பாஜக- அதிமுக கூட்டணி சுமூகமாக இருக்கிறது: சி.டி.ரவி
அதிமுக கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டணி சுமூகமாக இருக்கிறது என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,பாஜகவின் மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி பாஜகவின் பேச்சாளர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்தக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த பாஜகவின் மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகா மேகதாது விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் கேளுங்கள், நான் இந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்காக வந்திருக்கிறேன். அதிமுக கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டில் எங்களுடைய கூட்டணி சுமூகமாக இருக்கிறது. எத்தனை சீட்டுகள் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.


