spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் அங்கிள்! தாய்மாமனா நீங்க? சர்க்கஸ் சிங்கம் கர்ஜிக்கலாமா?

ஸ்டாலின் அங்கிள்! தாய்மாமனா நீங்க? சர்க்கஸ் சிங்கம் கர்ஜிக்கலாமா?

-

- Advertisement -

திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக, விஜய் கூட்டணி சேர்வது சரியாக இருக்கும் என்றால், அதை பாஜக நிச்சயம் செய்யும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழக வெற்றிக்கழகம் மாநாடு குறித்தும், நடிகர் விஜயின் உரையின் முக்கிய விவகாரங்கள் குறித்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய் காமராஜர், அண்ணா ஊழல் அற்றவர்கள் என்று சொன்னார். பின்னர் எம்ஜிஆரை தன்னுடைய அரசியல் குரு என்று சொல்கிறார். எம்ஜிஆர் மீது எரிசாராய ஊழல் என்ற ஒரு கமிஷன் அமைத்தார்கள். அந்த கமிஷன் எம்ஜிஆர் மீது குற்றம் உள்ளதாக தீர்மானித்தது. ஆனால் எம்ஜிஆர் இறந்து விட்டார். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அடுத்து எம்ஜிஆருடைய ஆட்சியில் ஊழல் இல்லாமல் இருந்ததா? தவெக மாநாட்டில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. இவரை பார்த்த உடன் கூட்டத்தில் பலரும் கலைந்து சென்றுள்ளனர்.

சினிமா வேறு, அரசியல் வேறு என்று பிரித்துப் பார்க்கும் விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் முழுமையாக வரவில்லை. அதனால் சினிமா மோகத்தால் விஜய்க்கு வாக்குகள் கிடைக்கும். ஆனால் எத்தனை சதவீதம் வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்பது தான் கேள்வி. ஊழல் குறித்து விஜய் பேசுவது சரியானதுதான். ஆனால் 500 ஏக்கரில் மாநாடு நடத்தியுள்ளார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? அதை விஜய் வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்க வேண்டும். தான் சம்பாதித்ததை கொடுத்தால் மிகவும் பாராட்டுக்குரியது தான். எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையோடு விஜய் இல்லாவிட்டால், அவர் ஊழல் இல்லாமல் இருப்பார் என்று எப்படி நான் நினைப்பேன்?

சினிமா மோடில் டயலாக் டெலிவரி செய்கிறார். ஆனால் கையில் பேப்பர் வைத்திருப்பது சில சமயங்களில் தெரிகிறது. தவெக மாநாட்டில் விஜய், தன் மீது வைக்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்திருக்கிறார். மோடியின் பெயரை சொல்லவே அச்சப்படுகிறார் என்று சொன்னார்கள். அவர் மோடியின் பெயரை சொன்னார். மத்திய அரசை தாக்க பயப்படுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் மத்திய அரசை தாக்கினார். ஆனால் அவர் இன்னும் சில காரியங்கள் செய்ய வேண்டி உள்ளது. அதிமுகவை மிகவும் மென்மையாக தாக்கி பேசுகிறார். அப்போது அதிமுக உடன் கடைசி நேரத்தில் கூட்டணி வைத்து விடுவாரோ என்கிற சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது. நீங்கள் எம்.ஜி.ஆர்-ன் ஆட்சியை ஐகான் ஆக சொல்கிறீர்கள்.

ஆனால் எம்ஜிஆர் உடைய ஆட்சி ஊழல் மிகுந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி தொடங்கி எல்லோருடைய ஆட்சியிலும் ஊழல் இருந்தது. மக்கள் விழிப்புணர்வு அடைகிற போது தான் ஊழல் கட்டுப்படுத்தப்படும். மட்டுப்படுத்தப் படும். அப்போது விஜய் மக்கள் மனதை மாற்றிவிடுவாரா? மக்கள் ஊழலுக்கு எதிராக போராடுவார்களா? மகளிர் உரிமைத் தொகை,போன்ற திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு தொகை நேரடியாக வரவு வைக்கப்படுவதால் ஊழல் தடுக்கப்படுகிறது. இது போன்று லஞ்சம் ஊழல்களை தடுக்கிற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த முதல் 2 வருடங்கள் அவருக்கு விவரம் தெரியாது. அதனால் சமூகநீதிக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதற்கு பிறகு திமுகவில் இருந்த ராஜாராம் போன்ற திராவிட தலைவர்கள் அதிமுகவில் சேர்ந்தனர். அவர்கள் இங்கே சமூகநீதிக்கு எதிராக அரசியல் செய்யக்கூடாது என்று சொன்னார்கள். அதை எம்ஜிஆர் புரிந்து கொண்டார். அப்படி விஜயிடம், ஏழை எளியவர்களிடம் பரிவு கொண்டவர்கள். சமூகநீதி மேல் நம்பிக்கை கொண்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? விஜய் ஆட்சிக்கு வந்தார் என்றால் தமிழ்நாடு மிகப்பெரிய துன்பத்திற்கு உள்ளாகும். அதற்கு காரணம் அவருடைய அறியாமையாகும். எம்ஜிஆர், விஜய்காந்த் போன்றவர்களுக்கு சமூக புரிதல் இருந்தது.

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

மக்களிடம் உள்ள சினிமா மோகத்தை கரைக்க வேண்டிய கடமை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் உள்ளது. விஜய் அதிமுகவை இன்னும் தாக்கி பேச வில்லை. பொதுவாக என்ன கருத்து உள்ளது. பாஜகவின் ஆசியுடன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விஜயுடன் சேர்ந்துவிடுவார்கள் என்கிற கருத்து உள்ளது. அப்படி செய்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று செய்வார்கள். பாஜக எந்த கேமை வேண்டுமானாலும் விளையாடுவார்கள். 2026ல் அவர்கள் 128 சீட்டுகள் வாங்கப்போவது இல்லை. 10 சீட்டுகள் வாங்கினால் போதும். அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது. அதனால் திமுகவின் ஆட்சியை கலைத்துவிட வேண்டும். அதற்கு விஜயும், அதிமுகவும் சேர்ந்தால் சரியாக இருக்கும் என்றால் பாஜக வாழ்த்தி அனுப்பி வைக்கும். இதுதான் உண்மை. அவர்களுக்குள் யார் முதலமைச்சர் என்பதில் தான் பிரச்சினை வரும். இல்லாவிட்டால் இருவரும் தலா 2.5 வருடங்கள் ஆட்சி செய்யலாம் என்று சொல்வார்கள். அதிகார ஆசை வந்துவிட்டால் இதெல்லாம் நடக்கும்.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த உடன் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்னதாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் கட்சியை தொடங்கும்போதே நான் முதல்வர் என்று தொடங்குகிறார். அப்படி ஒரு அரசியல் கட்சிக்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டுமாம். ஆனால் அவருக்கு கூட்டம் வந்துள்ளது. விஜய்க்கு என்று மக்களிடம் அபிமானம் உள்ளது. ஆனால் விஜய் உணர வேண்டும் அவரை பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்று தெரியவில்லை. தற்போது ஒரு மாதம் சிறையில் இருந்தால் பதவியை பறித்துவிடுவார்கள் என்கிற சட்டம் அமலுக்கு வந்தால், அரசியல் தெரியாத விஜய் போன்ற ஒருவர் மீது தான் சொன்னதை செய்யா விட்டால் பொய் வழக்கு போட முடியாதா? விவரம் தெரியா விட்டால் மத்திய அரசிடம் அடிமைப்படுவார்கள். அரசியல் அறிவு, சமுதாய நோக்கம், சமுதாயம் குறித்த புரிதல், அரசியலமைப்பு சட்டம் குறித்த தெளிவு போன்றவை ஒரு அரசியல்வாதிக்கு இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ