பது, நாம் பாஜகவில்தான் பார்த்தோம். அதை தற்போது விஜயும் செய்கிறார். எனவே இவர் யார் சொல்லி செய்கிறார்? எதற்காக இப்படி செய்கிறார் என்கிற கேள்வி எழுகிறது. புதிய அரசியல் சக்தி என்று தன்னை காட்டிக் கொள்பவர், புதிய அரசியலை செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த மண்ணில் இருந்து துடைத்து எரியப்பட வேண்டிய அவதூறு அரசியல், வன்ம அரசியலை இவர் ஏன் கையில் எடுக்கிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் நாகை குறித்து வைத்த அனைத்து கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் உள்ளது. ஏற்கனவே அரசு அதை தெளிவுபடுத்தி உள்ளது.

Fisherman
Fisherman

குறிப்பாக விஜய் நாகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கவில்லை. கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளார். என்னுடைய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அந்த கோரிக்கை இந்த ஆட்சிக்காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. ஐஐடியில் இருந்து ஆய்வுக்குழு வந்து பரிசோதித்து இங்கு அமைக்கலாம் என அவர்கள் பரிந்துரைத்து, கிட்டத்தட்ட ரூ.32 கோடியில் அந்த திட்டம் நிறைவேறக்கூடிய அளவுக்கு வேலை நடைபெற்று கொண்டிரருக்கிறது. நம்பியார் நகர் பகுதியில் ரூ.10 கோடியிலும், நாகூர் பட்டினச்சேரியிலும் கடல் அரிப்பு தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் நம்பியார் நகர் கிராமத்தில் ரூ.6 கோடியில் புயல் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. கீழ்வேளுர் தொகுதிக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டையில் ரூ.100 கோடியில் மிகப்பெரிய மீன் இறங்குதளம், மீன் பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. நாகை – அக்கரைப்பேட்டை இடையிலான பாலம் கைவிடப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வைக்கப்பட்ட கோரிக்கை காரணமாக ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டு தற்போது 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

காவிரியை இணைத்தீர்களா? குடிநீரை கொண்டு வந்தீர்களா? என விஜய் பேசியுள்ளார். நாகை வரலாற்றிலேயே ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் ஏறத்தாழ முடியும் தருவாயில் இருக்கிறது. குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்டதால் சாலைகள் சேதமடைந்தன. அதற்கு நிதி ஒதுக்கி ஒவ்வொரு பணியாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நாகைக்கு என்ன தேவை இருக்கிறதோ? என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ? அதை சொல்லி இருந்தால் அது மக்கள் நலன் என்று பேசலாம். ஆனால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், பணிகள் நடைபெற்று வருகிற திட்டங்களையும் செய்யவே இல்லை என்று சொல்வதன் பின்னணி என்ன? இப்படி பொய்யை பேசுவதன் மூலம் விஜய் சாதிக்க நினைப்பது என்ன?

கடந்த 40 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்த நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் இடித்துவிட்டு ரூ.5 கோடியில் புதிய மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இருந்த போதும் அந்த மருத்துவமனை தற்காலிகமாக வேறு ஒரு கட்டிடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. அங்கு அனைத்து பணியாளர்களும் பணியில் உள்ளனர். ஒட்டுமொத்த நாகை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நாகையில் பணிபுரிய மருத்துவர்கள் விரும்புவது கிடையாது. அப்படி இருந்தபோதும்  திமுக அரசு வந்தபிறகு மருத்துவர்களை நிரப்பி வருகின்றனர்.

கோட்டைவாசல் பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதாக விஜய் குற்றம்சாட்டி இருந்தார். கோட்டைவாசல் பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொண்ட ஆய்வில் அந்த பாலம் இன்னும் உறுதித் தன்மையோடு இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. எனவே அந்த பாலத்தை கட்டவில்லை. எங்கு பாலம் தேவையோ அங்கு கட்டிக்கொண்டு இருக்கிறோம். திமுக அரசு அமைந்த பிறகு நாகையில் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்று தொகுதி மக்களுக்கு தெரியும். விஜய்க்கு உண்மையை சொல்லி அரசியல் செய்ய ஏதுமில்லாததால், அவதூறு அரசியலை கையில் எடுத்துள்ளார். அது நீடிக்காது. நிலைக்காது. அவர் உண்மையிலேயே மக்களுக்கு என்ன தேவை என்று பேசட்டும். அதை விடுத்துவிட்டு, அண்ணாமலை, ஆர்.என்.ரவியின் இடத்தை நிரப்புவதற்கு விஜய் தேவையில்லை. அந்த இடத்தை பிடிக்க விஜய் துடியாய் துடிக்கிறார் என்பதுதான் நம்முடைய கேள்வி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ