சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்ற நிலையிலும், உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் வைக்கப்பட்டிருந்த 5,543 வாகனங்களை மின்னணு (இ-ஏலம்) முறையில் விற்பனை செய்யக் காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நீண்ட நாட்களாகக் முடங்கிக் கிடந்த வாகனங்கள்!
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையப் பிரிவுகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை, போக்குவரத்து விபத்துகளில் சிக்கியவை மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன. நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருந்ததால், இந்த வாகனங்களால் காவல் நிலைய வளாகங்களில் இடம் அடைத்துக் கொள்ளப்பட்டதோடு, அவை பழுதடைந்து வீணாகும் நிலையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்தகைய வாகனங்களைக் கணக்கெடுத்து ஏலம் விடுவதற்குத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

மின்னணு ஏலம் மூலம் விற்பனைத் தொடக்கம்!
இதன் தொடர்ச்சியாக, மொத்தம் கண்டறியப்பட்ட 5,543 வாகனங்களையும் மின்னணு ஏலம் (E-Auction) மூலமாகப் பொதுமக்களுக்கு வெளிப்படையான முறையில் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக இன்று 1,936 வாகனங்கள் வெற்றிகரமாக மின்னணு ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதில் ஏராளமான ஏலதாரர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மீதமுள்ள வாகனங்களுக்கும் விரைவில் ஏலம்!
இன்றைய ஏலத்தைத் தொடர்ந்து, மீதமுள்ள 3,607 வாகனங்களின் தற்போதைய மதிப்பு மற்றும் அவைகளின் நிலை குறித்த மதிப்பீட்டுப் பணிகள் (Valuation Work) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின்னர், மீதமுள்ள வாகனங்களும் அடுத்தடுத்த கட்டங்களாக மின்னணு ஏலத்தில் விடப்படும் என்று காவல் துறை மற்றும் ஏலக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் சரிந்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ₹600 குறைவு
