spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநாதகவின் 234 வேட்பாளர் பட்டியல்! சங்கிக்கும் சாதி வெறியனுக்கும் சீட்!

நாதகவின் 234 வேட்பாளர் பட்டியல்! சங்கிக்கும் சாதி வெறியனுக்கும் சீட்!

-

- Advertisement -

பாஜகவில் இருந்து வந்த அம்பேத் ராஜன், மணப்பாறையில் ஆணவக் கொலை செய்ய முயன்ற நபர்களை சீமான் வேட்பாளராக நிறுத்தற்கான காரணம் என்ன? என்று பத்திரிகையாளர்கள் இந்திரகுமார், மில்டன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

we-r-hiring

நாம் தமிழர் கட்சி சார்பில் 234  தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் பின்னணி குறித்து இந்திரகுமார் தேரடி, மில்டன் ஆகியோர் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் சீமான். அவர்களில் இருவர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் மக்களை அதிகாரத்திற்கு கொண்டுவர போராடிய தலைவர் கான்ஷிராம். அவருடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சியில் போராடியவர் மயிலாடுதுறையை சேர்ந்த அம்பேத்ராஜன். அவருக்கு நாம் தமிழர் கட்சியில் சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். மாயாவதி, 2 முறை எம்.பி. சீட் வழங்கிய அம்பேத்ராஜன் நாம் தமிழர் கட்சிக்கு வந்தது பெரிய விஷயம்தான். ஆனால் இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்துள்ளார். அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாக அவர், எல்.முருகன் அழைத்தன் பேரில் பாஜகவில் சேர்ந்துள்ளார். ஆனால் அங்கு சீட்டு தராததால், ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றுள்ளார். அந்த கட்சியில் இருந்து விலகும் நபர்கள், சமூக செயற்பாட்டாளர்களாக மாறுவார்கள். ஒருபோதும் பாஜகவுக்கோ, பாசிஸ்ட்கள் உடனோ செல்ல மாட்டார்கள். ஆனால் அம்பேத்ராஜன், நாம் தமிழர் கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளார்.

மற்றொரு சர்ச்சைக்குரிய வேட்பாளர் மணப்பாறை தொகுதியை சேர்ந்தவர். தனது உறவுக்கார பெண் காதலிக்கும் விவரத்தை அறிந்துகொண்ட வேட்பாளர், அந்த இளைஞரை கடத்திவந்து கட்டிவைத்து தாக்கியுள்ளார். மேலும், அவருடைய ஆணுருப்பை தீவைத்து எரித்துள்ளார். இதற்காக கைதும் செய்யப்பட்டிருக்கிறார். அப்படியான சாதி மனநோய் கொண்ட அயோக்கியனை, 234 வேட்பாளர்களில் ஒருவராக சீமான் நிறுத்தியுள்ளார். ஆம் ஆத்மி, தவெக போன்ற கட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆள் இல்லை என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 35 லட்சம் வாக்குகளை பெற்ற சீமானுக்கு, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை பார்த்து நிறுத்துவதற்கா பஞ்சம் உள்ளது. உங்கள் கட்சிக்கு மாதம் மாதம் நிதி தருபவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டியதுதானே. அப்படி இருக்கும்போது, சாதிய ஆணவக் கொலை செய்ய நினைத்த சாதி வெறியனுக்கு சீட் கொடுத்துள்ளார். சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என்று சொல்கிறார். அப்போது நீங்கள் சாதி வெறியனுக்கு சீட் கொடுத்தது என்ன கணக்கு? அப்போது நீங்கள் யார்?

பெரியாரை திட்டுபவர்கள் எல்லாம் பாஜகவின் பின்னால்தான் போவார்கள் என்று சொல்வதற்கு அப்பட்டமான சாட்சி சீமான். 234 தொகுதிகளையும் டீகோடு செய்தால் இன்னும் பலர் சிக்குவார்கள். பெண்கள் பார்த்து ஒதுக்கிய இடத்தில் தான் நானே போட்டியிடுகிறேன் என்று சீமான் சொல்கிறார். அதேநேரம் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுக்க வேண்டியது கடமை என்கிறார். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றுதான் பெரியார் சொல்கிறார். நாதக நிர்வாகி ஹிமாயூன் நடத்துகிற கல்லூரியில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்கள் பாதுகாப்புக்காக நாம் தமிழர் கட்சி எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை. மாறாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரே பாலியல் புகாரில் சிக்கி மன்னிப்பு கோரியவர் ஆவார். சாதி ஒழிப்பு, சமூக விடுதலைதான் தமிழர்களின் இனத்திற்கான உயர்வு என்கிறார். ஆனால் சாதி வெறியனுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்துள்ளார். பாஜகவில் இருந்து வந்த ஒருவரை வேட்பாளர் ஆக்கியுள்ளார்.

இதே விமர்சனத்தை திமுகவில் வைப்பார்களா? என கேள்வி எழுப்புகிறார்கள்.  கடந்த முறை மக்களவை தேர்தலில் கொ.ம.தே.க சார்பில் வேட்பாளராக முன்மொழியப் பட்டவர் அப்பட்டமான சாதி வெறியர். மேடையில் ஏறி தன்னுடைய சாதி குறித்து பேசினார் என்று விமர்சனத்தை எல்லோரும் முன்வைத்தோம். அதன் பிறகு வேட்பாளரை மாற்றினார்கள். அப்படி யோக்கியமானவர்களாக இருந்தால் நாம் தமிழர் கட்சியில் சாதிவெறியனை வேட்பாளராக நிறுத்தி இருக்கக்கூடாது. நீங்கள் எதற்காக காரைக்குடி தொகுதிக்கு சென்றீர்கள்? அதற்கு முன்பாக எதற்காக மாடு மாநாடு நடத்தினீர்கள்? எதற்காக பெரியாரை விமர்சித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். சாதி பார்த்து போடுகிற ஓட்டு எனக்கு தீட்டு என்று சொல்கிற சீமான், மதம் பார்த்து போடுகிற ஓட்டும் தீட்டு என்று சொல்ல வேண்டியது தானே. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் ஏன் இஸ்லாமிய வேட்பாளர்களாக நிறுத்துகிறீர்கள்? திமுக கூட்டணி இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்துவார்கள். அங்குள்ள சமுதாய அமைப்புகள் வேட்பாளர்களை நிறுத்துவர்கள். அவர்களை எல்லாம் தோற்கடிக்க பாஜகவின் அசைன்மெண்ட் அவ்வளவுதானே.

பிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!

நீங்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு இந்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது தானே. நீங்கள் தான் சிறுபான்மையினர் என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களே. பின்னர் ஏன் சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியில் போய் சிறுபான்மை வேட்பாளரை நிறுத்துகிறீர்கள்? சீமான் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்தியதற்கு காரணம், பொது வேட்பாளருக்கு தலித் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதற்காக பாஜக உடன் பேசிய பேரமாகும். சீமான் நேரடியாக பாஜகவுக்கு ஒத்து ஊத போய்விட்டார். புதிதாக பாஜகவின் வளர்ப்பு பிராணியான விஜயை விட நான் ஒருபடி மேலே  போய் பெரியாரையே திட்டுகிறேன் என்று சொல்லி, வேறு ஒரு வேலைப்பிரிவை எடுத்துக்கொண்டு வேலை பார்க்கிறாரே தவிர, இவர்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்து தான் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

MUST READ