தனிக்கட்சி தொடங்குவதாக பாஜக தலைமைக்கு மிரட்டல் விடுத்ததால், அண்ணாமலை கட்சியில் இருந்தே தூக்கி வீசி விட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிற முயற்சியில் இருந்தார். தனிக்கட்சி தொடங்கினால் சிறைக்கு போக வேண்டி வரும் கட்சி தலைமை கூப்பிட்டு மிரட்டியது. எனவே அவரால் நினைத்ததை செய்ய முடியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அமித்ஷா, மோடியின் ஆதரவை பெற்று மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடலாம் என நினைத்தார். அதற்கு சமிக்ஞை காட்டுகிற விதமாக அமித்ஷா, டிடிவி மற்றும் ஓபிஎஸ் இடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்.
பாஜகவில் தனக்கு தென் மண்டல அமைப்பாளர் பதவி வழங்குவார்கள் என்றும் அண்ணாமலை எதிர்பார்த்தார். அண்ணாமலை தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதேவேளையில் டெல்லி தலைமை ஏதாவது பொறுப்பு கொடுத்தால் ஏற்பதாகவும் சொன்னது அதனால் தான்.

டெல்லியில் தனக்கு பொறுப்பாளர் பதவி வழங்க வேண்டும் என்பதில் அண்ணாமலை மிகவும் உறுதியாக உள்ளார். பதவி வாங்கும் விவகாரத்தில் அவர் எடப்பாடி பழனிசாமியையே சம்மதிக்க வைத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் அண்ணாமலைக்கு கட்சியில் நல்ல பதவி தரப்போவதாக என்னிடம் சொன்னார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை நெருக்கமாகவே உள்ளார். அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்த அழுத்தம் தரப்படவில்லை. அண்ணாமலையின் நடவடிக்கை என்பது முழுமையாக வியாபாரம் சார்ந்து போய்விட்டது. அவர் பல்வேறு இடங்களில் மாமுல் வாங்குகிறார். திமுக அமைச்சர்களை மிரட்டி கட்டிங் வாங்குகிறார்.
திமுகவினரோடு இணைந்து அவர் செயல்படுவது பாஜக தலைமைக்கு பிடிக்கவில்லை. அண்ணாமலைக்கும், நயினாருக்கும் இடையே சுத்தமாக ஒத்துபோகவில்லை. ஒரு கட்டத்தில் அண்ணாமலை, கட்சி தலைமையே மிரட்ட தொடங்கிவிட்டார். அதனால் அவரை ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டனர். அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு தருவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது உண்மை. ஆனால் அவர் கட்சியை மிரட்டுகிற நிலைக்கு சென்றதால் அவரை தூக்கி போட்டுவிட்டனர்.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி, விஜயின் தவெக உடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கினால் அண்ணாமலையின் உறவினர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும். நிர்மலா சீதாராமன், கே.டி.ராகவன் போன்ற அண்ணாமலை எதிர்ப்பாளர்கள் அதில் மிகவும் தீவிரமாக உள்ளனர். எனவே தற்போது அண்ணாமலை கட்சி தொடங்க மாட்டார். தவெகவில் கூட்டணிக்கான வாய்ப்பு என்பது ராமதாஸ் தான். ராமதாஸ் தரப்பில் 60 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 40 இடங்களுக்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது 25 தொகுதிகளில் வந்து நிற்கிறார்கள்.
அதேவேளையில் ராமதாஸ் கூட்டணி வந்தால், விசிகவில் இருந்து வரும் தலித் கிறிஸ்தவர்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்கிற நிலை உள்ளது. அதனால் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை முடியாமல் உள்ளது. ஓபிஎஸ் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. அவர் அதிமுக தரப்புக்கு செல்வதாக தான் தகவல்கள் வெளியாகின்றன. சசிகலா, அம்மா அதிமுக என்கிற கட்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அது வேண்டுமானால் விஜயுடன் சேரலாம்.

தேமுதிக, அதிமுக – திமுக உடன் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விஜய் கூட்டணிக்கு செல்லும் திட்டம் கிடையாது. ராமதாசை பொறுத்தவரை விஜய் கூட்டணிக்கு செல்வதை தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது. திமுக கூட்டணிக்கு சென்றால் அருள், ஜி.கே.மணி, காந்திமதி ஆகிய 3 பேருக்கு சீட் கிடைக்கும். அதை ராமதாஸ் ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வர வேண்டும்.
சசிகலாவால், 50 தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகளை பிரித்து அதிமுகவை தோற்கடிக்க செய்ய முடியும். இந்த தேர்தலில் அதிமுக, அமமுக ஜெல் ஆகாது. அதிமுகவினர் டிடிவி தினகரனை தோற்கடித்து விடுவார்கள். அதன் காரணமாக பாஜகவிடம் ராஜ்ய சபா இடம் கேட்டிருக்கிறார். அவர்கள் வெளி மாநிலத்தில் ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் எடப்பாடி தலைமையை எதிர்த்து அதிமுகவில் மிகப்பெரிய போர்க்குரல் எழும். டிடிவி, மற்றவர்கள் எல்லோரும் செய்வார்கள். அதிமுக வெற்றி பெற்றாலும், எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கக் கூடாது என்றும் குரல் கொடுப்பார்கள். சசிகலா போன்றவர்கள் அதற்கு துணை புரிவார்கள். அதற்கு தங்கமணி, வேலுமணி போன்றவர்களே செவி சாய்ப்பார்கள். வேலுமணி போன்றவர்களை மாற்று முதலமைச்சர் வேட்பாளராக கூட கொண்டு வரலாம்.
சீ ஓட்டர் கருத்துக்கணிப்பில் திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே 12 சதவீதம் வாக்குகள் வித்தியாசம் உள்ளது. முந்தைய கருத்துக்கணிப்பில் இருந்ததை விட அதிமுகவின் வாக்குகள் குறைந்துள்ளது. அதற்கு காரணம் தவெக அதிமுகவின் வாக்குகளை பிரிக்கிறது. அதன் காரணமாக அவர்களின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.


