spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!

சிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

பீகார் மாநில தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, தவெக இடையே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வீட்டில் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், விஜய் பிரச்சார வாகனத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கேட்டிருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் ஷாருக் கான் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் வெளியே வந்தால் கூட்டநெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் காரணமாகவே பிறந்தநாளன்று வெளியே வரவில்லை என விளக்கம் அளித்திருந்தார். நான் அதை மேற்கோள் காட்டி, இங்கேயும் ஒருவர் போலீசார் கூறியதை கேட்டிருந்தார் என்றால், கரூரில் 41 மரணங்கள் நடைபெற்றிருக்காது என்று சொல்லியிருந்தேன். அதற்காக சி.டி.நிர்மல் குமாரின் சமூகவலைதள பிரிவினர் என் மீது பாய்ந்தனர்.கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணைக்காக தவெக அலுவலகமான பனையூருக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்றதும், விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். எப்படியும் சிபிஐ விசாரணைக்கு வரும் தகவல் கட்சியினருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர்களால் விஜயை தொடர்புகொள்ள முடியாத நிலை இருந்திருக்கலாம். அடுத்தபடியாக விஜய் பிரச்சார வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கேட்டிருக்கிறார்கள். அதை மிகவும் முக்கியமான விஷயமாக கருதுகிறேன். கரூரில் கூட்டநெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கிறபோது தெளிவாக தெரியும். வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான எஸ்.ஐ.டி-யிடம் தான் வழங்குவார்கள். என்னை பொருத்தவரை இந்த வழக்கு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி வரை அமித்ஷா, பீகார் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனவே அதற்கு பிறகு அதிமுகவுக்கு நல்ல செய்தி வரக்கூடும். அதற்காக தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக அமித் ஷா-வினுடைய கூட்டணி நிலைப்பாடு என்பது, தவெக தனித்து நின்று சிறுபான்மையினர், தலித் வாக்குகளை பிரித்தால் போதும் என்பதுதான். எஸ்.ஐ.ஆர், தேர்தல் ஆணையம் போன்றவற்றை வைத்து மற்றவற்றை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் விஜயுடன் கூட்டணி சேர்வது குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரனோ, எடப்பாடி பழனிசாமியோ தற்போது வரை பேசவில்லை. பாஜகவின் திட்டம் என்பது எடப்பாடி தலைமையில் அரசு அமைய வேண்டும். அதில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பாஜக அமைச்சர்கள் இடம்பெற செய்ய வேண்டும் என்பது தான். நயினாருக்கு அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு, புதுமுகம் ஒருவரை பாஜக தலைவராக கொண்டுவருவார்கள். அதேவேளையில் விஜய், அதிமுக – பாஜக கூட்டணியில் சேர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரது விருப்பமாக உள்ளது. அதை அவரால் அமித்ஷாவிடம் பேச முடியவில்லை. ஒரு முறை துணை முதலமைச்சர் ஆகிவிட்டால், அதற்கு மேல் முதல்வராக வர முடியாது. அப்படிதான் பவன் கல்யாணை காலி செய்தனர். அதேபோல், விஜயும் துணை முதலமைச்சர் ஆவது தான், தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது.

தமிழக அரசியல் சூழல் தற்போது மாறி இருக்கிறது. கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் இறந்தார்கள். அதற்காக மக்கள் என்ன தவெகவை கடுமையாக விமர்சித்தார்களா? சமூக வலைதளத்தில் தவெகவினரால் மிகப்பெரிய அளவில் பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிகிறது. அதேபோன்று திமுக, அதிமுகவால் செய்ய முடியவில்லை. தவெகவினர் போலி பிரச்சாரத்தை மக்களிடம் எடுத்துச்சென்ற நிலையில், அதை மக்கள் நம்புகிறார்கள். விஜயை மக்கள் இந்த அளவுக்கு நம்புகிற போது, இதுபோன்ற துயரங்கள் நடைபெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றே தோன்றுகிறது. அதிமுக, பாஜக, தவெக கூட்டணி அமைந்து, விஜய் ஒரு துணை முதல்வர், நயினார் மற்றொரு துணை முதல்வர், எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்று வந்தால், அப்போது தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்.

MUST READ