Homeசெய்திகள்கட்டுரைசெந்தில் பாலாஜி வழக்குகள் மற்றும் குதிரைபேர விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு போனால் விஜய் அரசுக்கு அதிகரிக்கும்...

செந்தில் பாலாஜி வழக்குகள் மற்றும் குதிரைபேர விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு போனால் விஜய் அரசுக்கு அதிகரிக்கும் சிக்கல்கள்! – தராசு ஷியாம்

-

- Advertisement -

தமிழக அரசியலில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான வழக்கறிஞர் முனைவர் தராசு ஷியாம் அளித்த சிறப்பு நேர்காணலின் முக்கிய விவரங்கள் வருமாறு:

தராசு ஷியாம்

we-r-hiring

குதிரைபேர வழக்கும் உயர்நீதிமன்றத் தடையும்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எம்எல்ஏ குதிரைபேர விவகாரம் தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தரப்பு சட்டப் பிரிவுகளைச் சவால் செய்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் தடை பெற்றுள்ளது. இந்த வழக்கு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம், மற்றவர்களுக்கும் சட்டப்பூர்வமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ள விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் மற்றும் குதிரைபேர வழக்குகள்: ஒரே இணைகோட்டில் பயணம்!

செந்தில் பாலாஜியைச் சுற்றியே இந்த விவகாரங்கள் வலம் வந்தாலும், டாஸ்மாக் முறைகேடு வழக்குகளும் குதிரைபேர ஊழல் வழக்குகளும் ஒரே மாதிரியான சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளில் முன்ஜாமீன் வழங்குவது மற்றும் விசாரணையை எதிர்கொள்வதில் உள்ள சட்டப் பிரதிகளும், புழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் கணக்குகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமலாக்கத்துறை (ED) மற்றும் சிபிஐ விசாரணை குறித்த அச்சம்

இந்த வழக்குகளின் பரிமாணங்கள் விஸ்தரிக்கப்படும்போது, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வழக்கு விசாரணை தேர்ட் பார்ட்டி (Third Party) கைக்குச் செல்லும்போது அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் பட்சத்தில், ஆளுங்கட்சிக்கு அது கூடுதல் அரசியல் தலைவலியாக மாறக்கூடும் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பட்ஜெட் தயாரிப்பும் நிர்வாகச் சவால்களும்

தற்போதைய அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், மாநிலத்தின் வரவிருக்கும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில், உண்மையான மக்கள் பிரச்சனைகள், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் ஏரிகள் வறண்டு கிடப்பது போன்ற ஜீவாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!

MUST READ