spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது என்பது உறுதியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முதலமைச்சரை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டிருக்கும் காணொலி பதிவில் கூறியிருப்பதாவது :- திமுக – காங்கிரஸ் இடையே நிலவி வந்த குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ராகுல்காந்தி மீதே சந்தேகம் எழுகிற சூழல் கடந்த வாரம் ஏற்பட்டது. மத்தியில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரசுக்கு போதிய வலிமை கிடையாது. தற்போதுதான் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 100 இடங்களை பிடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டணி கட்சி திமுக. மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு உரிய மரியாதையை வழங்க மாட்டார்கள். அண்மையில் பீகாரில் ஆர்.ஜே.டி உடன் தொகுதி பங்கீடு விவகாரத்தில் பிரச்சினை செய்து, தேஜஸ்வி யாதவை காலி செய்துவிட்டனர்.

இப்படியான சூழலில் மத்திய அரசை எதிர்க்க காங்கிரசுக்கு வலிமையான கூட்டணி கட்சியாக திமுக மட்டுமே உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பதோ, அதிகாரத்தில் பங்கு கேட்பதோ தவறில்லை. ஆனால் அதை கேட்பதற்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக மீது இருந்த நம்பிக்கைகளை எல்லாம் உடைத்துவிட்டு, திமுகவினரின் உழைப்பை எல்லாம் உதாசினப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினரை கொம்புசீவி விட்டனர். ஆனால் திமுக அமைதியாக இருந்து கொண்டே பதிலடி கொடுத்துவிட்டது.

mk stalin rahul gandhi

கடந்த வாரம கே.சி.வேணுகோபால் தமிழ்நாடு வந்தபோது அவரை சந்திக்க தயாரில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியினர் சிலர் தவெக உடன் கூட்டணிக்கு செல்வோம். திமுக செய்வது அது சரியில்லை. இது சரியில்லை என்று பொதுவெளியில் விமர்சனம் செய்தனர். தங்களால் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். திமுக அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கும் போது அடக்க மாட்டீர்களா? என்று கே.சி.வேணுகோபாலிடம் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்கேட்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டுள்ளார்?

அந்த கூட்டத்திலேயே வருண் சக்ரவர்த்தியிடம் தன்னுடைய பெயரை நீங்கள் தவறாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாவதாக கூறி, எச்சரித்து அனுப்பியுள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாகவோ, தொகுதிகள் தொடர்பாகவோ யாரும் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஆனால் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாடு அரசின் ரூ.5000 ஆல் எந்த பயனும் இல்லை என்று பதிவிட்டார். மாணிக்கம் தாகூர் ட்விட் மற்றும் பேட்டி மீது பேட்டி கொடுத்தார். இதனை சுட்டிக்காட்டி அவர்களை கண்டிக்காதது ஏன்? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். கூட்டணியில் இருந்து செல்வதாக இருந்தால் போகலாம் என்றும் முடிவு செய்துவிட்டார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேமுதி இணைந்தது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்து பேசினார். இதனால் தங்களுடைய 25 இடங்கள் கூட கிடைக்காதோ என்று காங்கிரஸ் கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சிங் தியோ ஆகியோர் நேற்று மாலை முதலமைச்சரை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது கனிமொழி உடனிருந்தார். திமுக – காங்கிரஸ் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள், எந்த எந்த தொகுதிகள் என்று திமுக தான் முடிவு செய்யும்.

இதனிடையே, திமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா போன்றவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பேச்சுவார்த்தையில் மிகவும் கறார் ஆனவர்கள். அவ்வளவு சீக்கிரமாக இடங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதற்கு பிறகு திமுக குழுவுடன், காங்கிரஸ் அமைத்துள்ள குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்வார்கள். தற்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பது உறுதியாகிவிட்டது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது இனிமேல் இருக்காது. காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டால் திமுக கூட்டணி மிக வலிமையானதாக மாறும் என்று பார்க்கப்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ