Homeசெய்திகள்கட்டுரைஉனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன – கவிஞர் வைரமுத்து கடிதம்

-

இசைஞானி இளையராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் தமிழ் சமுதாயத்தின் மாபெரும் ஆளுமைகள். அவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு குறிப்பாக அவர்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு அவர்கள் வழிகாட்டும் நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

கடந்த சில நாட்களாக இசைஞானி இளையராஜா குறித்தும் கவிப்பேரரசு வைரமுத்து குறித்தும் சமூகவலைத்தளங்களில் பல்வேறு விதமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இளையராஜா, வைரமுத்து ஆகிய இரண்டு பெரும் மேதைகளை உயர்த்தியும், தரம் தாழ்த்தியும் பேசுவது வேதனை அளிக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் இசையை குறித்தும் கவிப்பேரரசு வைரமுத்துவின் மொழி ஆளுமை குறித்தும் விமர்சனம் செய்வதற்கோ, விவாதம் செய்வதற்கான தகுதியோ அதற்கான ஆற்றலோ எவருக்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

இந்நிலையில் யூடியூபில் சில தரமற்ற நபர்கள் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜாவின் இசை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

200 நாள்களுக்கு மேல் ஓடிய அந்தப்படத்தின் பாடல் “அன்னக்கிளி உன்னைத் தேடுதே…” என்ற பாடல் இன்றும் மறக்கமுடியாத மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது.

கவிஞர் வைரமுத்து 1980ல் வெளிவந்த “நிழல்கள்” என்ற திரைப்படத்திற்கு எழுதிய “இது ஒரு பொன்மாலைப் பொழுது” என்ற முதல் பாடலுக்கு இளையராஜா இசை அமைத்தார்.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்த ஒரு கவிஞனை, ஒரு சிந்தனையாளனை வைரமுத்து என்ற பேராளுமையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.

இளையராஜா என்கிற இசை மேதையுடன் இணைந்த பின்னர்தான் வைரமுத்து மீது சூரிய ஒளி பட்டது. அவரும் சுடர்விட்டு எரிந்து பிரகாசமாக ஒளி வீசத் தொடங்கினார்.

வைரமுத்து எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா கொடுத்த இசையினால் ஒரே வருடத்தில் கவிஞரின் மொழி, ஆளுமை காற்று வழியாக கடல் தாண்டி ரெக்கை கட்டி உலகம் முழுவதும் பறந்தது. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா வைரமுத்து என்ற பெயரை பாமரனும் முனுமுனுத்தான். படித்தவன் கொண்டாடினான்.

இசைஞானி இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து என்ற கவிப்பேரரசு இல்லை. அதேபோன்று வைரமுத்துவின் தமிழ், அவர் கையாண்ட மொழி, இசைக்கு ஏற்ற பல்லவி அவை அனைத்தும் இளையராஜாவின் திறமைக்கு மாணிக்கமாக மகுடம் சூட்டியது.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

மொழி பெரியதா? இசைப் பெரியதா? என்றால் மொழியும் இசையும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. இரண்டும் வெவ்வேறானவை கிடையாது.

இருவரும் அவரவர் துறையில் வாய்ப்பிற்காக காத்திருந்தார்கள். கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்கள். இருவரும் தமிழ்ச் சங்கத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து இறுதியாக எழுதிய படம் 1986ல் வெளிவந்த “புன்னகை மன்னன்” என்ற திரைப்படம். அதன் பின்னர் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், முட்டல் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியதால் பிரிந்தார்கள். இன்று வரை பிரிந்தே இருக்கிறார்கள்.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

இளையராஜா வைரமுத்து இணைந்து பயணம் செய்த 6 ஆண்டுகளில்
ஆண்டுக்குச் சராசரியாக 30 படங்கள் என்ற கணக்கில் இசையமைத்ததாக வைத்துக் கொண்டாலும், 180 படங்களாகின்றன. ஒரு படத்திற்கு குறைந்தது
மூன்று பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஏறக்குறைய 540 பாடல்களை மட்டுமே, இளையராஜா இசையில் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்று கணிக்க முடிகிறது.

1980 முதல் 1986 வரை உள்ள காலக்கட்டத்தில் தோராயமாக 450 பாடல்களில் இருந்து 600 பாடல்கள் வரை இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கலாம். அந்த காலக்கட்டம் வைரமுத்துவிற்கும் இளையராஜாவிற்கும் பொற்காலம் என்றே சொல்லலாம்.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

அதை கவிஞர் வைரமுத்துவே கூறியிருக்கிறார்.

இசை ஞானியே! என்று தொடங்கும் அந்த கடிதத்தில்

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தை தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் பொதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்… என்று நீண்டு செல்கிறது அந்த கடிதம்.

மேலும் கவிஞர் எழுதுகிறார் திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம் தான். மனசில் மிச்சமில்லாமல் பேசி சிரித்ததும் உன்னோடு தான் என்று நட்பின் ஆழத்தை உருகி எழுதியிருப்பார்.

உனது பட்டறையில் எனக்கெதுராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன - கவிஞர் வைரமுத்து கடிதம்

இறுதியில் நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன… ஆனால் எனது யுத்தம் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை என்று அந்த கடிதத்தை முடித்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா மீது வைரமுத்து வைத்திருந்த அன்பு குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அளவிற்கு நட்புடன் இருந்தவர்களை காலம் அவர்களை பிரித்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

MUST READ