spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா? அல்லது தனி அணி அமைத்து திமுக கூட்டணியில் போட்டியிடுவதா? என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஓபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் பிரபல சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சட்டப்பேரவையின் நிறைவு நாளில் ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். மேலும் திமுக ஆட்சி மீண்டும் வரும் என்றும் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஓபிஎஸ் கடைசி வரை அமித்ஷாவை நம்பினார். கடைசி வரை பேசியும், பாஜக இபிஎஸ்-ஐ தான் பெரிதாக கருதியது. அவர் பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்களை சந்திக்க, இபிஎஸ்ன் அனுமதியை பெற வேண்டி இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

பாஜக வற்புறுத்தலின் அடிப்படையில்தான் அவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் அனுமதித்தார். பாஜக அவரை முற்றிலும் கைவிட்டுவிட்டது. அடுத்தக்கட்டமாக எங்கே போகலாம் என்று பார்க்கிறபோது, அவருடைய ஆதரவாளர்கள் திமுக பக்கம் போகலாம் என்று சொன்னார்கள். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் போன்றவர்கள் திமுகவுக்கு போய்விட்டது, பெரிய அடியாக அமைந்தது. இந்த சூழலில் ஓபிஎஸ் திமுகவுக்கு போகக்கூடாது என்று பாஜக மீண்டும் உள்ளே வந்தது. இபிஎஸ் அதிமுகவில் சேர்க்காவிட்டாலும், என்டிஏ கூட்டணியில் சேரும்படி வற்புறுத்தினார்கள்.

பாஜகவை  பொறுத்தவரை தினகரன் சேர்ந்தாலும் முக்குலத்தோர் வாக்குகள் வருமா? என்று அச்சம் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி எதை பற்றியும் கவலைப்படாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நமக்கு என்ன ஆனாலும் பாஜக பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார். திமுக பிடிக்காவிட்டால் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று பழைய நினைப்பிலேயே இருக்கிறார். தேர்தல் களமே மாறிவிட்டது என்பதை அவர் உணர்ந்தது மாதிரியே தெரியவில்லை. பாஜகவுக்கு கிடைக்கும் உளவு தகவல்கள் மூலம் அதிமுக தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது தெரிகிறது. அப்படி இருந்தும் இபிஎஸ் அமைதியாக இருக்கிறார் என்பதால் உள்ளே புகுந்து அன்புமணி, டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்தார்கள்.

தேமுதிகவை சேர்க்கும் பணியை மட்டும் அதிமுகவை மேற்கொள்ளும் படி சொன்னார்கள். ஆனால் ராஜ்யசபா இடம் வழங்கும் விவகாரத்தில் இபிஎஸ் இழுத்தடித்தார். அதனால் தேமுதிக கை நழுவி போய்விட்டது. அதன் காரணமாக பாஜக இபிஎஸ் மீது கோபத்தில் உள்ளனர். அவர்கள் தான் ஓபிஎஸ்க்கு தடை போட்டு வைத்திருந்தனர். அதன் காரணமாக மௌனமாக இருந்து வந்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று திமுகவில் போய் சேர்ந்ததும், ஓபிஎஸ்க்கு தைரியம் வந்துவிட்டது. அதன் காரணமாக முதலமைச்சரை போய் சந்தித்து விட்டார்.

ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்த பிறகு அவருக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. முதலாவது நேரடியாக திமுகவில் போய் சேர்வதா? அல்லது ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி திமுக உடன் கூட்டணி சேரலாமா? என்று யோசிக்கிறார். திமுகவில் ஓபிஎஸ்க்கு உரிய மரியாதை கொடுக்க தயாராக உள்ளனர். அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் அளவிலான பொறுப்பு வழங்கவும் தயாராக உள்ளனர். அதை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.  அதிமுகவில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போவதில் பிரச்சினை இல்லை. ஆனால் தலைமை பொறுப்பில் இருந்துவிட்டு சென்றால் அது சிக்கலாகும்.

அவர் திமுகவில் சேர்ந்தால் அதிமுகவுக்கு உரிமை கோருகிற தகுதியை ஓபிஎஸ் இழந்துவிடுவார்.  அதேவேளையில் தனி அமைப்பாக தொடங்கி, திமுக ஆதரவுடன் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதிமுகவுக்கு உரிமை கோர வாய்ப்புகள் உள்ளன. ஓபிஎஸ்ஐ பொருத்தவரை எடப்பாடியை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதற்கான வழி என்ன என்றுதான் யோசிக்கிறார். இல்லாவிட்டால் இன்றைக்கே ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தற்போது வலிமையான அணி என்கிற கருத்துருவாக்கம் திமுக அணிக்கு கிடைத்துவிட்டது. திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் ஒரு ஓட்டையை போட்டது. கட்டுக் கோப்புடன் இருந்த கூட்டணியை சீர்குலைத்தனர். மாணிக்கம் தாகூர் புண்ணியத்தில் அப்படியான நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது காங்கிரஸ் தலைமை தலையிட்டு, மாணிக்கம் தாகூரை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். காங்கிரஸ் திமுக உடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறபோது, இதுபோன்ற களேபரங்களை ஏன் செய்தது என்கிற கேள்வி எழுகிறது. அவர்களை பொருத்தவரை தவெக அணிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அப்படி செல்கிறபோது வெற்றியும் கிடைக்கலாம், தோல்வியும் கிடைக்கலாம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறும்பட்சத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறும். அது பாஜகவுக்கு சாதகமான விஷயமாகும். இது குறித்து காங்கிரஸ்தான் தான் பரிசீலிக்க வேண்டும்.

அதேவேளையில் திமுக கூட்டணி வலிமையான கூட்டணி என்கிற தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடி ஏற்படுத்திய தோற்றத்தை மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே எடப்பாடி பழனிசாமி கோட்டை விட்டுவிட்டார். தன்னுடைய மடியில் பவர் தானாக வந்து விழும் என்று எடப்பாடி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது அந்தக்காலம் என்று யாராவது சொன்னால்தான் புரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ