Homeசெய்திகள்கட்டுரைஆடு வளர்ப்பில் அசத்தும் அண்ணாமலை! விஜய் உடன் சந்திப்பு? அமித்ஷாவின் ரகசிய திட்டம்!

ஆடு வளர்ப்பில் அசத்தும் அண்ணாமலை! விஜய் உடன் சந்திப்பு? அமித்ஷாவின் ரகசிய திட்டம்!

-

- Advertisement -

அண்ணாமலையை அதிமுக கூட்டணிக்காக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், அவரை நீக்க கட்சி தலைமையே முடிவு செய்திருந்ததாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அண்ணாமலையின் தற்போதைய நிலை குறித்தும், அவரது எதிர்கால திட்டங்கள் குறித்தும்  தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாஜக மாநில தலைவர் பதவி இல்லாததால் தான் நிம்மதியாக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று தான் நினைக்கவில்லை. கூண்டு கிளியாக இருக்க தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அப்போது மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவாரா? மத்திய அமைச்சர் பதவி மாபெரும் கூண்டா? அப்படி அமைச்சர் ஆனாலும் வெளிநாடு செல்லலாம். அப்போதும் புத்தகங்களை படிக்கலாம். ஆடு மாடுகளுடன் நேரத்தை செலவிடலாம். அண்ணாமலை, அப்படி பேசுவது வெளியில் சிரித்துக்கொண்டு உள்ளே அழுவதாக தான் நினைக்கிறேன். ஏனென்றால் பதவி வேண்டாம் என்று எந்த அரசியல்வாதி சொல்வார்கள். பதவி இல்லாமல் என்ன செய்ய முடியும்.

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

தம்பி அதிகாரத்தின் வாயிலாக தான் நாம் நினைத்ததை செய்ய முடியும் என்று அண்ணா சொன்னார். அது அண்ணாவின் அரசியல் அறிவாயுதத்தின் துணை கொண்டு அரசியலில் வெற்றி பெற்று, நாம் அடைய வேண்டியதை அடைய வேண்டும். பிறகு திமுக கட்சி வந்தது. அதில் இருந்து பல கட்சிகள் தோன்றின. அனைத்துக்கட்சிகளின் நோக்கமும் அதிகாரம் தான். அதிகாரப் போட்டி தான் அரசியலாகும். அதிகாரத்திற்கு நான் ஆசைப்படவில்லை என்று யாராவது சொன்னால், ஒன்று அவர்களுக்கு அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை. இல்லா விட்டால் மறைமுக அஜெண்டாவுடன் சொல்கிறார்கள். பதவி இல்லாததால் சுதந்திரமாக உள்ளேன் என்றால் அண்ணாமலை கருத்தே சொல்ல வேண்டாமே, சாமியாராக போய்விட வேண்டியது தானே. எதற்கு கருத்து சொல்ல வேண்டும். ஆனால் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கான நெளிவு சுழிவுகள் வேண்டும். அண்ணாமலைக்கான வாய்ப்பு என்ன? பாஜக மாநில தலைவர் பதவியை விட உயர்ந்த பதவிதான். ஆனால் பாஜக அதற்கான சமிக்ஞை கிடைக்கவில்லை. கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா அண்ணாமலை

எதார்த்தத்தில் பாஜகவில் உள்ள நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்? அண்ணாமலைக்கு தற்போது ஆதரிப்பவர்கள் இல்லை. அதிமுக – பாஜக கூட்டணி அமித்ஷா முன்னெடுப்பில் அமைந்தது. அப்போது அமித்ஷா அண்ணாமலையே இருக்கட்டும் என்று சொல்லி இருந்தால், அதை எடப்பாடியால் மீறி இருக்க முடியுமா? அமித்ஷா விரும்பி இருந்தால், எடப்பாடியை கூப்பிட்டு அண்ணாமலையே இருக்கட்டும் என்று சொல்லியிருப்பார். சமாதானமாக என்ன சொன்னார் என்றால் , அதிமுக உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று சொன்னார். அப்போது 2017 முதல் தலையிட்டார்களே அது என்ன? தர்மயுத்தம் ஏன் தொடங்கப்பட்டது. ஏன் நிறுத்தப்பட்டது? ஏன் டிடிவி உடன் 18 எம்எல்ஏக்கள்  ரிவால்ட் ஆகினார்கள். அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படவில்லை. இதெல்லாம் தான் சமீபத்திய வரலாறு. அப்போது உட்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் தான் இவ்வளவும் நடைபெற்றதா?

ஒரு கட்டத்தில் அதிமுக விவகாரத்தில் தலையிட வேண்டும். இப்போது என்ன சொல்கிறார்கள் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டை கொடுத்துவிடுவார்கள் என்று. அப்படி வாங்கினால் அதிமுகவில் பலரும் கொதித்து விடுவார்கள். அதை நம்பிதான் ஏராளமான மூத்த தலைவர்கள் உள்ளனர். தேமுதிகவுகோ, பாஜகவுக்கோ, அன்புமணிக்கோ ஒரு சீட்டு கொடுத்தால் அதிமுக என்னவாகும். ஜெயக்குமாரே எம்எல்ஏ தேர்தலில் நிற்க வேண்டாம். ராயபுரத்தில் வெற்றி பெற முடியாது. அப்போது அவர் ராஜ்யசபா சீட்டை தான் எதிர்பார்ப்பார். இது அமித்ஷாவுக்கும் தெரியும்.  அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை. திமுக  ஒரு வலிமையான கூட்டணி வைத்துள்ளது. அதை எதிர்த்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் திமுகவை வீழ்த்தலாம். இதில் இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டி உள்ளது. அதற்குள்ளாக பல குழப்பங்களை ஏற்படுத்துகிறபோது அண்ணாமலையே நாளை தனிக்கட்சி தொடங்க போகிறார். விஜயுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது தொலைக்காட்சிகளில் பேசப்படுகிற விஷயம் தான்.

பாமக உடைகிறது. தேமுதிக உடைகிறது. நல்லத்தம்பி போர்க்கொடி பிடிக்கிறார். கட்சிக்குள் பிரச்சினை உள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சிகளில் பாஜகவுக்குள்ளே பல கோஷ்டிகள் ஏற்பட்டு விட்டன. அதிமுகவுக்குள் கோஷ்டிகள் உள்ளது நாம் எல்லோருக்கும் தெரியும்.  பிற கட்சிகளுக்குள்ளும் கோஷ்டி. கடையில் இரண்டாக பிரிந்து நிற்பது பாமக. இதில் எந்த கோஷ்டி எந்த முடிவை எடுத்தாலும், மற்றொரு கோஷ்டி அதை எதிர்க்கும். எதிர்ப்பவர்கள் எல்லோருக்கும் 3வது அணி ஒரு வாய்ப்பாக அமையும். விஜய், சீமான் போன்றவர்கள் அதற்காக தான் எதிர்ப்பார்க்கிறார்கள்.

அண்ணாமலை கட்சியைவிட பெரிய அளவில் வளர்ந்துவிட்டார். பாஜக என்கிற கட்சியை தமிழ்நாட்டில் மூளை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது அண்ணாமலைதான். அவருக்கான ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் ஏற்பட்டு விட்டது. அண்ணாமலையை நீக்க வேண்டும் என்கிற முடிவுக்கு பாஜக தலைமை எப்படி வருகிறது என்றால், ஒன்று அதிமுக கூட்டணியை சமாதானப்படுத்தலாம் என்று நினைக்கலாம். ஆனால் 10 மாதங்கள் தானே உள்ளது. அதற்குள்ளாக ஏன் மாற்ற வேண்டும். செயல்படாத ஒரு அமைச்சரை நீக்கவே பல மாதங்கள் எடுப்பார்கள். காரணம் என்ன என்றால் அமைச்சருக்கான சாதிய பலம், அவருக்கான செல்வாக்கு போன்றவைகள் ஆகும். சாதாரணமாக இப்படி மாற்றி அமைக்க முடியாது. அதனால் அண்ணாமலையை மாற்றும் முடிவை முன்பே எடுத்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.

"குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!
Photo: Union Home Minsiter Amit Shah

இந்த விஷயத்தில் மோடி எதுவும் சொல்லவில்லை. நண்பர்கள் இந்த பொறுப்புகளை எல்லாம் அமித்ஷா கவனிப்பதாக சொல்கிறார்கள். அப்போது அமித்ஷா விரும்பி இருந்தால் அண்ணாமலை தொடர்ந்திருப்பார் அல்லவா? இது அண்ணாமலைக்கும் தெரியும் அல்லவா? பதவியை தக்க வைக்க அவரும் பல இடங்களிலும் போராடியிருப்பார் அல்லவா? நமக்கு வரவேற்பு இனிமேல் வராது. நாம் இப்படியே இருந்தால் அரசியலில் செல்லாக் காசு ஆகிவிடுவோம். அவருக்கு வயது 40 தான் ஆகிறது. அரசியலை விட 86 வயதான மருத்துவர் ராமதாசுக்கே விருப்பம் இல்லை. அரசியலை விட இங்கே யாருக்கும் விருப்பம் கிடையாது. எப்போதுமே. அப்போது அண்ணாமலையும் தயாராக இல்லை. தற்போது அவர் பேசியது உதட்டு அளவில் வந்த வார்த்தைகள். பாஜகவில் எப்போது வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறதோ அப்போது அவரே பாஜகவை விட்டு விலகிவிடுவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ