நடிகர் விஜய் மிக்ஜம் புயல் பாதித்த மக்களுக்கு மன்றத்தின் உதவிட வேண்டும் என உத்தரவு விட்ட நிலையில் களத்திற்கு வருகை.
திருநின்றவூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கினர்.மிக்ஜம் புயல் காரணமாக சென்னை,திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்கள் கடுமையான வெள்ள பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர் பெரியார் நகர்,முத்தமிழ் நகர்,சுதேசி நகர் ஆகிய இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியது,பலர் தங்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு பெயர்ந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிலர் வெள்ள நீரில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.இவர்களுக்கு திருநின்றவூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் இதற்காக பரிசல்களை தயார் செய்து வீடு வீடாக உணவு,அத்தியாவசிய பொருட்கள், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.இதே போன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு உணவினை சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பால முருகன் வழங்கினார்.நேற்று நடிகர் விஜய் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திட வேண்டும் என தனது மன்றத்தினருக்கு உத்தரவிட்ட நிலையில் உடனடியாக இன்று களத்திற்கு வந்து உதவிகளை செய்தது வரவேற்பை பெற்றுள்ளது.