Homeசெய்திகள்சென்னை47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - முதல்வர் தொடங்கி வைப்பாரா....

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி – முதல்வர் தொடங்கி வைப்பாரா….

-

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி 70 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களை சுவாரசியப்படுத்த லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை தீவுத் திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பி.அனிஷ் ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 47ஆவது சுற்றுலா பொருட்காட்சி டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஒன்றிய,மாநில அரசு துறையை சார்ந்த 49ரங்குகள் அமைக்கப்படுகிறது.

47 வது பொருட்காட்சியின் சிறப்பாக துபாய் சிட்டி, லண்டன் பிரிட்ஜ் உள்ளிட்டவை இந்த வருடம் அமைய உள்ளது என்று தெரிவித்தார். இந்த பொருட்காட்சியை முதல்வர் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் துவக்கி வைத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அதோடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் ,சேகர் பாபு, மதிவேந்தன், ராமச்சந்திரன் துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைக்க உள்ளனர்.

மேலும் 69 உணவு கடைகள், இதை தவிர இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து 290 வணிக கடைகள் இடம் பெறுகிறது. பொதுவான விளையாட்டு அம்சங்களில் 32 ராட்டினங்கள், சிறுவர்களுக்கு என பிரத்தேயக 14 விளையாட்டு அம்சங்கள் இடம் பெறுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருக்காட்சியில் 20 லட்சம் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர் பார்க்கின்றோம். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25 ரூபாய் கட்டணமும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 40 ரூபாய் கட்டணமும் விதிக்கப்படும்.

பொருக்காட்சி நடைபெறும் 70 நாட்களில் பொங்கல் விடுமுறை வரை காலை 10 முதல் இரவு 10 மணிவரை மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் அதற்கு அடுத்த நாட்களில் மாலை 3 மணிக்கு தொடங்கி 10 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளது என்றும் அதோடு விடுமுறை நாட்களில் காலை 10 மணிக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கொரோன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதா என்ற கேள்விக்கு அரசு முக கவசம் அணிவதை கட்டயமாக்கினால் நாங்களே இலவசமாக வருபவர்களுக்கு முககவசம் கொடுப்போம். மேலும் மருத்துவ முகாம்களும், பாதுகாப்பு கருதி 24 மணிநேரம் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார் ஒருங்கிணைப்பாளர் பி.அனிஷ் ராஜா.

MUST READ