spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவிற்றுத்தீா்ந்த விமான டிக்கெட் – பயணிகள் தவிப்பு

விற்றுத்தீா்ந்த விமான டிக்கெட் – பயணிகள் தவிப்பு

-

- Advertisement -

பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.விற்றுத்தீா்ந்த விமான டிக்கெட் – பயணிகள் தவிப்புசென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் இல்லாததால் பயணிகள் தவிப்பு. தூத்துக்குடி, மதுரை விமானங்களுக்கு டிக்கெட் இல்லாததால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் டிக்கெட்டில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வழக்கமான கட்டணம் ரூ.3,889, இன்று ரூ.9,797 வசூல் செய்யப்படுகிறது. பெங்களூா் வழியாக இணைப்பு விமானத்தில் திருவனந்தபுரம்செல்ல ரூ.15,218 வசூல்  பயண நேரமும் அதிகமாகிறது. சென்னையிலிருந்து கோவை செல்லும் அனைத்து விமானங்களிலும் இருந்து டிக்கெட் விற்றுத் தீா்ந்தது.

இதனால் இணைப்பு விமானங்களில் கோவை செல்ல ரூ.3,499 கட்டணத்துக்கு ரூ.16,500 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் இயக்கும் விமானங்களை விமான நிறுவனம் குறைத்ததே இதற்கு காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை, மதுரைக்கு சென்னையிலிருந்து, தினமும் 16 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

we-r-hiring

ஏ.டி.ஆா் சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக பெரிய விமானங்கள் இயக்குவதாக கூறி விமான எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டது. திருச்சிக்கு வருகை புறப்பாடு என 8 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது  நான்காக குறைத்துவிட்டது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, இயக்கப்பட்ட விமானங்களை, சில நிறுவனங்கள் காரணமின்றி நிறுத்திவிட்டன.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் – ரயன் ஹாலிடே

 

MUST READ