Homeசெய்திகள்சென்னைசென்னையில் 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்

சென்னையில் 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்

-

- Advertisement -

சென்னையில் கடந்த 2 நாட்களில் கனமழை காரணமாக 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில், 436 இடங்களில் முழுமையாக மழைநீர் அகற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய  103 இடங்களில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், சென்னையில் கனமழை காரணமாக கடந்த 2 நாட்களில் 54 மரங்கள் விழந்த நிலையில், அவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னை மாநகரில் கனமழை காரணமாக 27 இடங்களில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும்,  அவற்றில் சுமார் 944 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதேபோல், சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் 5,657 பேர் பயனடைந்து உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

MUST READ