spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடிக்கு இறுதிக்கெடு! ஆர்எஸ்எஸ் பகிரங்க எச்சரிக்கை! காந்தராஜ் நேர்காணல்!

மோடிக்கு இறுதிக்கெடு! ஆர்எஸ்எஸ் பகிரங்க எச்சரிக்கை! காந்தராஜ் நேர்காணல்!

-

- Advertisement -

அத்வானி போன்ற தலைவர்களுக்கு 75 வயதாகிவிட்டது என்று பாஜகவில் இருந்து வெளியேற்றியவர் மோடி. அதனால் மோடி தானாகவே பதவியில் இருந்து விலக வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளதா மருத்துவர் காந்தராஜ் கூறியுள்ளார்.

we-r-hiring

பிரதமர் பதவியில் இருந்து மோடி விலக ஆர்எஸ்எஸ் அழுத்தம் தருவது குறித்தும், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்தும் மருத்துவர் காந்தராஜ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 75 நிரம்பியவர்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். வாஜ்பாய், முரளிமனோகர் ஜோஷி, அத்வானி போன்றவர்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்று, அவர்களை அரசியலில் இருந்து அனுப்பியவர் மோடி தான். பிறகு மோடி மட்டும் எப்படி இருப்பார். அதனால் மோகன் பகவத், நீங்களாகவே போய்விடுங்கள் என்று மோடியிடம் சொல்கிறார். ஆனால் பிரதமர் பதவியை விட்டு மோடி செல்வாரா? எப்படி பட்ட உல்லாச வாழ்க்கை? நினைத்தால் வெளிநாட்டு பயணம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். மற்றொன்று பட்டங்களை எல்லாம் கொடுக்கிறார்கள். அதை வைத்து என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை. மற்றொருபுறம் மோடியை வெளியே போக சொல்கிறார்கள். பிரிக்ஸ் மாநாட்டில் மோடியை தவிர்த்துவிட்டு குருப் போட்டோ எடுக்கிறார்கள். அவரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் மோடியை பொறுப்பில் இருந்து நீக்க முடியாது. டிரம்ப் போன்று யாராவது ஒருவர் காலில் விழுந்து பதவியை பெற்றுவிடுவார். பதவி இல்லாமல் அவரால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியதில்லை. மக்கள் நல திட்டங்களை போட வேண்டியதில்லை. ராமனுக்கு கோவில் கட்டினாலும் பொண்டாட்டி இல்லாமல் போவார். இந்த சந்தோஷம் எல்லாம் பதவியை விட்டு போனால் கிடைக்குமா? ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமே அதுதான். கல்யாணமும் செய்யக்கூடாது. 75 வயது ஆகினால் பதவியில் இருந்து போய்விட வேண்டும். ஆனால் மோடியால் அந்த பதவியை விட்டு போகவே முடியாது. யாரையாவது பிடித்து, பதவியை வாங்கி விடுவார். அவர் எதையாவது செய்து மோகன் பகவத்தை வெளியே அனுப்ப பார்ப்பார். அமித்ஷாவுக்கும் 75 வயதாக போகிறது. அதனால்தான் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பினார். கட்சிக்குள்ளே கேள்வி எழ தொடங்கிவிட்டது.

பீகாரில் வாக்காளர் திருத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதாரை ஒரு அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறார்கள். மத்திய அரசு கொடுத்த ஆதாரை, அவர்களே ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறார். பிறகு எதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள். ஆதாரில் பிறப்பு, திருமண விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளன. பிறகு எதற்கு மற்ற ஆவணங்களை கேட்கின்றனர். காங்கிரஸ் தோல்வி மனப்பான்மையில் பேசுவதாக பாஜகவினர் சொல்கின்றனர். இவ்வளவு அயோக்கியத்தனத்தை செய்கிறபோது, காங்கிரஸ் எப்படி வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளை நிராயுதபாணியாக நிற்க வைத்துவிட்டு, வில், அம்பு, அணுகுண்டு என எல்லாற்றையும் வைத்துக்கொண்டு பயந்துவிட்டியா என கேட்டால் என்ன அர்த்தம். வெற்றி பெற்ற மாநிலங்களில் அமைதியாக இருப்பதாகவும், தோல்வி அடைந்த மாநிலங்களில் குற்றம்சாட்டுவதாகவும் சொல்கிறார்கள். பாஜக தோல்வி அடைந்த மாநிலங்கள் எத்தனை? ஏன் தமிழ்நாட்டில் வந்து விளையாட்டு காட்டுவது  இல்லை? தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டது என்பதை காட்டுவதற்காக ஒரு சில மாநிலங்களில் நீங்கள் தோற்கிறீர்கள். ராகுல்காந்தி பயந்துவிட்டார் என்று பாஜக சொல்ல காரணம், எங்களிடம் வாக்கு இயந்திரம் உள்ளது என்பதால்தான்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் மக்களை நேரடியாக சந்திக்கிறார்.திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களை சந்திக்கிறார்கள். நாடு முழுக்க தேர்தல் நேர்மையாக நடந்தால் ஒரு இடத்தில் கூட பாஜக வராது. மோடி தோற்பார். டெபாசிட் வாங்கினால் பெரிய விஷயம். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலேயே எந்த விதமான வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தையும், அதிகாரிகளையும் கைகளில் வைத்துக்கொண்டுதான் பாஜகவினர் அவ்வளவு அதிகாரமாக பேசுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யாத்திரை செல்கிறார். அவருடன் எதற்காக பாஜகவினர் செல்கின்றனர். வானதி சீனிவாசன் போன்றவர்கள் எதற்காக எடப்பாடி பழனிசாமியுடன் செல்கிறார். முருகர் மாநாட்டில் முருகரை தெலுங்கராக மாற்றினார்கள். அதற்காகவே பாஜகவினரை உள்ளே தள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுபயணத்தின் மூலம் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்புகிறார். கனவு காணுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.  சில காரணங்களுக்காக எடப்பாடி அப்படி சொல்கிறார். பாஜக கூட்டணியில் தேர்தல் ஆணையம் உள்ளது. கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் இவர்கள்தான் வெற்றி பெற்றனர் என்று மாற்றி எழுதி கொடுத்தால் என்ன செய்வது? மற்றவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளோடும் மக்களோடும் கூட்டணி வைப்பார்கள். ஆனால் பாஜக தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைக்கிறார்கள். அதனால் தான் பீகாரில் கலவரம் எல்லாம் வருகிறது. இவ்வளவு நாட்களாக வாக்காளர் பட்டிலை திருத்தாமல், இப்போது மேற்கொள்வது ஏன்? பந்தயத்தில் கலந்துகொண்டால் தானே வெற்றி பெறுவீர்கள். தகுதிநீக்கம் செய்துவிட்டால் எப்படி கலந்துகொள்வீர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ