Homeசெய்திகள்கட்டுரைகொளத்தூர் EVM முறைகேடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நோக்கி நகரும் திமுக - மூத்த பத்திரிகையாளர்...

கொளத்தூர் EVM முறைகேடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நோக்கி நகரும் திமுக – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி!

-

- Advertisement -

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் (EVM) சரிபார்க்கும் பணியின்போது அரங்கேறியுள்ள தொடர் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கொளத்தூர்

we-r-hiring

இதுகுறித்து ‘ஒபினியன் தமிழ்’ ஊடகத்திற்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் வழங்கிய சிறப்புப் பேட்டியின் விரிவான செய்திகள் இதோ:

இவிஎம் சரிபார்ப்பும் நடைமுறை உண்மைகளும்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உரிய கட்டணம் செலுத்தி வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

இது வழக்கமான ‘மறுவாக்கு எண்ணிக்கை’ (Recounting) அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய தராசு ஷியாம், கொளத்தூர் தொகுதியில் திமுக தரப்பில் கோரப்பட்ட சரிபார்ப்புப் பணிகளின் போது விவிபேட் (VVPAT) கோளாறுகள் மற்றும் முகவரிக்கார்டுகளில் (Address Tags) கண்டறியப்பட்ட முரண்பாடுகள் கடுமையான சந்தேகங்களை எழுப்புவதாகத் தெரிவித்தார்.

நீண்ட காலதாமதமும் எழும் சந்தேகங்களும்

வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களைக் கடந்த பின்னரே இந்தச் சரிபார்ப்புப் பணிகள் தொடங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பிய தராசு ஷியாம் மேலும் கூறியதாவது:

  • புது டேக்குகள் மற்றும் சீல் குளறுபடி: பாதுகாப்பாகச் சீல் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களில், எந்தவித குறிப்புகளும் எழுதப்படாத ‘புத்தம் புதிய’ முகவரிக்கார்டுகள் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

  • இயந்திரங்கள் மாற்றப்பட்டதா?: தேர்தல் ஆணையத்தின் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை மீறி புதிய டேக்குகளும் சீல்களும் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கையில், இந்த நீண்ட இடைவெளியில் இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாமோ என்ற இயற்கையான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவது நியாயமே என்றார்.

மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த நம்பகமான ஃபீட்பேக்!

சில தேர்தல் அதிகாரிகள் இயந்திரங்களில் எந்தத் தவறும் இல்லை என்று உடனடியாகப் பேட்டியளிப்பது நிலைமையை மேலும் திசைதிருப்புகிறது எனக் குறிப்பிட்ட அவர், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போன்ற ஒரு மூத்த தலைவர் இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாகக் களம் இறங்குகிறார் என்றால், அவருக்குக் கண்டிப்பான முறையில் நம்பகமான தகவல்கள் (Feedback) கிடைத்திருக்கும் என்பதையே இது காட்டுகிறது என்றார்.

நீதிமன்றத்தை நாடும் திமுகவின் அதிரடி முடிவு

தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே 19 எழுத்துப்பூர்வ கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. முழுமையான சிசிடிவி (CCTV) வீடியோ பதிவுகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்ற பிறகு திமுக தரப்பில் அடுத்த வாரம் மிகத் தீவிரமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சட்டப் போராட்டம் தமிழக அளவோடு நின்றுவிடாமல், அகில இந்திய அளவில் மிகப்பெரிய தேசியச் செய்தியாகவும் விவாதமாகவும் மாறும் என்றும் தராசு ஷியாம் கணித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பதில் குளறுபடி: கொளத்தூர் தொகுதியில் முறைகேடு என திமுக சட்டத்துறை குற்றச்சாட்டு!

MUST READ