spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆட்டத்தை முடித்த ஸ்டாலின்! சோலி முடிந்த விஜய் கனவு! வல்லம் பஷீர் நேர்காணல்!

ஆட்டத்தை முடித்த ஸ்டாலின்! சோலி முடிந்த விஜய் கனவு! வல்லம் பஷீர் நேர்காணல்!

-

- Advertisement -

அரை நூற்றாண்டுகளாக தேர்தலை சந்தித்து வரும் இயக்கம் திமுக. அதற்கு தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று திவெக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள்  தொடர்பாக திராவிட வெற்றிக்கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் ராகுல்காந்தியை, கனிமொழி சந்தித்து பேசியபோதே, பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. இங்கு இருக்கும் சலம்பல்கள் காங்கிரஸ் கட்சியினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பேசுகிற கருத்து மட்டுமே. காங்கிரஸ் பலமான ஒரு கட்சி. இன்றைக்கு பலமிழந்து உள்ளது. தேர்தலில் அது ஒரு பங்களிப்பை அளிக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி., தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு வெற்றியை பரிசளிப்பது தமிழ்நாடு. அதற்கு காணமாக இருப்பது திமுக. இந்த உண்மையை காங்கரஸ் மறக்கவே கூடாது. 2019ல் ராகுல்காந்தியால் ஏன் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக வரமுடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பிக்களை அனுப்பியதன் வாயிலாக தற்போது அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்ததற்கு காரணம் திமுக தான். இந்த வெற்றிக்கு பின்னால் ஓடி உழைத்த கால்கள் திமுகவினுடையது.

திமுக கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை. அடிமை நிலையில் வைத்திருப்பதாக கார்த்தி சிதம்பரம் கூறுகிறார். அண்மையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி மாணவர் கூட்டம், ஐ.யு.எம்.எல், சி.பி.எம் நிகழ்ச்சிகளிலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைபயணம் போன்றவற்றிலும் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகளை இதற்கு மேல் எப்படி மதிப்பது? முஸ்லீம் முகல்லா ஜமாத் லீக் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், தனக்கு வரவே முடியாத சூழல் இருந்ததாகவும், ஆனால் பேராசிரியர் காதர் மொகிதீன் தன்னை அழைத்தார். அவர் அழைப்பை நான் மறுதலிக்க மாட்டேன். இன்றைக்கு அல்ல என்றைக்கும் என்று சொன்னார். இதன் மூலம் கூட்டணியில் சிறிய பங்களிப்பை அளிக்கக்கூடிய கட்சிகளுக்கு கூட திமுக பெரிய முக்கியத்துவம் அளிக்கிறது. திமுகவுக்கு பேச்சுவார்த்தைக்குழு அமைப்பது மட்டும் வேலை அல்ல. காங்கிரசுக்கு சீட்டு வாங்குவது மட்டும் தான் கணக்கு. ஆனால் திமுகவுக்கு தேர்தல் வேலைகள் ஆயிரம் இருக்கு.

2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிய இயக்கம் திமுக. எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்தபோது, காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தனர்?  எஸ்.ஐ.ஆர் ஆல் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறித்து விடாமல் தடுத்து நிறுத்திய கேடயம் திமுக. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எந்த காங்கிரஸ் கட்சிக்காரர் வந்தார்கள்? குழு அமைப்பது என்பது பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை பெறுவதற்காக மட்டும்தான். எத்தனை இடங்கள் தர வேண்டும் என்பதெல்லாம் திமுகவும், காங்கிரஸ் தலைமையும் பேசி முடிவாகி விட்டது. காங்கிரசில் ஒரு பிரிவினர் தவெக கூட்டணிக்கு செல்ல விரும்புவதாகவும், எனவே விரைவாக பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்கிறது. திமுகவுக்கு காங்கிரஸ் மட்டும் கூட்டணிக்கட்சி அல்ல. இன்னும் 18 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அனைவரிடமும் சுமூகமாக பேசி முடிக்க வேண்டும். அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும். திமுக ஒரு கட்டமைப்பு உள்ள கட்சி.அரை நூற்றாண்டு காலம் தேர்தலை சந்தித்து வருகிற திமுகவுக்கு, காங்கிரஸ் வகுப்பு எடுக்க தேவையில்லை. திமுகவுக்கு நீங்கள் வகுப்பு எடுத்தா? இத்தனை ஆண்டுகளாக திமுக உங்களுக்கு கொடுத்தது? அதை யோசித்துவிட்டு திமுகவுக்கு பாடம் எடுக்காதீர்கள்.

சேலத்தில் தவெகவின் மக்கள் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் தாங்கள் நடத்துகிற கூட்டத்தை பார்த்து ரேம்ப் வாக் நடத்துவதாக புகார் கூறுகிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரேம்ப் வாக் சென்றார். அப்போது கமலை பார்த்து விஜய் இப்படி செய்தார் என்று சொல்லலாமா? 2021 சட்டமன்றத் தேர்தலின்போது இதேபோன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ரேம்ப் வாக் நடத்தினார். இது ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்றுதான். நீங்கள் புதிதாக தமிழ்நாட்டிற்கு வந்து அறிமுகப்படுத்தியது இல்லை. சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, ஏன் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றுகிறீர்கள்?  வெறுமனே காவல்துறை அனுமதி மறுத்து விட்டதால் மாற்றியதாக சொல்கிறார்கள். அரசு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை சொல்கிறது. அதை நான் பின்பற்ற மாட்டேன் என்று நீதிமன்றம் வரை செல்கிறார்கள். அதன் பிறகு ஏன் திடீரென நிர்வாகிகள் கூட்டம் என்று மாற்றுகிறீர்கள்? அப்போது உங்களுடைய நிலைப்பாட்டில் ஒரு உறுதித்தன்மை இல்லை. ஒரு கட்டுப்பாடு அற்ற, தறிகெட்டு ஓடுகிற ஒரு  கூட்டத்தை வைத்துக் கொண்டு நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்துகிற வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தவெக இன்னும் தேர்தலுக்கு தயார் ஆகாத நிலையிலேயே நகர்கிறது. தற்போதும் கூட்டங்கள் நடத்துவதில் யுத்தம் செய்வது. வேறுவிதமாக கூட்டம் நடத்த வேண்டும் என்று திட்டமிடுவதுமாக அவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில் விஜய், வாயை திறந்தாலே எல்லா கட்சிகளும் பயப்படுகின்றன. குறிப்பாக டெல்லி விஜயை கண்டு பயத்தில் இருப்பதாக செங்கோட்டையன் சொல்கிறார். அப்படி பயத்தில் இருப்பதால் தான் டெல்லிக்கு வாங்க… என்று கூப்பிட்டது சிபிஐ. சிபிஐ சென்னை அலுவலகத்தில் விஜயை விசாரிக்காமல் டெல்லிக்கு அழைத்தது ஏன்? என்று அவரிடமே கேளுங்கள். சரிக்கு டெல்லியில் விசாரணைக்கு போனபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினாரா? ஜனநாயகன் என்று ஒரு படம் கிடப்பில் கிடக்கிறது. மத்திய அரசின் தணிக்கை வாரியம் தான் அதற்கு பொறுப்பாகும். டெல்லி நடுங்குவதாக இருந்தால்,  யாராவது ஒரு வார்த்தை ஜனநாயகன் குறித்து பேசினார்களா? எனவே யாருக்கு? யாரை கண்டு நடுக்கம் உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ