spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

-

- Advertisement -

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன் அவர் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதி ஜான் முன்பாக ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாமே என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

அஜித்குமார் மரணம் தொடர்பாக தலைமறைவாக உள்ள நிகிதா ஆடியோக்களை வெளியிட்டு வருவது தொடர்பாக வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு புகார் அளித்த நிகிதாவை நோக்கி நகர்கிறது. நிகிதா ஒரு மோசடி பேர் வழி என்பதை பாதிக்கப்பட்டவர்களே பேசுவதை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக வேலை வாங்கி தருவதாக சொல்லி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார். தான் பயின்ற கல்லூரியின் முதல்வராக இருந்தவரிடமே நிகிதா பண மோசடி செய்திருக்கிறார். நிகிதாவின் முகநூல் சமூக வலைதள பக்கம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ரசிகையாக நிகிதா இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நிகிதாவை தேடுகிறார்கள் என்கிற செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நிகிதாவை பொள்ளாச்சி அருகில் உள்ள ஓட்டலில் பார்த்த பொதுமக்கள் அவரை சிறைபிடித்து வைத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். முதலில் அங்கு வருவதாக கூறிய போலீசார், 2 மணி நேரத்திற்கு பின்னர் அவரை விட்டுவிடுமாறு கூறியுள்ளனர்.  அப்போது அந்த 2 மணி நேரத்தில் காவல்துறைக்கு எங்கிருந்து நெருக்கடி வந்தது. யார் காவல்துறையினரிடம் பேசினார்கள். ஒருவேளை அண்ணாமலை பேசினாரா? அவருக்கும் அஜித்குமார் மரணத்தில் தொடர்பு உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது.

அஜித்குமார் மரணத்தில் முதலில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பதாக கூறி தகவல்கள் வெளியாகின. அப்படி ஏடிஜிபியே தொடர்பு கொண்டு பேசி இருந்தாலும் மானாமதுரை டிஎஸ்பி ஏன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்திருக்க கூடாது? அப்போது அதை சொல்லக்கூடாத அளவுக்கு டிஎஸ்பி பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. ஏதோ ஒரு வகையில் நெருக்கடி இருந்துள்ளது. அந்த நெருக்கடி அண்ணாலையாக இருக்கும் என்பதுதான் சந்தேகம். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய விவகாரம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சரே தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அரசு பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறது. வழக்கமாக தமிழ்நாட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடைபெற்றால் அவர் வானத்திற்கும், பூமிக்கும் குதித்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சமூக வலைதள பதிவோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார். அஜித்குமார் மரண விவகாரத்தில் அண்ணாமலை ஒரு கள்ள மவுனத்தை காக்கிறார். எனவே விசாரணை வளையத்திற்குள் அண்ணாமலையை ஏன் கொண்டுவரக்கூடாது?

ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

அஜித்குமார் மரண வழக்கில் தலைமறைவாக இருக்கும் நிகிதா தொடர்ச்சியாக ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தான் ஒரு மனிதநேயம் மிக்க நபர் என்றும், எரும்பு, பாம்பு போன்ற உயிர்களை கூட துன்புறுத்த மாட்டேன் என்று சொல்கிறார். ஏன் நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இவற்றை எல்லாம் சொல்லலாமே? நீதிபதி ஜான் முன்னிலையில் மூன்றவாது நாள் விசாரணைக்கு நிகிதா ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமறைவாக இருப்பது ஏன்? தன்னுடைய சொந்த வாழ்க்கையை  தோண்டுவது ஏன் என்று நிகிதா கேள்வி எழுப்புகிறார். ஊடகங்கள் இந்த நேரத்தில் சரியா இயங்கி இருப்பதாக நான் எண்ணுகிறேன். அரசு வேலைக்காக அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த பேட்டிகளை காண்கிறோம். நிகிதாவால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளிக்கு வந்தார்கள். ஊடகங்கள் அதை வெளிச்சம் போட்டு காட்டின. நீங்கள் யார் என்பதை உலகம் உணர வேண்டாமா? இதை எல்லாம் பேசாமல் இருந்திருந்தால் நீங்கள் ஏதோ நிரபராதி போலவும், உங்களுக்கும் அஜித்குமார் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்பது போன்றும் அல்லவா பேசி கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தரப்பு நியாயங்களை பேச உங்களுக்கு உரிமை உள்ளபோது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் பேசவும் உரிமை இருக்கத்தான் செய்கிறது.

அஜித்குமார் மரண விவகாரத்தில் நிகிதா முதலிலேயே வெளிப்பட்டிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் இந்த வழக்கில் எந்த இடத்திலும் உள்ளே வராமல் இருப்பதற்கான அனைத்து வேலைகளையும் பத்திரமாக பார்த்துக்கொண்டீர்கள். அஜித்குமார் மரணமடைந்துவிட்டார் என செய்தி வெளியான உடனேயே நீங்கள் வெளியே வந்து என்ன நடந்தது? என்று பேசியிருக்க வேண்டும். ஏன் ஓடி ஒளிந்தீர்கள்? உங்களுடைய திரைமறைவு நடவடிக்கைகள் தான் மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது. நிகிதாவுக்கும், அஜித்குமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அது குறித்த காணொலியில் ஏன் உங்கள் முகத்தை மூடிக்கொண்டு பேசுகிறீர்கள். அப்போது ஏதோ ஒன்று அதற்கு பின்னால் உள்ள காரணத்திற்காக உங்கள் முகம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். திரைமறைவுக்குள் இருந்து இதை எல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நிகிதாவுக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது? நிகிதாவை ஏற்கனவே கல்யாணம் செய்த பாஜக ஆதரவாளரான திருமாறன், ஒரே நாளில் தன்னை திருமணம் செய்துவிட்டு அவர் ஓடிவிட்டார் என்று சொல்கிறார். அவரது குடும்பமே ஒரு மோசடி குடும்பம் என்று சொல்கிறார். அப்போது தனது பின்புலத்தை ஆராய்வது ஏன் என்று கேட்கிற நிகிதா, தன் மீதான குற்றச் சாட்டுகள் எதற்கும் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?

அஜித்குமார் மரண வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் ஹென்றி திபேன் போன்ற வழக்கறிஞர்கள் கூட ஏன் சிபிஐக்கு மாற்றினார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். என்னை பொருத்தவரை முதலமைச்சர் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டார். இந்த மரணம் சிஸ்டத்திற்கு வெளியே நடைபெற்றுள்ளது. அன் அபிஷியலாக எல்லாம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 மணி நேரத்திற்குள்ளாக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். சிபிஐக்கு உத்தரவிட்டதன் மூலம் தன்னுடைய மடியில் கணம் இல்லை என்று முதலமைச்சர் நிரூபித்துவிட்டார்.  ஒருவேளை இந்த வழக்கில் அண்ணாமலைக்கு தொடர்பு இருந்தால், சிபிஐ எப்படி உண்மையை வெளிக்கொண்டு வரும். சிபிஐ யாருக்காக இயங்குகிறார்கள் என்று நாம் பல்வேறு வழக்குகளில் பார்த்திருக்கிறோம். அப்போது சிபிஐக்கு வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்.

இதனை மறுபரிசீலனை செய்கிற அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. முதலமைச்சரின் நோக்கத்தில் தவறு இல்லை. வழக்கினுடைய போக்கை பார்த்து அவர் மாற்றியுள்ளார். அனைத்து விவகாரங்களும்  2 நாட்களில் முடிந்துவிட்டன. கொஞ்சம் அவகாசம் எடுத்து இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தன்னுடைய அப்சர்வேஷன் என்ன என்று வைத்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது நியாயம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை செய்துவிட்டார். அது இப்போது தேவையில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த வழக்கு போகிறபோது அண்ணாமலை போன்றவர்கள் தப்பித்துக்கொள்வதற்கு பயன்படும் என்றே நான் கருதுகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ