Homeசெய்திகள்கட்டுரைஇளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!

இளைஞர்களின் அறவழி எழுச்சி… விலகி நிற்கும் தலைவர்கள்!

-

- Advertisement -

இளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!

சாவித்திரி கண்ணன்

அரசியல் சாயம் பூசப்படாத மாணவர் போராட்டம் நாட்டையே உலுக்குகிறது. ஆனால், அதைக் கையாள்வதில் காங்கிரஸ், திமுக, தவெக போன்ற கட்சிகள் காட்டும் அணுகுமுறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

we-r-hiring

கல்வித் துறைத் தூய்மைக்கான குரல்
நீதிக்காகவும், கல்வித் துறையில் மலிந்து கிடக்கும் முறைகேடுகளைத் துடைத்தழிப்பதற்காகவும் வீதிக்கு வந்துள்ள இளைஞர்களின் குரல் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சுயநல அரசியல் ஆதாயங்கள் எதுவுமின்றி, தங்களின் எதிர்காலப் பாதுகாப்புக்காக மட்டுமே குரல் கொடுக்கும் இந்த இளைஞர்களின் போராட்டம், மக்களின் மனசாட்சியை உலுக்கியெடுத்துள்ளது.

இளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!

எந்தவொரு அரசியல் கட்சியாலும் திரட்ட முடியாத அளவுக்கு, ஐந்தாறு நாட்களாக இரவும் பகலும் தன்னிச்சையாகத் திரண்ட பெருங்கூட்டம் இது. அரசியல் கட்சிகளிடம் அற்றுப்போன அறவுணர்வும் தெளிவும் இந்த இளைஞர்களிடம் வெளிப்படுகிறது. தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எவ்வித தடுமாற்றமுமின்றி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் விதம், அமைதி காத்தோரின் உள்ளங்களையும் தட்டி எழுப்பியுள்ளது.

ராகுல் காந்தி தவறவிட்ட வரலாற்று வாய்ப்பு
தன்னெழுச்சியாக உருவெடுத்த இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி இயக்கங்கள் ஆரம்பத்திலேயே களமிறங்கித் தங்கள் தார்மீக ஆதரவை நல்கின. ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த சில அதிகார மையங்களின் வழிகாட்டுதலால், ராகுல் காந்தி இந்த மாபெரும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். “போராடும் மாணவர்களுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். உள்ளது; சோனம் வாங்சுக் மீது சந்தேகம் உள்ளது” என எழுந்த தேவையற்ற குற்றச்சாட்டுகளை நம்பி, தனக்கு மிக அருகில் நடந்த போராட்டக் களத்திற்கு ராகுல் காந்தி செல்லவே இல்லை. இத்தனை லட்சம் இளைஞர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் பொன்னான சந்தர்ப்பத்தை காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது.இளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!இது குறித்துப் பேசிய சோனம் வாங்சுக்கின் மனைவி, “இந்தியாவின் மிகப்பெரிய எதிர்கட்சியாகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ், மாணவர்களோடு நிற்காமல் தனி ஆவர்த்தனம் செய்கிறது. பிரதமரின் இல்ல முற்றுகை எனச் சிலரோடு சென்று கைதாகி தேவையற்ற கவனம் பெறப் பார்க்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். ராகுல் காந்தி தங்களைப் புறக்கணித்துத் தனித்துப் போராடுவது ஏன் என்று புரியாமல் களத்தில் உள்ள மாணவர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் – திமுகவின் விசித்திரப் போக்கு
ஒருபுறம், நீட் தேர்வு மோசடிக்கு எதிராக 23 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்திற்குள்ளும் வளாகத்திலும் காங்கிரஸ் குரல் எழுப்பியது. காங்கிரஸ் மீது மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களுக்குத் தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், பாசிச பாஜகவை எதிர்ப்பதில் ஒற்றுமை குலையக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள்.

இளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!

ஆனால், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக நீட் எதிர்ப்பிலும் பாஜக எதிர்ப்பிலும் தன்னைச் சாம்பியனாகக் காட்டிக்கொண்ட திமுகவோ, நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தைப் பேசுவதைத் தவிர்த்து, ‘மேக்கேதாட்டு’ அணை விவகாரத்தை மூன்று நாட்கள் கவசமாகப் பயன்படுத்திக் கொண்டது. அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிணைந்து உரக்கக் குரல் கொடுத்தபோது, திமுகவினர் மட்டும் தனித்துப் படிக்கட்டுகளில் நின்று கோஷம் எழுப்பித் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். காங்கிரஸ் எதிர்ப்பையே பிரதானமாகக் கொண்டு திமுக செய்யும் இந்த ஆத்திர அரசியல், மெல்ல மெல்ல பாஜகவை நோக்கி நகர்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

விஜய்யின் அரசியல் புரிதலும் ‘ஜனநாயகன்’ ரிலீஸும்
இளைஞர்களின் பேராதரவைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், இந்த இளைஞர்களின் எழுச்சியை இருகரம் கூப்பி வரவேற்கத் தயங்குகிறார். மத்திய பாஜக அரசைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற போக்கிலேயே அவர் இந்நிலையைக் கையாள்கிறார். குறைந்தபட்ச அரசியல் புரிதல் இருந்திருந்தாலும் கூட, தனது ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை விஜய் இன்னும் ஒரு 15 நாட்களுக்குத் தள்ளி வைத்திருப்பார். இளைய சமுதாயம் கல்வியில் நியாயம் கேட்டுப் போராடும் இந்தச் சூழலில், ஒரு சினிமா வெளியீட்டுக் கொண்டாட்டத்தை தள்ளிவைத்திருந்தால், போராடும் மாணவச் சமூகத்தின் பெரு மதிப்பையும் மரியாதையையும் விஜய் வென்றெடுத்திருக்க முடியும்.இளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!

போராடுவதற்கான உரிமை: மெரினா முதல் தீவுத்திடல் வரை
தமிழகத்தில் அனைத்து இடதுசாரி அமைப்புகளும் இந்த இளைஞர் எழுச்சியின் தாக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றன. சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தின் குறுகிய நடைபாதையில் இப்போராட்டம் கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. இது மகிழ்ச்சியளித்தாலும், சென்னை சத்தியமூர்த்தி பவன் மைதானமோ அல்லது காமராஜர் அரங்கம் அல்லது பின்புற மைதானமோ ஒதுக்கப்பட்டிருந்தால், தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்ட இளைஞர்கள் இன்னும் அமைதியாகப் போராடியிருக்க முடியும். தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள பிரதான பிரச்சனையே, டெல்லியில் உள்ள ‘ஜந்தர் மந்தர்’ போலப் போராடுபவர்களுக்கெனப் பொதுவான இடம் எதுவுமில்லை என்பதுதான்.

இளைஞர்களின் அறவழி எழுச்சி... விலகி நிற்கும் தலைவர்கள்!

முன்பு மெரினா இருந்தது; தற்போது அதற்கு அனுமதியளிப்பதில்லை
சும்மா கிடக்கும் தீவுத் திடலின் ஒரு பகுதியை போராடுபவர்களுக்கு என்று நிரந்தரமாக ஒதுக்கினால், மக்களின் கொந்தளிப்புக்கும் கோபத்திற்கும் வடிகாலாக அமைவதோடு ஜனநாயகத்தையும் பாதுகாக்கும். தற்போதைய தவெக அரசின் முதல்வர் விஜய், போராடுவதற்கான இந்த உரிமையையும் இடத்தையும் மட்டும் தமிழகத்தில் உறுதிப்படுத்தினால் போதும்; தமிழக மக்களின் மனதில் அவர் உண்மையான ‘ஜனநாயகனாக’ போற்றப்படுவார். செய்வாரா விஜய்?

“சுதந்திரத்திற்குப் பின் இந்தியா கண்டிராத மாணவர் போராட்டம்”: திருமுருகன் காந்தி காரசாரம்!

MUST READ