spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணிக்கு, வன்னியரசு நச் பதில்!

ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணிக்கு, வன்னியரசு நச் பதில்!

-

- Advertisement -

மருத்துவர் ராமதாஸ் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு என்றும் மரியாதையும், பாசமும் உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சந்திப்பு குறித்து அன்புமணி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக வன்னியரசு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- வன்னி அரசுக்கு ராமதாஸ் மீது திடீரென பாசம் ஏன் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு வேண்டுமானால் தந்தையின் மீது பாசம் இல்லாமல் இருக்கலாம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மருத்துவர் ராமதாஸ் மீது பாசமும், மரியாதையும் இருக்கும். ராமதாசின் அரசியல் ரீதியான செயல்பாடுகள். வெறுப்பு அரசியல் பேச்சு. அவரது நடவக்கைகளை அந்தந்த நேரங்களில் கண்டித்து வந்துள்ளோம். அந்தந்த நேரங்களில் விமர்சித்து வந்துள்ளோம். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. ஆனால் தனிப்பட்ட முறையில், ராமதாசின் இடதுசாரி அரசியலை விரும்பக்கூடியவர்கள். அந்த இடதுசாரி அரசியல்தான் தற்போது தேவை என்று நினைப்பவர்கள்.

அப்படியான ஒரு அரசியலுக்கு வருவது போன்ற ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கிறபோது, அந்த பாசம் இருக்கத்தான் செய்யும். அன்புமணிக்கு, தனது தந்தை மீது பாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மருத்துவர் ராமதாஸ் மீது எப்போதும் மரியாதை உண்டு. அதனால் தான் அவர் எவ்வளவோ விமர்சனங்களை முன்வைத்தபோதும், திருமாவளன் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கக் கூடாது என்று சொல்வார். அதன்படி ராமதாஸ் மீது அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்வைப்போமே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை நாங்கள் முன்வைத்தது கிடையாது.

ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின்போது தனது வீட்டில் திடீரென தனது வீட்டில் பாரத் மாதா கி ஜே என்று சத்தம் கேட்டதாக சொல்கிறார். இதன் மூலம் பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டிற்கு அந்நியமானது என்று அவர் சொல்கிறபோது, இதுபோன்ற பிற்போக்கு சக்திகளை புறந்தள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறார். பாஜக ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புகளை தனிமைப்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு அல்லது கூடுதல் அக்கறை அவருக்கு இருந்திருக்கலாம். அதனால் அப்படி சொல்கிறார். அரசியல் நிலைப்பாடு என்பது தனி. திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வருகிறார் என்பதற்காக நாங்கள் அப்படி பேச வேண்டியது இல்லை. ராமதாஸ் கூட்டணிக்கு வருவது குறித்து முடிவு செய்ய வேண்டியது திமுக தலைமை தான். கூட்டணி குறித்து நான் பேசவில்லை. இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மருத்துவர் ராமதாசின் இந்த நிலைப்பாடு என்பது அவர் சரியாக முன்னெடுக்கிறார் என்று நான் பார்க்கிறேன்.

வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள்  தலைவர் திருமாவளவன், பாமக – பாஜக இருக்கிற கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்று பல முறை விளக்கம் அளித்துள்ளார். அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அப்படிபட்ட சூழலில் பாமக ராமதாஸ் அணியாக திமுக கூட்டணிக்கு வந்தால் என்கிற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. அப்படி வந்த பிறகு அது குறித்து பேசலாம். ஆனால் பாமக – பாஜக இருக்கிற இடத்தில் விசிக இருக்காது. அது ஒரு கல்வெட்டு போல அரசியல் களத்தில் அடித்து வைத்திருக்கிறோம் அதில் எந்த மாற்றமும் இல்லை. பாமக ராமதாஸ் என்கிற ஒரு பிரிவு ஏற்பட்ட பிறகு கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம். திருமாவளவன் என்றைக்காவது மருத்துவர் ராமதாசை புகழ்ந்து பேசியிருக்கிறாரா? என்று அன்புமணி கேட்டுள்ளார். திருமாவளவன் பல ஊடக சந்திப்புகளிலும், விசிக மேடைகளிலும் ராமதாஸ் குறித்து பேசி இருக்கிறார். பழைய மருத்துவரை நாங்கள் பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளார். தமிழ்குடிதாங்கி பட்டம் ஏன் வழங்கினோம். அம்பேத்கர் சுடர் பட்டம் ஏன் வழங்கினோம் என்று திருமாவளவன் பேசியுள்ளார். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை ராமதாஸ் திறந்துவைத்துள்ளார். பல இடங்களில் ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தி இருக்கிறார். அதை தற்போதைய இளைஞர்கள் மத்தியில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

அப்படி பட்ட மருத்துவர் தான், ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து சேசியல் இன்ஜினியரிங் செய்திருக்கிறார். அது தவறு. ஒரு காலத்தில் அதை ராமதாஸ் உணர்வார் என்று திருமாவளவன் சொல்லி இருக்கிறார். தற்போது தவறை உணர்ந்துவிட்டார் என்று நாங்கள் பார்க்கிறோம். மருத்துவர் ராமதாஸ் மீது தனிப்பட்ட முறையிலான வெருப்பு எங்களுக்கு எப்போதும் கிடையாது. விசிக தலைவர் திருமாவளவன், ராமதாசை எப்போதும் நேசிக்க கூடியவர்தான். அப்போது, திருமாவளவன் ஒருபோதும் ராமதாசை புகழ்ந்ததில்லை என்று அன்புமணி சொல்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழைய ஊடக சந்திப்புகளையோ, திருமாவளவனின் பழைய பேச்சுக்களை அன்புமணி பார்க்கவில்லை. அல்லது பார்த்தாலும் அது குறித்து தற்போது நினைவுபடுத்துவதில் அவருக்கு தடை இருக்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ