அதிமுகவை பலாத்காரத்தை பயன்படுத்தி ஒன்றிணைத்தால் தமிழ்நாட்டில் மக்கள் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிற அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தயங்குகிறார் என்று ஊடகவியலாளர் சுமன்கவி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் ஓபிஎஸ்- ஐ சந்திக்க பிரதமர் மறுத்துள்ளது தொடர்பாக ஊடகவியலாளர் சுமன்கவி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு அவரை சந்திக்க ஓபிஎஸ் கூடுதல் முனைப்பை காட்டினார். அதிமுகவுக்குள் இணைய எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தயார் என்று சொன்னார். தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், தன்னை சார்ந்தவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கு உத்தமமாக இருந்து, அவர் சிறைக்கு சென்றபோது முதலமைச்சராக நியமித்தவர் ஓபிஎஸ். எடப்பாடி சசிகலாவின் ஆதரவாளர். இவர்களுக்கு இடையே போட்டி. ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிறந்ததே துரோகத்தில் தான். அன்றைய தினத்தில் எம்எல்ஏ-க்களை ஏலத்தில் வாங்குகிற திறன் எடப்பாடி பழனிசாமிக்குதான் இருந்தது. புரட்சியால் பிறந்தது அல்ல இந்த கட்சி. ஏலத்தில் பிறந்தது. தலைமைப் பொறுப்பு என்பது எடப்பாடி பழனிசாமி ஏலத்தில் எடுத்தது ஆகும். அதனால் இன்றைக்கும் எம்எல்ஏக்களும் நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அதிமுக என்கிற அமைப்புக்குள் ஒருவர் காலில் விழுவதற்கும் தயாராக உள்ளேன் என்று ஓபிஎஸ் சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி காலம் கடந்துவிட்டது என்று சொல்கிறார். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் போன்றவர்கள் தனக்கு போட்டியாக வந்துவிடுவார்கள் என்கிற பயம் காரணமாக எடப்பாடி அவர்களை சேர்க்க மறுக்கிறார். இதற்கிடையே, ஒரு பெரிய அண்ணன் வந்து நிற்கிறார். அவர் அதிமுக இப்படி சிதைவதற்கு காரணமாக இருந்த பாஜக. அதிமுகவை அப்படியே விட்டிருந்தால் சசிகலா வழிநடத்தியிருப்பார். அல்லது அடுத்தக்கட்டமான தலைவர்கள் வேறு யாரும் வருவார்கள். ஆனால் சசிகலாவை ஒரு நிமிடம் கூட அந்த இடத்தில் உட்கார வைக்கக்கூடாது என்று அன்றைக்கு பொறுப்பு ஆளுநரா இருந்த வித்யாசாகர் ராவை நகர்த்தி நெருக்கடி கொடுத்தார்கள். யார் உங்களை உடைத்தார்களோ அவர்களிடம் போய் எங்களை சேர்த்துவையுங்கள் என்றால் எப்படி செய்வார்கள்? அவர்களுக்கு ஒரு தேவை உள்ளது.
தனியார் தொலைக்காட்சி பேட்டியில், தங்களை பாஜகவிடம் சிக்க வைத்தது ஓபிஎஸ் தான் என்று எடப்பாடி சொல்லியுள்ளார். இரட்டை இலை சின்னம் போய்விட்டால் என்ன ஆவது என்று கேட்கிறார். நாளைக்கே ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்த்துவிட்டால், அவர் வழக்கை திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி, ஒபிஎஸ், தினகரனை தள்ளிவைத்துவிட்டார். முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ பிரதமர் மோடியை சென்று சந்திக்கிற அளவுக்கு வலிமையானவராக இருக்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் குடியரசுத் துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரையே, பாஜக நினைத்தால் அவரை பதவியை தூக்கிப்போட வைத்து விடுவார்கள். பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிட்டதால் அவர் பொறுப்பில் இருந்து விலகிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சொல்லியது. அதற்கு ஆதரவு தெரிவித்ததால் ஜெகதீப் தன்கரை இரவோடு இரவாக உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள். அப்படிபட்டவர்கள் எடப்பாடியை சகித்துக் கொள்வதற்கு காரணம் பலாத்கார முறையில் தமிழ்நாட்டிற்குள் நுழைய முற்பட்டால், மோசமான பின்விளைவுகளை சந்திப்பார் என்கிற ஒரு காரணத்திற்காக தான்.
அதிமுக சேராமல் பார்த்துக்கொள்கிற தேவை பாஜகவுக்கு இருக்கிறது. நாம் நினைப்பது போல அதிமுகவை பாஜக ஒன்றிணைக்காது. மாறாக அதிமுகவில் உள்ள பிரிவுகளோடு கூட்டணி அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமி நம்ப தகுந்த ஆள் இல்லை என்றுதான் பாஜக நினைக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் வரை நிற்கும் என்று உறுதி இல்லை. அந்த நெருக்கடிக்குள்ளாக தான் இவர்கள் அனைவரையும் அவரவர் இடங்களில் உட்கார வைத்துள்ளனர். செங்கோட்டையனை அங்கு கூப்பிட்டு பேசுவதும் சரி. வேலுமணி ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ் விழாக்களில் கலந்துகொள்வதும் சரி. இதை கட்டுப்படுத்துகிற இடத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லை. அவரை முழுமையாக கட்டுப்படுத்துகிற இடத்தில் பாஜகவும் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னரே அதிமுக பலவீனப்பட்டுவிட்டது. அதிமுக முழுவதும் அதிமுகவின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அதிமுகவை முழுமையாக உடைத்து தன் பக்கம் இழுக்க முடியவில்லை என்ற நிலைமையில் தான் பாஜக இழுத்துக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமியை நசுக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகிட போகிறது. எடப்பாடி சொன்னார் என்பதால் நான் ஓபிஎஸ், தினகரனை சந்திக்கவில்லை என்கிறார் பிரதமர் மோடி. அவரும், அமித்ஷாவும் நினைத்தால், எடப்பாடி பழனிசாமியை மிரட்டி எல்லோரும் ஒன்றாக இருங்கள் என்று சொல்ல எவ்வளவு நேரமாகும். இதை பகிரங்கமாக செய்தால் நாளைக்கு பொதுமக்களிடம் வாக்குகளை கேட்க முடியாது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார். இதன் மூலம் இந்துத்துவா கொள்கையை பரப்பலாம் என்று பாஜக திட்டமிடுகிறது. இதனை முன்கூட்டிய அறிந்த தமிழக அரசு, அரசின் நிதியில் மேம்பாட்டு பணிகளை செய்கிறோம் என்று அறிவித்தது. அந்த நிகழ்ச்சியை போற்றுவது அரசின் நோக்கம் கிடையாது. அதை இந்துத்துவா நிகழ்ச்சியாக மாற்றிவிடக்கூடாது என்பதுதான் அரசினுடைய நோக்கமாகும். இதனை அறிந்து அவசர அவசரமாக நான் வருகிறேன் என்று பிரதமர் மோடி வருகிறார். வடநாட்டவர்களை வென்றதற்காக தான் இந்த விழாவே நடைபெறுகிறது. கங்கையில் தமிழ்சங்கம் மூலம் விழா நடத்துகிறீர்கள். உங்களை தோற்கடித்து கடாரத்தில் வெற்றி கொண்டதற்காக தான் விழா நடத்துகிறோம். தோற்றுபோன உங்களுக்கு இங்கே என்ன வேலை உள்ளது? தூத்துக்குடி விமான நிலைய பெயர் பலகையில் இந்தியில் வைத்துள்ளதன் மூலம் வடஇந்தியர்களை வெற்றிக்கொண்ட இராஜேந்திர சோழனிடம் சென்று, ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் உங்களையே வீழ்த்திவிட்டேன் பார்த்தீர்களா? என்று சொல்வது போன்று தான் உள்ளது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.