இவளின் மறுப்பக்கம்
எவர்சில்வர் என்று அழைக்கப்படும் ஸ்டீல் பாத்திரம் நாம் அனைவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள். இந்த பாத்திரம் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?
இதற்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை நம்மிள் எத்தனை பேர் யோசித்து இருப்போம். அதை தயார் செய்பவரின் பின்னணியை பார்ப்போம்.
அப்படி ஒரு நாள் அந்த பாத்திரத்தை வாங்குவதற்காக நாங்கள் சென்று பார்த்தவர் தான் இந்த ஜோதி அக்கா. ஒரு ஆண் செய்யும் வேலையை பெண் செய்து கொண்டு இருக்கிறாரே.
என்று என் மனம் கூறிய வண்ணம் அவர் பக்கத்தில் சென்று விசாரணை செய்ய ஆரமித்தோம்.
(ஜோதி அக்கா) நான் இந்த வேலையை 11ஆண்டுகளாக செய்து வருகின்றேன் போதிய வருமானமாக இல்லை என்றாலும் என் பிள்ளைகளுக்காக இதை செய்து கொண்டு இருக்கிறேன் என்றார்.
நீங்க என்ன படிச்சு இருக்கிங்க அக்கா என்று கேட்டேன், அதற்கு நான் பெருசா ஒன்னும் படிக்கலமா எனக்கு 17வயசுலையே கல்யாணம் பண்ணிடாங்க, சின்ன வயசுலையே கல்யாணம் ஆச்சு அதனாலா என் முதல் குழந்தை பிறந்து இறந்தது.
அதன் பின் தான் எனக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளை பிறந்தார்கள், என் கணவர் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் ஆனால் அவருக்கோ நானென்றால் பிடிக்காது போல் இருக்கிறது.
ஏனெனில் என்னை தனியாக தவிக்கவிட்டு 2010 ஆண்டு ஒரு ரயில் விபத்தில் இறந்துவிட்டார்.
இரு சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு யாரிடம் அடைக்கலம் கேட்பது என்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தேன். உடன் பிறந்தோரும், உறவினரும் கூட, என்னிடம் பணம் இல்லை என்பதனால் என்னை ஏளனமாக பார்ப்பார்கள்.
யாரையும் நம்பி நாம் இருக்க கூடாது. என்று என்னி வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன், ஆனால் நான் படிக்கவில்லை என்பதனால் யாரும் எனக்கு வேலை கொடுக்கவில்லை.
பசி பசி என்று என் குழந்தைகள் என்னிடம் கேட்டு அழும்பொழுது ஒரு வேலை உணவு கூட தர முடியாமல் பட்ட வறுமையின் கஷ்டம் என்னவென்று எனக்கு தான் தெரியும்.
அதனால் என் வீட்டு பக்கத்தில் உள்ள ஸ்டீல் பட்டறையில் 2௦10-ல் 200ரூபாய் சம்பள்ளதிற்கு வேலைக்கு சேர்ந்தேன், சம்பளம் குறைவு தான் ஆனால் அதில் தான் என் பிள்ளைகளுக்கு சாப்பாடு, கல்வி அனைத்தும் சமாளிக்க வேண்டும்.
இதில் வீட்டு வாடகை என பலவும் உள்ளது, இந்த சம்பளம் போதாது என்றதால் அதே பட்டறையில், தினம் 350ரூபாய் சம்பளத்திருக்கு மிஷினில் வேலை செய்தேன்.
அதை செய்த பொழுது சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள் உனக்கு ஏன் இதெல்லாம், உன்னால எல்லாம் இத பண்ண முடியாது.
ஆண்கள் நாங்களே இதில் கஷ்ட படுவோம் நீ எப்படி இத பண்ணுவ என்று எல்லாம் கேட்டார்கள். ஆனால் கேட்பவர்கள் யாரும் நமக்கு உதவ போவதில்லை, நம்மை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதனால் அவர்கள் பேச்சை எல்லாம் பொருட்படுத்தாமல் மிஷினில் நின்று வேலைசெய்ய தொடங்கினேன், மிகவும் கடினமான வேலை, காலை 6மணி முதல் மாலை 7மணி வரை மிஷினில் நின்று கொண்டே இருக்கவேண்டும்.
அதிலும் சிறிது கவனம் சிதறினால் கூட மிஷினில் கை மாட்டிக்கொல்லும், அந்த பாத்திரத்தை மெருகு ஏற்றும் பொழுது வெப்பத்தில் கைகள் சுடும், நெருப்பு தெறிக்கும் பொழுது அவை கண்களில் படும்.
எப்படி அக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த வேலை செய்யுரீங்க என கேட்டதற்கு, நான் இப்போ இது கஷ்டம்னு நான் விட்டுவிட்டால் என் குழந்தைகள் அதை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள் என்று எண்ணி இதை செய்து கொண்டு இருக்கிறேன் என்றார்.
இப்பொழுது தினக்கூலியாக தினம் 600ரூபாய் வாங்குகிறேன், ஆண்கள் செய்யும் வேலையெல்லாம் உனக்கு எதற்கு என்று கேட்டார்கள் ஆனால் அவர்கள் செய்து முடிக்கும் நேரத்தை விட சீக்கிரமாக நான் செய்து முடித்து விடுவேன்.
என் மகள் காதல் திருமணம் செய்துகொண்டாள். என் விருப்பத்துடன் தான் திருமணம் நடந்தது. அவளுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். மகன் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறான். படிப்பு முடிந்தவுடன் இரவுவேலை(Night Shift) செய்து கொண்டு படிக்கிறான்.
ஆனால் என் ஆசையெல்லாம் அவன் படித்து முடித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என்பது தான், ஏன் என்றால் என் கணவரை இழந்து தவித்தப்பொழுது, நீ எல்லாம் எப்படி இவங்கள பாத்துக்கப்போற, படிக்க வெக்கப்போற என்று எல்லாம் கேட்டார்கள், அவர்கள் முன் என் பிள்ளைகளை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.
”இந்த சமுதாயத்தில் நமக்காக நாம் வாழ்கிறோமே தவிர மற்றவர்களுக்காக அல்ல”
மற்றவர்கள் பார்வையில் நாம் என்னவாக தெரிகிறோம் என்று நினைப்பதை விட நம் பாதையில் நாம் சென்றாலே போதும்”.
தமிழக அரசிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றை மட்டுமே,நான் கணவரை இழந்தவள் எனக்கான விதவை உதவிதொகை இன்னும் கிடைக்கவில்லை, பலமுறை நான் விண்ணப்பித்தேன் ஆனால் அதற்க்கான எந்த நடவடிக்கையும் அரசு ஊழியர்கள் எடுத்ததாக தெரியவில்லை. இதற்கான தக்க நடவடிக்கையை நீங்கள் எடுப்பதானால் எனக்கு மட்டுமில்லாமல் என்னை போன்ற பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கும் உதவியாக இருக்கும்
என்று கூறிய வண்ணம் மீண்டும் வேலை செய்ய தொடங்கிவிட்டார்.