spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது... பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்... உண்மையை உடைக்கும் குபேந்திரன்!

அடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது… பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்… உண்மையை உடைக்கும் குபேந்திரன்!

-

- Advertisement -

இளம் தலைமுறையினர் மத்தியில் பெரியார் சென்று சேறுவதை தடுக்கவே பெரியார் குறித்த அவதூறுகளை பாஜக பரப்புவதாகவும், அவர்களது ஏஜெண்டாக சீமான் செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

பெரியார் குறித்த சீமானின் அவதூறு பிரச்சாரம் தொடர்பாக பத்திரிகையாளர் குபேந்திரன் அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:-  தமிழ்நாடு அரசியலில் சீமான் அதிகாரத்தை பிடிக்க வேண்டும், அவரது கட்சியினர் சிலராவது எம்எல்ஏ ஆக வேண்டும் என ஆசை இருந்தால் அவர் எதை எதிர்த்து பேசி இருப்பார் என்றால் திமுக ஆட்சியை எதிர்த்துதான். திமுக அரசின் குறைகளை எதிர்த்து போராடினால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள். ஆனால் சீமான் யாரை எதிர்த்து போராடுகிறார்?. பெரியார் குறித்து கேள்வி வந்தால் நீங்கள் பதில் அளித்துவிட்டு கடந்து செல்லலாம். ஆனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் பெரியாரை இழிவு படுத்துகிறார். சீமானின் சர்ச்சை பேச்சு என்பது, குறைந்தபட்ச நாகரீக உள்ள எவரும் பேச முடியாது. ஆனால் தொடர்ந்து ஏன் பெரியாரை பிடித்துக்கொண்டு அவரை இழிவுபடுத்துவதன் நோக்கம் ஏன்?. பெரியார் ஒரு அரசியல்வாதி அல்ல. தேர்தல் அரசியலை முன்னிறுத்தி அவர் எந்த சமரசமும் செய்து கொண்டவர் அல்ல. தேர்தல் அரசியலுக்கே வராத பெரியார் உங்களை எங்கு கார்னர் செய்கிறார். ஏன் அவரை நீங்கள் முன்னிறுத்துகிறீர்கள். அப்படி பார்த்தால் சீமானின் இன்னொரு முகம் தெரியவருகிறது.

Photo: Seeman Official Twitter Page

தந்தை பெரியாரை இன்று விமர்சிக்கும் சீமான், என்ன பேசினார். எப்படி வளர்ந்தார். கொளத்தூர் மணி நடத்திய மேடையில் பேசிய சீமான், பெரியார் இல்லை என்றால் சீமான் இல்லை என்று பேசினார். ஒரு இயக்கத்தை நோக்கி நீங்கள் நகர்கிறீர்கள். இப்போது ஒரு 5 ஆண்டுகளாகத்தான் அவர் பெரியாரை விமர்சிக்கிறார். 50 வயது வரை பெரியாரை நேசித்த, பெரியாரை கொண்டாடிய, பாராட்டி பேசிய  சீமான், இப்போது ஏன் தடம் மாறுகிறார்?. நீங்கள் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் திமுகவை வீழ்த்த வேண்டும். ஆனால் பெரியாரை எதிர்ப்பதும், திராவிடத்தை ஒழிப்பதும்தான் எங்கள் கொள்கை என்று கூறுகிறீர்கள். பெரியாரை பற்றி அவர் உயிருடன் இருக்கும்போதே கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார். அண்ணாவோ, பெரியாரோ, காமராஜரோ முதலமைச்சரானதும் யாரை சென்று பார்த்தார்கள். அவர்களுக்கு தெரியும் பெரியார் சமூக நீதிக்காக எப்படி பாடுபட்டார் என்று. சென்னை புத்தக கண்காட்சியில் பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகிறது. அங்குள்ள இளம் தலைமுறையினரிடம் பேசும்போது அவர்கள் பெரியாரை பாராட்டி பேசுகின்றனர். அடுத்த தலைமுறைக்கும் ஓங்கி நிற்கும் தலைவராக பெரியார் உயர்ந்துள்ளார்.

திராவிடத்தை நம்பி ஏமாந்து விட்டேன் என சீமான் சொல்கிறார். 50 வயது வரை உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் அடுத்த தலைமுறையை எப்படி வளர்த்து எடுப்பீர்கள். உங்களுக்கே அரை குறை புரிதலோடு 10 வருடத்துக்கு முன்பு ஒரு பாலிசி, 10 வருடத்துக்கு பின்பு ஒரு பாலிசி என்று எப்படி இருக்க முடியும். அண்ணா பெரியாரின் கொள்கையில் ஒன்றை மட்டும் மாற்றிக்கொண்டு வந்தார். ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றார். தமிழ்நாட்டில் சில விஷயங்களை கடந்துசென்றால் தான் அரசியலில் ஜெயிக்க முடியும். கடவுள் மறுப்பு என்ற விஷயத்தை விட்டுவிட்டு பெரியாரை எப்படி இழிவு படுத்துவது. பெரியாரை எப்படி இந்த இளைஞர்கள் படிக்கக்கூடாது. குறிப்பாக பெண்கள் பெரியாரை புறக்கணிக்க வேண்டும். அதற்காகதான் இவ்வளவு மோசமான சொல்லை சீமான் பயன்படுத்தியுள்ளார்.

திடீரென ரஜினியை சந்தித்த சீமான்..... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

பெரியாரை எதிர்த்து அரசியல் செய்தால், தனக்கு ஒரு அரசியல் வாழ்க்கை கிடக்கும் என்று சீமான் நம்புகிறாரா என தெரியவில்லை. எனக்கு தெரிந்து பாஜக இவர் மூலமாக சில வேலைகளை செய்கிறது. அண்மையில் சீமான் ரஜினியை சந்தித்து பேசினார். ஏன் சந்தித்தார் என இதுவரை யாருக்கும் தெரியாது. 2 மணி நேரம் இருவரும் பேசினார்கள். அதிமுக இணைப்புக்கு மத்தியஸ்தராக ரஜினிகாந்த் செயல்படுகிறாரா என கேள்வி எழுந்தது. ஆனால் ரஜினி மீண்டும் அரசியலில் இறங்கி திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை கட்டமைப்பாரா? என்பது சந்தேகமே. ஆனால் ரஜினிக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்படலாம். மறைமுகமான அசைன்மெண்ட் ஆக இருக்கலாம். ரஜினியை வந்து பார்க்கிறார். பாஜகவும், ரஜினியும் வேறு வேறு இல்லை. அண்ணாமலை என்ற நபரை ரஜினி தேர்வு செய்து வைத்திருந்ததாக  துக்ளக் ஆசிரியர் குருமுர்த்தி தெரிவித்திருந்தார். ரஜினி கட்சி தொடங்கி இருந்தாலும், அவர் முதலமைச்சராக விரும்பவில்லை. ஆனால் தான் விரும்புகிற நபரை முதலமைச்சர் ஆக்க அண்ணாமலையை தேர்வு செய்து வைத்திருந்தார். அப்படி எனில் ரஜினியின் எண்ணம் என்ன? இன்று அண்ணாமலை எங்கே உள்ளார். ரஜினி கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுனமுர்த்தி பாஜகவில் இருந்து வந்தவர். ரஜினி பாஜகவின் மறைமுக ஏஜெண்டாக இருந்தார்… இருக்கிறார்… இருப்பார். விஜய் கட்சி தொடங்கி திமுகவை எதிர்த்தால் 5 முதல் 6 சதவீத வாக்குகள் குறையும். ஆனால் அவரும் பெரியாரை கையில் எடுக்கும்போது சீமான் ஆத்திரமாகிறார். குறிப்பாக விஜய் வந்த பின்னர் தான் அவருக்கு ஆத்திரம் அதிகரிக்கிறது.

பிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!

சீமான் போகிற போக்கில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த தேர்தலில் அண்ணாமலையுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பெரியாரை, திராவிடத்தை எதிர்ப்பது தான் பாஜகவின் கொள்கை. அதே கொள்கையை சீமானும் சொன்னால் இருவருக்கும் வித்தியாசம் இல்லை. சீமான் பேசியதற்கான ஆதாரங்களை நான் வெளிடுகிறேன் என அண்ணாமலை சொல்லியுள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற அந்த பேச்சு புத்தகத்திலும் உள்ளது. புராணத்தை வைத்து பெரியார் பேசியது தான் அந்த பேச்சு. பெரியாரை எதிர்த்தால் இந்துத்துவா வாக்குகள் தான் அவருக்கு கிடைக்கும். உருது பேசும் இஸ்லாமியர்கள், தெலுங்கு பேசும் மக்களை எதிர்க்கும் நீங்கள் எப்படி அரசியலில் ஜெயிக்க முடியும். தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருதுபெற்றவர்கள் பெரும்பாலும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள். நீங்கள் விஜயகாந்தை பற்றி எப்படி பேசினீர்கள். எடப்பாடி, சசிகலா குறித்து எப்படி பேசினீர்கள். அடுத்த தலைமுறை பெரியாரை பேசினால் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு தான் நஷ்டம். அந்த நஷ்டத்தை நீங்கள் நஷ்டமாக கருதினால் நீங்கள் யார். நாம் தமிழர் கட்சியை கிட்டத்தட்ட இணைத்தே விட்டார். பாஜகவின் ஏஜெண்டாக மாறிவிட்டீர்கள் என்ற குற்றச்சாட்டு உங்களுக்கு பொருந்துகிறதா இல்லையா? பெரியாரை இழிவு படுத்துவதால் உங்களுக்கு வாக்கு விழுந்துவிடுமா?

கடவுளை ஆதரிக்கிற விஷயத்தை எப்போதோ திமுக தொடங்கி விட்டது. பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காவி வேட்டிதான் கட்டிக்கொண்டுள்ளார். திமுகவினர் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். கடவுள் மறுப்பை கடந்து திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. முருகன் மாநாட்டிற்கு திராவிடர் கழகம் கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது திமுக பெரியாரின் கொள்கையில்  நீர்த்துப்போய் நிற்கிறது. இறந்து போன தலைவருடன் சண்டை போடுகிற சீமான் அறிவாளியா? புத்திசாலியா. கட்சியை காப்பாற்ற முடியாத சீமான். நீங்கள் பெரியாரிடம் சண்டை போட தொடங்கினால் அன்றே தமிழ்நாட்டில் தோற்று விட்டீர்கள் என்று அர்த்தம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ