spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசொதப்பிய தவெக மாநாடு! விஜய்க்கு பிரேமலதா எச்சரிக்கை! ஆதவ் ஏற்படுத்திய டேமேஜ்!

சொதப்பிய தவெக மாநாடு! விஜய்க்கு பிரேமலதா எச்சரிக்கை! ஆதவ் ஏற்படுத்திய டேமேஜ்!

-

- Advertisement -

நடிகர் விஜய், தன்னை சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்தின் குடும்பத்திற்கு என்ன செய்துள்ளார் என்று ஊடகவியலாளர் சத்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர் சத்தியராஜ், யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக மாநாட்டில் பேசிய விஜய், சிங்கம் வேட்டையாடுவதற்காக தான் வெளியே வரும் என்று சொல்லியுள்ளார். அமர்ந்தால் நேரடியாக முதலமைச்சர் நாற்காலியில் தான் அமர்வேன் என்று சொல்கிறார். உங்களுக்கு எம்ஜிஆரை விட, அண்ணாவை விட கூட்டம் அதிகமாக வந்ததா? கண்டிப்பாக இல்லை. அண்ணா தமிழ்நாடு முழுவதும் நடந்தே சென்று தொண்டர்களை சந்தித்தார். அதைதான் கலைஞரும், எம்ஜிஆரும் பின்பற்றினார்கள். தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி அதை பின்பற்றுகிறார். தவெகவில் விஜயை நம்பி இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டிய பொருப்பு விஜய்க்கு இருக்கிறது. நாடு முழுவதும் முதலமைச்சர், அமைச்சர்கள் போன்றவர்களை 30 நாட்களில் பதவியில் இருந்து  நீக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக உங்கள் கட்சியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாரா? ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினீர்களா? விஜய் மாநாட்டிற்கு வந்தபோது அவரை பார்த்துவிட்டு அனைவரும் கலைந்து செல்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஒற்றைத் தலைமையின் கீழான அரசியலை அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் மறைவுக்கு பின்னர் அதிமுக சிதறுண்டு போகிறது. நீங்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளீர்கள். உங்களுக்கு என்று ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் அந்த பிம்பம் உங்களுக்கு பத்தாது. நீங்கள் தொண்டர்களுக்கு அரசியலை கற்பிக்காமல், அரசியல் மயப்படுத்தாமல் இருந்தால் உங்களின் கட்சி நிற்காது. ஒரு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதற்கு பிறகு உங்கள் கட்சி காணாமல் போய்விட்டது. எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் விஜயகாந்தினால் மட்டும்தான் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது. அதற்கு காரணம் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக அவர் செய்த பணிகளாகும். ஆனால் நீங்கள் இன்னும் ஒரு ஸ்டார் என்கிற மனநிலையில் இருந்தீர்கள் என்றால்? நீங்கள் எப்போது களத்திற்கு வருவீர்கள். மதுரை மாநாட்டில் விஜயகாந்தின் பெயரை உரிமை கொண்டாட முயற்சித்தார். அதனால் தான் பிரேமலதா முன்கூட்டியே எச்சரித்தார். விஜயகாந்தின் படத்தை விஜய் எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்று.  அவருடைய பெயரை சொந்தம் கொண்டாட விஜயகாந்தின் மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு என்று ஓர் கட்சி உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் விஜயகாந்தின் பெயருக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள்

ஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

சினிமாத் துறையில் யாரும் யாரையும் வளர்த்துவிட மாட்டார்கள் என்று இருக்கும்போது நடிகர் விஜயகாந்த், விஜயை வளர்த்துவிட்டார். அந்த குடும்பத்திற்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அவருக்காக பிரச்சாரத்திற்கு சென்றிருக்கலாமே. அல்லது விஜயகாந்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருக்கலாம். தற்போது விஜயகாந்த் இல்லை. இப்போது மேடை போட்டு விஜயகாந்தை சொந்தம் கொண்டாடுகிறீர்கள். விஜய் ஏன் களத்திற்கு இறங்கி வர மறுக்கிறார்கள் என்றால், களத்திற்கு வந்தால் தனக்கு இருக்கும் கிரேஸ் போய்விடுமோ என்று நினைக்கிறார். மேலும் யாரோ ஒருவர் அவரை பாதுகாத்து வருகிறார்கள். தேர்தல் வரை இப்படியே இருங்கள். தேர்தல் வந்ததும் களத்திற்கு வாங்க. நாம முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் இது தவறான கணிப்பாகும்.

            jp

மதுரையில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கூட அங்கிள் ஸ்டாலின் என்று விஜய் பேசுகிறார். நீங்கள் திமுகவை விமர்சிக்கிறீர்கள் சரி. தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிற திட்டங்களில் உள்ள குறைகளை உங்களுடைய தொண்டர்களிடம் சொல்லியுள்ளீர்களா? தமிழ்நாடு அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இப்படிதான் ஒரு எதிர்க்கட்சியாக வளர்ந்து நிற்க வேண்டும். கட்சியின் மாநாடு என்றால் என்ன? மாநாட்டிற்கு முதலில் தலைப்பு இருக்க வேண்டும். அதுகுறித்து விவாதிக்கக வேண்டும். திமுக தொண்டர்களிடம் அந்த கருத்தை கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் உங்கள் கட்சியில் உள்ள ஆதவ் அர்ஜுனா முதல் விஜய் வரை அனைவரும் திமுகவை விமர்சிக்கிறீர்கள். அப்போது ஏன் பாஜகவை விமர்சிக்கவில்லை. அப்போது நீங்கள் யாரை பார்த்து பயப்படுகிறீர்கள். ஊழல் செய்து சிறைக்கு சென்ற ஜெயலலிதாவை நீங்கள் கண்டிக்க மாட்டீர்கள்.

அண்ணா கொண்டுவந்த கொள்கைகளை கலைஞர் ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டதாக சொல்கின்றனர்.  அன்று முதல் இன்னு வரை இந்தியை எதிர்த்து கொண்டுதான் இருக்கிறது. சமூகநீதி, இருமொழிகொள்கை போன்றவற்றை இன்றும் திமுக கொள்கைகளை கடைபிடிக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் இடமாக சென்னை திகழ்கிறது.அப்படி இருக்கும்போது  தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கின்றனர். நெல்லையில் கவின் என்கிற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். ஏன் அவரை குறித்து விஜய் பேசவில்லை. ஒரு தலைமுறையை அரசியல்வயப்படுத்தாமல், வெறும் பிம்பச் சிறைக்குள் கொண்டுவந்து நிறுத்தப் பார்க்கிறார். இது மிகவும் ஆபத்தானதாகும்.  இதை தடுத்தாக வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ