spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாமலை தனிக்கட்சி விரைவில்! விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! மிரட்டும் டெல்லி பாஜக!

அண்ணாமலை தனிக்கட்சி விரைவில்! விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை! மிரட்டும் டெல்லி பாஜக!

-

- Advertisement -

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவலை பரப்பி வருவதாகவும், அதேவேளையில் அண்ணாமலையின் ஜாதகம் பாஜகவின் கைகளில் உள்ளதால் அந்த எல்லைக்கு அவர் செல்ல மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கு விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜக தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் மூலமாக அண்ணாமலையை களமிறக்கலாம் என்று பார்த்தார்கள். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கியதால், அண்ணாமலையை பாஜக மாநில துணைத் தலைவராக நியமித்தார்கள். பின்னர் தலைவராகினார். தன்னை ஒரு தலைவராக முன்னிலைப்படுத்த வார்ரூம்களை அமைத்து செயல்படுத்தி வந்தார். அதிமுக உடன் கூட்டணி வைப்பது, அதற்கு தடையாக இருக்கும் என்று அவர் கருதியதால், அவர்களை கடுமையாக தாக்கி பேசினார். வேறு வழியில்லாமல் 2024 மக்களவை தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறினார். அண்ணாமலையை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த நிலையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் என்டிஏ கூட்டணியில் அதிமுக இருக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் நினைத்தது. எனவே, மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை கொண்டுவந்தனர். தற்போது எடப்பாடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அழுத்தம் காரணமாக அண்ணாமலை பேசுகிறார். ஆனால் உள்ளுக்குள் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை காலி செய்ய வேண்டும் என்பதற்காக தான் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார்.

அதிமுகவை காலி செய்தால்தான் தமிழ்நாட்டில் பாஜக வளர முடியும் என்று நினைக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் எப்படி எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அதேபோல் அண்ணாமலைக்கும் செல்வாக்கு உள்ளது. இந்த கணக்குகளை வைத்து தான் அண்ணாமலை சொத்தும் சேர்க்கிறார். கட்சியிலும் தன்னை ஒரு ஆளாக வளர்த்துக்கொள்ள முயற்சித்தார். தற்போது பதவி போன பிறகும் அந்த இடத்தை விட்டுத்தர மறுக்கிறார். அதன் பிறகு பாஜக கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பாஜக ஒருங்கிணைந்த கட்சியாக இல்லை. அண்ணாமலை தனி அணியை உருவாக்கிவிட்டார் என்பது தெரிகிறது. அண்ணாமலை கூடுதலாக எதை வைத்து மிரட்டுகிறார் என்றால்? எல்லை மீறி சென்றால் தனிக்கட்சி தொடங்குவேன் என்று சொல்கிறார். தற்போது விஜய் கட்சி தொடங்கிய பிறகு, அவரை மிஞ்சிய ஒரு ஆளாக வர முடியுமா? என்பது அண்ணாமலைக்கே சந்தேகம் தான். இது அண்ணாமலைக்கு தெரியாமல் இல்லை.  ஆனால் தமிழ்நாட்டு பாஜகவை பொறுத்தவரை 18 சதவீதம் வாக்குகள் வாங்குவதற்கு காரணம் அவர்தான் என்றும், அதில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக கிடைத்ததாக நினைக்கிறார். அப்படி இருக்கையில் தன்னையும், தன்னுடைய அணியையும் ஓரங்கட்டுவதாக அண்ணாமலை மிரட்டுகிறார். இதன் காரணமாக அவர் கட்சியை தொடங்கிவிடுவார் என்று அர்த்தமில்லை. ஆனால் இந்த செய்திகளை வேண்டும் என்றே ஊடகங்களில் கசியவிடுகிறார்கள்.

அண்ணாமலை, தினகரனை சந்தித்து பேசியுள்ளார். அடுத்தபடியாக ஓபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளதாக தெரிவிக்கிறார். தினகரன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை என்டிஏ கூட்டணியில் இணைய மாட்டோம் என்று சொல்கிறார். ஆனால் தினகரன் ஏன் அண்ணாமலையின் குரலாக ஒலிக்கிறார் என்றால், அண்ணாமலைக்கு எடப்பாடி உடன் தனிப்பட்ட முறையிலும் பகை உள்ளது. தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்றும் எண்ணம் உள்ளது. தினகரன் பழைய விஷயங்களை கிளர்வதற்கு காரணம் அண்ணாமலைதான். அதேபோல் ஓபிஎஸ்-ம் பிரதமர் வந்தமறுநாள் கூட்டணியில் இருந்து விலகுகிறார். அவரும் இதே குரலில்தான் பேசி கொண்டிருக்கிறார். அப்போது எடப்பாடியை சேர்த்துக்கொள்வது என்பது என்டிஏ கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். பாஜக மேலிடமும் எடப்பாடியை கட்டுக்குள் வைக்க இதை ஆதரிக்கிறார்கள். செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது. டிடிவி தினகரனை சந்தித்துவிட்டு இல்லை என மறுப்பது என்று செய்திகள் வர காரணம் எடப்பாடியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

பாஜகவை பொருத்தவரை அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை வாங்கிக் கொண்டு, என்டிஏவில் உள்ள கட்சிகளுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு ஒரு பெரிய அளவிலான இடங்களில் தாங்கள் நிற்பது என்று முடிவு செய்துள்ளது.  அப்படி நின்றால்தான் கணிசமான இடங்களை வெல்ல முடியும். அப்போதுதான் கூட்டணி ஆட்சியோ, துணை முதலமைச்சர் பொறுப்போ கேட்க முடியும்  என்று நினைக்கிறார்கள். மறுபுறம் என்டிஏ கூட்டணி தோற்றால், அதிமுகவின் வாக்கு வங்கியை வாங்கக்கூடிய  கட்சியாக 2029ல்  பாஜக வளர முடியும் என்று நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் அவர்களுடைய நோக்கம் அல்ல. எப்படியாவது அதிமுகவை காலி செய்துவிட்டு, அவர்களுடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். இது எடப்பாடியை வைத்துக்கொண்டு நடக்கிறதா? அல்லது அவரை நீக்கிவிட்டு நடக்கிறதா? என்பதற்காக தான் செங்கோட்டையன் விவகாரம் போன்றவை எடுக்கப்படுகிறது.

விஜய் கட்சி தொடங்கியுள்ளதன்  மூலமாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு கூட்டணி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜயை பொறுத்தவரை அவர் தற்போது சனிக்கிழமை பிரச்சாரம் மூலம், தனக்கு செல்வாக்கு இருப்பதை நிலை நிறுத்திக்கொள்வது. அப்படி செய்கிறபோது தினகரன் போன்ற கட்சிகள் தன்னிடம் நம்பி பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நினைக்கிறார். தேர்தல் நெருங்கும்போது இவர்களை எல்லாம் திடீரென சேர்த்துக்கொண்டால் திமுகவுக்கு பலமான போட்டியை கொடுக்க முடியும் என்றும் நினைக்கிறார்கள். எடப்பாடி எதிர்ப்பு கோஷ்டிக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. அவர்கள் தாராளமாக விஜயிடம் வந்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. அண்ணாமலை கூட ஒரு தனிக்கட்சி தொடங்கினால் அவர் விஜயுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளது.

ஓபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது என்பது கூட்டணிக்கான ஆழம் பார்க்கிற ஒரு நிகழ்வாக கூட இருக்கலாம். எடப்பாடியின் அதிமுகவுக்கு கொங்கு பகுதியில்தான் செல்வாக்கு இருக்கிறது. முக்குலத்தோர் பகுதிகளில் பாஜக ஓரளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்திலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. வடதமிழ்நாட்டில் பாமக கூட்டணியின் மூலமாக வன்னியர் வாக்குகளை பெறுவது அவர்களின் திட்டமாகும். ஒருவேளை ஓபிஎஸ், திமுக கூட்டணி வைத்தால், எடப்பாடி பழனிசாமி துரோகி என்று சொல்ல தொடங்கி விடுவார். எனவே கூட்டணி அளவுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் வெளியில் நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று காட்டுவதற்காக இதனை செய்திருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ