spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவசமாக சிக்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன்! புட்டு புட்டு வைக்கும் முன்னாள் நீதிபதி!

வசமாக சிக்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன்! புட்டு புட்டு வைக்கும் முன்னாள் நீதிபதி!

-

- Advertisement -

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை, உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை தடை செய்வதற்கானது உரிய நேரம் விடுமுறை கால அமர்வு கிடையாது. இதற்கு எதாவது முன்னுதாரணம் இருக்கிறதா? என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.  வக்பு திருத்த சட்டத்தை பார்த்தோம் என்றால் உச்சநீதிமன்றத்தில் இவ்வளவு நாட்களாக விசாரணை நடைபெற்று கொண்டே உள்ளது. அதுவும் இடைக்கால தடை வழங்குவதற்கே இவ்வளவு விசாரணை நடைபெறுகிறது. விடுமுறை கால அமர்வில் அவசர வழக்குகளை மட்டும் தான் விசாரிப்பார்கள். துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கை ஜுன் மாதம் விசாரிப்பதால் என்ன பிரச்சினை வந்துவிடும்? அரசு இன்றைக்கே துணை வேந்தரை நியமிக்கப் போவது இல்லை. சென்னையில் 40 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். மதுரையில் 25 நீதிபதிகள் உள்ளனர். விடுமுறை காலத்தில் 3 நீதிபதிகள் தான் இருப்பார்கள். அதுவும் வாரத்தில் ஒருநாள் தான் உட்காருவார்கள். 2வது நாள் எஞ்சிய வழக்குகளை விசாரிப்பார்கள்.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு

அதே அமர்வில் சவுக்கு சங்கர் ஒரு வழக்கு தொடர்கிறார். தமிழ்நாடு அரசின் சமூகநலத் திட்டத்தின் கீழ்  தலித் வணிகக் குழுமங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு என்று வழக்கு தொடர்கிறார். அதற்கு இடைக்காலத் தடை விதிக்கிறார். உடனே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துவிட்டு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு ஒரு கேள்வி கேட்கிறது. இதில் என்ன அவசரம் உள்ளது. இதை ஏன் விடுமுறை காலத்தில் விசாரித்தார்கள் என்று. இந்த கேள்வி இந்த வழக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்பவர் யார் என்றால்? நெல்லை மாவட்ட பாஜக செயலாளர். அவர் ஒரு வழக்கறிஞர். அந்த வழக்கிற்கான வழக்கறிஞர் யார் என்றால்? மதுரையை சேர்ந்தவர். அதே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கோடைகால அமர்வு உள்ளது. அங்கு மனுத்தாக்கல் செய்யாமல் ஏன் சென்னையில் மனுத்தாக்கல் செய்கிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் ஃபோரம் ஷாப்பிங் என்று பெயர். இங்கு சென்றால் நமக்கு உத்தரவு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். போரம் ஷாப்பிங்கிற்கு ஒரு நீதிமன்றம் உட்படும் என்றால், அது நீதித்துறைக்கு இழுக்காக நான் பார்க்கிறேன்.

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் - பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

இது தமிழ்நாடு அரசுக்கும், ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கும் இடையே நடக்கிற ஒரு போராட்டமாக நான் பார்க்கிறேன். தமிழ்நாடு அரசு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் ஒரு கடுமையான போர் நடக்கிறது. எந்த எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களையும் ஆட்சி செய்ய அனுமதிப்பது இல்லை என்பது தான் அவர்களது நோக்கம். அதன் ஒரு பகுதிதான் ஆளுநர். அந்தந்த மாநிலங்களில் இருக்கிற கவர்னர்கள் அந்த ஆட்சியை செயல்பட விடாமல் செய்வது. அதில் ஒன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது. உச்சநீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தபோது, அதை தடை செய்வது என்பது ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை செயல்படுத்துவது தான் ஆகும். துணை வேந்தர் நியமனம் தொடர்பான பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இப்போதுதான் தேடுதல் குழுவே அமைத்துள்ளார்கள். இதனை அவசர அவசரமாக விசாரிப்பது சரியானது இல்லை.

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்காதது தவறு. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தடை செய்வது உச்சபட்சமான செயலாக கருதுகிறேன். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர். அவர் இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறாரோ என்கிற ஐய்யப்பாடு ஏற்படுகிறது. எனவே அவர் இந்த வழக்கில் நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும். வழக்கு விவகாரத்திற்குள் நான் செல்லவில்லை. இந்த வழக்கில் இவ்வளவு அவசரம் காண்பிப்பதன் மூலமாக நீதிமன்றம் ஒரு சார்பாக செயல்படுகிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.  ஒருவருடைய முந்தைய கால அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே அளவுகோலை வைத்து பார்த்தால், ஜி.ஆர்.சுவாமிநாதனும் மாற்றப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் பணியிட மாற்றம் தான் முடிவாகும். அதற்கு கொலீஜியம் முடிவு செய்ய வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி வழங்கிவிடுவாரா? அது போல தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த நீதிபதியை, தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பணியிட மாற்றம் இருக்கும் என்று நினைக்கவில்லை. நீதிபதி சிவஞானம் வேண்டும் என்றால் மாற்றப்படலாம். அவருக்கு இருக்கிற அரசியல் பின்னணி வரும்போது, அது தொடர்பான வழக்குகள் வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். லக்ஷ்மி நாராயணனுக்கும் அதைதான் சொல்கிறேன். பாஜக செயலாளர் வழக்கு தொடர்கிறார். அப்போது இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டும் அல்லவா?

உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டுவரப்பட்ட சட்டம். மிக மிக அரிதான வழக்கில் தான் இதை பயன்படுத்தும். 5 வருடங்களுக்கு பிறகு சட்டமானதை ஒரே நிமிடத்தில் வாய்ப்பே கொடுக்காமல் தடை விதித்துவிட்டார்கள். அவர்கள் கேட்டது வாய்ப்பு. ஆனால் அது கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் அழுத்தம் தான் இது தொடர் கதையாக இல்லாமல் இருக்கும். கடந்த ஆண்டும் சவுக்கு சங்கர் வழக்கில் இவரது அமர்வு பெரிதாக பேசப்பட்டது. அதுவும் விடுமுறை கால அமர்வு, இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ