spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாமலை - டிடிவி ரகசிய பிளான்! தனிகட்சிக்கு பிரேக் போட்ட நிர்மலா! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

அண்ணாமலை – டிடிவி ரகசிய பிளான்! தனிகட்சிக்கு பிரேக் போட்ட நிர்மலா! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

-

- Advertisement -

கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக பெற்ற தோல்விகள் அனைத்திற்கும் அண்ணாமலை – தினகரன் நட்புதான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அண்ணாமலை, தினகரன் – ஓபிஎஸ் போன்றவர்களை சந்திப்பதன் பின்னணி மற்றும் அவர் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியாகும் தகவல்களின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக – பாஜக கூட்டணியை பலவீனப் படுத்துவதற்கான வேலைகளை அண்ணாமலை ஒரு பக்கம் செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களில் அதிமுக பெற்ற அனைத்து தோல்விகளுக்கும் அண்ணாமலையும், தினகரனும் தான் காரணம். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முதன் முறையாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியே போனது. அதற்கும் அண்ணாமலை – தினகரன் நட்புதான் காரணம். அண்ணாமலையும், டிடிவி தினகரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு என்று சொன்னார். ஆனால் அவரே அப்படிதான். தற்போது புதிய கட்சி தொடங்குவதாக சொல்லிவிட்டு ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளார். கலை இலக்கிய பேரவையில் உள்ள ஒருவர் இந்த ரசிகர் மன்றத்தை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்ட பாஜக தலைவர் இந்த மன்றத்திற்கு போயுள்ளார். அதுவும் இந்த ரசிகர் மன்றத்தை எடப்பாடி தொகுதியில், எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அருகில் தொடங்கியுள்ளார். இது யாரை ஏமாற்றும் வேலை. தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமியை பிடிக்காததால், அவருடன் நட்பாக உள்ள அண்ணாமலைக்கும் அவரை பிடிக்காது. எனவே அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினார். அதனால் உள்ளாட்சி தேர்தலிலும், பின்னர் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், பாஜக எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் மீது உள்ள வழக்குகளை காட்டி மிரட்டி அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டது. தற்போது அவரை கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு அவருடைய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து காலி செய்வதற்கான வேலைகளை செய்கிறார்கள். சசிகலா பொதுச்செயலாளர். செங்கோட்டையன்  அல்லது வேலுமணி முதல்வர் வேட்பாளர். இதை ஷிண்டேவை உருவாக்கிய முறையில் தான் பாஜக செய்யும். செங்கோட்டையன் எப்போது எல்லாம் பிரச்சினை செய்கிறதோ, அப்போது எல்லாம் பாஜக அவரை அழைத்து பேசும். எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியே வேண்டாம் என்று சொல்கிற போதுதான், செங்கோட்டையன் ஜெயலலிதா படம் போடவில்லை என்று பிரச்சினை செய்தார். அதன் பிறகு பாஜக கூட்டணி ஆட்சி என்று சொல்கிறபோது, எடப்பாடி அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். உடனடியாக செங்கோட்டையன் பிரச்சினை செய்கிறார். அவரை அழைத்து அமித்ஷா, நிர்மலா பேசினார்கள்.

இத்தகைய சூழலில் தற்போது செங்கோட்டையன், பகிரங்கமாக டிடிவி தினகரனை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுகவுக்கு எதிரான டிடிவியை அவர் சந்திப்பதன் மூலம் கட்சியில் இருந்தே நீக்க போகிறார்கள். டிடிவி தினகரனை எடப்பாடி பழனிசாமி வர வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் என்டிஏ கூட்டணிக்கு வரலாம். அதிமுகவுக்குள் தான் வர முடியாது. அதை பேசுவதற்கு செங்கோட்டையன், அண்ணாமலை போன்றவர்கள் யார்? தற்போது அண்ணாமலை புதிய சொத்து ஒன்றை வாங்குவதற்காக இலங்கை வழியாக மலேசியாவுக்கு சென்றுள்ளார்.

இதை கூர்ந்து கவனித்தோம் என்றால் இவை எல்லாவற்றிலும் ஊடுருவது டிடிவி தினகரன் – அண்ணாமலையின் நட்பு. அவர்கள் செங்கோட்டையனை பகடைக்காயாக பயன்படுத்துவதன் பின்னணியில் உள்ளது என்ன என்றால்? எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு,  சசிகலாவை பொதுச்செயலாளராக கொண்டு வருவதாகும். இப்படிபட்ட அஜெண்டாவில் பாஜக இறங்கியுள்ளது. பாஜக முதலமைச்சர் வேட்பாளரில் இருந்து நீக்கினால் அவர் நிற்பாரா? அவர் பாஜகவை கழட்டிவிட்டு விஜயுடன் போக மாட்டாரா?

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை

டிடிவி தினகரனை வளர்த்தது அதிமுக தான். அப்போது அந்த கட்சிக்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டாமா? அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்க வேண்டாமா? எடப்பாடி பழனிசாமி வேண்டாம் என்று முடிவு செய்வதற்கு தினகரன் யார்? அதை அதிமுக உறுப்பினர்கள் தானே முடிவு செய்வார்கள். தினகரன் 18 எம்எல்ஏ-க்களுடன் தனியாக சென்றுவிட்டார் அல்லவா? ஆனாலும் இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் அல்லவா?

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது காலையில் 9 மணிக்கு தினகரன் வீட்டின் வாசலில் கான்வாயுடன் நிற்க வேண்டும். 12 மணிக்கு அவர் வெளியே வரும்போது அவரை பார்த்துவிட்டுதான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அலுவலகத்திற்கே செல்ல வேண்டும். ஒரு அடிமையை போல நடத்தியதால்தான் ஒரு கட்டத்தில் வெறுத்துபோய், அமித்ஷாவை தொடர்பு கொண்டனர். பின்னர் ஓபிஎஸ் அணியை சேர்த்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தார். தினகரனின் நடவடிக்கைகள் தான் அதற்கு காரணம். இவருக்கு என்ன தகுதி உள்ளது மற்றவர்களை தூக்கி போடுவதற்கு. எனவே அதிமுகவை தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

பி.எல்.சந்தோஷ், அண்ணாமலையை மிரட்டி பாஜக கூட்டத்திற்கு கூட்டிச் சென்றதாக சொல்வதில் உண்மை இல்லை. அவர்தான் பி.எல். சந்தோஷை மிரட்டுகிற இடத்தில் உள்ளார். காரணம் கர்நாடக எம்எல்ஏக்களின் பலரின் வீடியோக்கள் அண்ணாமலையிடம் உள்ளது. கேசவ விநாயகத்திடம் வீடியோவை காட்டி மிரட்டி தான் நாடாளுமன்றத் தேர்தலில் பலருக்கும் எம்.பி. சீட் வாங்கினார். அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்குவதாக சொல்கிறார். அப்படி அவர் தொடங்கினால் பாஜக மேலிடம் விடாது. ஏற்கனவே அண்ணாமலையின் மைத்துனரின் செங்கல் தொழிற்சாலையின் மதிப்பு ரூ.210 கோடி என்று நிர்மலா சீதாராமன் கண்டுபிடித்து வைத்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் எல்லோரிடமும் லஞ்சம் வாங்கியுள்ளார். திமுக உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஆள் அண்ணாமலை. அவருக்கு ஒரே இலக்கு அதிமுக தோற்க வேண்டும். அந்த அஜெண்டாவுக்காக எல்லா வேலைகளை செய்வார். எனவே அவர் தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் அதிமுகவுக்கு திரும்ப போகிறார். ஆனால் சசிகலாவை கட்சிக்குள் விடுவதற்கு வாய்ப்புகளே கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ