spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ்...

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி 

-

- Advertisement -

ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை கடத்தி அவரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரி பிரதீப் ஆகிய நான்கு நபர்கள் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

we-r-hiring

இதனிடையில்  இவர்களது பின்னணியில் மேலும் சில காவல்துறையை சேர்ந்த நபர்களும் வருமானவரித்துறை அதிகாரிகளும் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் சிறப்பு உதவியாளர் ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.

எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இந்துலதா மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கி உத்தரவு. மாலை 4 மணி அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்ட SSI ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்பு தனியிடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

MUST READ