spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"வேலூரில் மறை கழன்ற விஜய்"! அதிர்ச்சியில் ரசிகர்கள் அய்யோ பாவம்! செந்தில்வேல் நேர்காணல்!

“வேலூரில் மறை கழன்ற விஜய்”! அதிர்ச்சியில் ரசிகர்கள் அய்யோ பாவம்! செந்தில்வேல் நேர்காணல்!

-

- Advertisement -

திமுக- தேமுதிக கூட்டணி குறித்து விஜய் விமர்சிக்கும் நிலையில், அவர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்னபோதும் ஒருவரும் அவரை மதித்து கூட்டணிக்கு வராதது ஏன்? என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

senthilvel new
senthilvel new

தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் திமுக மீது வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- வேலூர் கூட்டத்தில் பேசிய கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு, முதலமைச்சர் தன்னை குற்றம்சாட்டுவதாக கூறியுள்ளார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த அரசியல் கட்சி தலைவரும் தன்னுடைய தொண்டர்கள் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான கருத்துக்களை பகிர வேண்டாம் என்றுதான் சொன்னார். கரூர் கூட்டத்திற்கு நீங்கள் தாமதமாக வந்தது ஒரு காரணம் என்பது தான் எல்லோரும் சொல்வது. ஆனால் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று முதலில் சொன்னது முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்தான்.

we-r-hiring

உங்களை போன்றவர்களுக்கு ஜெயலலிதா அம்மையார் தான் சரிபட்டு வருவார். ஸ்டாலின் போன்ற நாகரிக அரசியல்வாதி உங்களுக்கு ஒத்துவர மாட்டார். ஜெயலலிதா  உங்களையும், உங்க அப்பாவையும் கொடநாடு பங்களாவில் கைகட்டி நிற்க வைத்தது போன்று நிற்க வைத்திருக்க வேண்டும். கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நடைபெற்ற அன்றைக்கே உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால், எல்லோரும் கட்சியை கலைத்துவிட்டு வீட்டிற்கு ஓடியிருப்பார்கள்.

கரூர் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் அறிக்கை வாசிக்க வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை. அந்த கடமையை செய்தார். அந்த அறிக்கையிலும் கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் முழு முதற் காரணம் என்று எங்கு தீர்ப்பு எழுதினார்? அங்குள்ள பிரச்சினைகளை எல்லோரும் சுட்டிக்காட்டியது போன்று அவரும் முதலமைச்சராக அங்குள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார். தண்ணீர் வசதி செய்து தர மாட்டீர்கள். மேற்கூரை போட மாட்டீர்கள். எல்லோரையும் வெளியிலில் நிறுத்துவீர்கள்.

10 மணி நேரம் தாமதமாக வருவீர்கள். கூட்டநெரிசல் ஏற்படும். எது நடந்தால், நீங்கள் முதலமைச்சரை திட்டுவீர்கள். அதற்கும் முதலமைச்சர் ஆம் என்று சொல்லிக்கொள்ள வேண்டும். எதையும் உங்களிடம் கேட்கக்கூடாது. கேள்வி கேட்காதபோதே இவ்வளவு பேசுகிறீர்கள் என்றால், கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்? அறிவாலயம் வாசலில் நின்றுகொண்டு அந்த பக்கம் போகிறவர்களை எல்லாம் ஸ்டாலின் கூட்டணிக்கு அழைப்பதாக சொல்கிறார். உங்க அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் யார்? அவர் அந்த பக்கம் போயிருப்பார் அல்லவா?

2026 தேர்தல் - திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்

2019 முதல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று உள்ளது. தற்போது புதிதாக தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது. அவர்கள் திமுக உடன் கூட்டணி வர மாட்டோம் என்று சொன்னார்களா? விஜயாகந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நீங்கள் போய் பார்த்தீர்களா? உதயநிதி போய் பார்த்தார். அதனால் தான் இறுதிச்சடங்கின்போது தொண்டர்கள் கோபப்பட்டு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று சொன்னபோதும் யாராவது ஒருவர் மதித்து உங்களிடம் கூட்டணி வந்தார்களா? தங்களிடம் கூட்டணிக்கு வரும்படி வாசலில் நின்று விஜய் கூப்பிட்டார். ஆனால் உங்களை ஒருவரும் மதிப்பதில்லை. வாசலில் நின்று வாங்க வாங்க என்று கூட்டணிக்கு அழைப்பதாக சொல்கிறார். அப்போது அவருக்கு மறை கழன்று விட்டதா?

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நான் பங்கேற்று பேசியபோது, 12 மணிக்கு கூட்டம் போடும் தவெகவினர் மேற்கூரை போடாமல், இருக்கைகள் போடாமல் அராஜகம் செய்வதாகவும், நீங்கள் மட்டும் சொகுசு வாகனங்களில் வருகிறபோது அவர்களுக்கு மேற்கூரை போட வேண்டும் என்று கூறியிருந்தேன். அதன்படி வேலூர் கூட்டத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டுள்ளன. எனவே தவெகவினருக்கும் சேர்த்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

பேருந்து வசதி இல்லாததால் பலரும் வீடுகளிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வதாக விஜய் கூறுகிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மலை கிராமங்களுக்கு மருத்துவர்களே நேரடியாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திற்கும், மலைக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி, உண்டு உறைவிடப் பள்ளிகள் என்று அரசு அமைத்து தருகிறது. போதாமைகள் இருக்கலாம். சுட்டிக்காட்டுங்கள். ஆனால் ஒன்றுமே இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாதீர்கள். இந்தியாவில் முதன் முறையாக போக்குவரத்து துறையை அரசுடமையாக்கி கிராமங்களுக்கு எல்லாம் பேருந்து வசதி கொண்டு போனவர் கலைஞர். மினி பேருந்து திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். இன்றைக்கு அதே மினி பேருந்து திட்டத்தை எல்லா கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அரசு பேருந்துகளில் முன்பதிவு - குலுக்கல் முறையில் BIKE பரிசு

ரூ.1 கோடிக்கு மேல் அபராதம் கட்டச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம். வருமானத்தை மறைத்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு துளியும் அவரிடம் இல்லை. எல்லா அரசியல்வாதிகளும் நாங்கள் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்தோம். வெற்றி பெறுவோம் என்று சொன்னார். ஆனால் விஜய், தன்னை முதலமைச்சர் ஆக்கினால் கிராமம் கிராமமாக வருவேன் என்கிறார். பெரம்பூரில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி வி.எஸ்.பாபு, தூய்மைப் பணியாளர்களை மிரட்டுகிறார். இப்போதே எவ்வளவு அராஜகம் செய்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் என்ன? என்றும், அந்த விதிகள் அமலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இதை எதையும் தெரியாமல் ஒரு கூட்டத்தை வைத்துள்ளார் விஜய், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ