- Advertisement -
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை தனபாத் நகரில் இருந்து வந்த விரைவு ரயிலில், ரயில்வே போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடைமேடை அருகே சந்தேகத்திற்குரிய விதமாக டிராலி பேக் ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.
இதனால் ரயில் போலிசார் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 14 கிலோ அளவிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கஞ்சா பறிமுதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.