spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்

ரத்தின சபையில் ஆருத்ரா தரிசனம்

-

- Advertisement -

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம், பெருமாலுக்கு திருவோணம் என இவை யாவும் இறைவன் பூமியில் அவதரித்த நட்சத்திரங்கள்.

அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான,  சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

we-r-hiring

‘பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்’ என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை என்பதை பற்றி பழங்கால புராணச் செய்திகள் உள்ளன.

ஆருத்ரா தரிசனம் ஏன் கொண்டாடப் படுகிறது ? வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனம் என கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே மருவி தமிழில், ஆருத்ரா எனப் அழைக்கப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் வெகுசிறப்பாக நடைபெறும்.

வருடம் தோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று இரவில் ஆருத்ரா அபிஷேகமும், அதனை தொடர்ந்து, மறுநாள் அதிகாலையில் கோபுர தரிசனமும் நடைபெறும்.

ஆருத்ரா தரிசனமென்றால் நம் நினைவிற்கு வருவது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் தான். திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில், வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.

இங்கு, மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி இரவு ஆருத்ரா அபிஷேகம் நிகழ உள்ளது.

சிவபெருமான் ருத்திர தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் இத்திருத்தளம், முதலாவதாக உள்ள ரத்தின சபையாக திகழ்கிறது.

அந்த வகையில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ர அபிஷேகம், ஜனவரி 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. நடராஜர் பெருமானுக்கு 34 வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகம், மறுநாள் அதிகாலை 3 மணி வரை நடைபெறும்.

இதனை தொடர்ந்து, நடராஜ பெருமானுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீப தூப ஆராதனைகள் நடைப்பெறும்.

6ம் தேதி காலை ஐந்து மணிக்கு கோயில் வாசலில் நடராஜ பெருமான் அருள் பாலிக்கும் நிகழ்ச்சியான கோபுர தரிசனம் என்று சொல்லப்படும் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.

அந்த ஆருத்ரா தரிசனத்தை காண சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரியில் இருந்தும் பக்தர்கள் திரன்டு வருவார்கள்.

 

MUST READ