Homeசெய்திகள்கட்டுரையாருக்கு எத்தனை தொகுதிகள்? திமுக கூட்டணி கணக்கு என்ன? ப்ரியன் நேர்காணல்!

யாருக்கு எத்தனை தொகுதிகள்? திமுக கூட்டணி கணக்கு என்ன? ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு, 2021 பார்முலாவில் இருந்து சிறிய அளவில் மாற்றம் கொண்டதாக இருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தி இந்து நாளிதழில் வெளியாகி உள்ள கட்டுரையில் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக அதிக இடங்களை ஒதுக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரை தொடர்பாக பிரபல தொலைக்காட்சிக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- திமுக கூட்டணி 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை பார்த்துள்ளது. இந்த கூட்டணியை கட்டுக் கோப்பாக கொண்டு செல்வது ஸ்டாலின். இன்றைக்கு காங்கிரஸ் செய்கிற கலாட்டாக்களுக்கும் பதில் அளிக்காமல் மௌனமான செல்கிறார். இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடந்த முறை வாங்கிய இடங்களை விட கூடுதலாக வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

கடந்த முறை மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகளுக்கு 6 இடங்கள் வழங்கப்பட்டன. இம்முறை அவர்கள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் தரப்பில் கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இம்முறை 41 இடங்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்கும்போது திமுக போட்டியிடும் இடங்கள் குறைந்துவிடும். அதனால் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகளும் குறையும். எனவே அந்த நிலைக்கு செல்ல திமுக தலைமை விரும்பவில்லை.

கடந்த முறை 188 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இம்முறை குறைந்தபட்சம் 175 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்த திமுக சார்பில் இன்னும் குழு அமைக்கவில்லை. கலைஞர் காலம் முதலே,  கூட்டணி விவகாரங்களை  சில அமைச்சர்கள் ஒருங்கிணைப்பார்கள். அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எவ்வளவு இடங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று விருப்பத்தை கேட்பார்கள். அதை கட்சியின் தலைமையிடம் எடுத்துச்சொல்லி தொகுதிகளை முடிவு செய்வார்கள்.

காங்கிரஸ் திமுக உடன் செல்வது 70 சதவீதம் உறுதியாகிவிட்டது. இருந்தபோதும் திமுக உடன் கூட்டணி செல்ல முழுமையாக முடிவு செய்துவிட்டதா? என்றால் இன்னும் கேள்விக்குறியாக தான் உள்ளது. இருந்தபோதும் திமுக தரப்பில் அதிகபட்சமாக 20 இடங்கள் தான் தர முடியும் என்று சொல்லிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை இடம் தரப்பட்டு விட்டதால் அவர்களால் இடம் தர வாய்ப்புகள் இல்லை. எனவே புதிதாக வருகிற தேமுதிக, ஓபிஎஸ்க்கு இடம் தர முயற்சிப்பார்கள். தேமுதிகவுக்கு 6 இடங்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தர முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் வரும்பட்சத்தில் அவருக்கு 2 முதல் 3 இடங்கள் வரை வழங்கலாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி, தோல்விக்கான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்டணியில் முடிந்துமட்டும் அதிகமான கட்சிகளை சேர்க்க ஸ்டாலின் விருப்பப்படுகிறார்.

இந்து கட்டுரையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பின்பற்றப்பட்ட பார்முலாவை பின்பற்றியே இடங்கள் தரப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் இம்முறை கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகும் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும் அதேவேளையில், தற்போதுள்ள கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகள் கூடுதல் இடங்கள் தரப்படலாம் என்று தோன்றுகிறது.

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்
mk stalin thiruma

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் தரப்பட்டதால் தான், தேமுதிகவுக்கு 6 இடங்கள் என்று சொல்கிறார்கள். ஒருவேளை மற்ற கட்சிகளுக்கு இடங்களை அதிகரித்தால், தேமுதிகவுக்கும் இடங்களை அதிகரிக்க வேண்டும். எனவே அந்த விஷயத்திற்கு திமுக போக விரும்பவில்லை. எனவே தெளிவாக 2021 தேர்தல் பார்முலா என்கிறார்கள். புதிய கட்சிகளுக்காக 175 இடங்கள் வரை குறைத்து போட்டியிடலாம் என்கிறார்கள். ஆனால் இது ஒரு சவாலான பணியாகும்.  தவெக தலைவர் விஜய் அனைத்துக்கட்சிகளுக்கும் ஒரு கூட்டணி வாய்ப்பாக பார்க்கப்படுகிறார். அவரை காண்பித்து தான் அனைத்து பேரங்களும் நடைபெறுகின்றன.

MUST READ